பனிக்காலத்தில் படுத்தும் சளி, இருமல், மூச்சுத்திணறல்; மருத்துவர் கூறும் இந்த ஒரு சூப் மட்டும் போதும்!
பனிக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், முச்சுத்திணறலுக்கு தேவையான சூப் செய்வது குறித்து விளக்கும் மருத்துவர்.
சளித்தொல்லை
சளி என்பது மூக்கு மற்றும் தொண்டையை பாதுகாக்கிறது. இது அதிகளவில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதில்லை. பொதுவாக வைரஸ் கிருமிகளே இந்த தொற்றுக்கு காரணமாகின்றன. அதிகமாகிவிட்டால் அது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. பெரியவர்களுக்கு ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறையும், குழந்தைகளுக்கு அடிக்கடியும் சளித்தொற்றுகள் ஏற்படுகிறது. பெரும்பாலும் சளித்தொற்று 7 முதல் 10 நாட்கள் வரை இருக்கும். புகைப்பவர்களுக்கு இது கூடுதலான நாட்கள் இருக்கும். பெரும்பாலும் சளிக்கு மருத்துவ கவனம் தேவையில்லை. ஆனால் அறிகுறிகள் குறையாமல் மோசமடைந்து சென்றால், அதற்கு உடனடியாக நீங்கள் மருத்துவர்களை அணுகவேண்டும். மூக்கு மற்றும் தொண்டையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு கிருமிகள் காரணமாகின்றன. அவை சுவாச மண்டலத்தின் மேற்புறத்தில் தொற்றுக்களை ஏற்படுகிறது.
அறிகுறிகள்
வைரஸ் தொற்று ஏற்பட்ட 1 முதல் 3 நாட்களில் அறிகுறிகள் தோன்றும். அறிகுறிகள் ஒருவருக்கொருவர் மாறுபடும்.
சளி ஒழுகுதல்
தொண்டையில் கரகரப்பு, புண், தொண்டை கட்டிக்கொள்வது
இருமல்
தும்மல்
உடல் நலன் பாதிக்கப்படுவது
உடல் வலி மற்றும் தலைவலி
குறைவான காய்ச்சல்
மூக்கில் உள்ள சளி, கெட்டியாக வாய்ப்பு ஏற்படும். அது மஞ்சள் அல்லது பச்சை நிறத்துக்கு மாறும். இவையனைத்து வழக்கமானது. இவை ஏற்பட்டால் உங்களுக்கு பாக்டீரியாக்கள் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம் கிடையாது.
எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?
பெரும்பாலும் உங்களுக்கு மருத்துவ கவனம் தேவையில்லை. ஆனால் பின்வரும் பிரச்னைகள் ஏற்பட்டால், மருத்துவரிடம் செல்லவேண்டும்.
இந்த அறிகுறிகள் மோசமானால், சரியாகவில்லையென்றால் உடனே மருத்துவரிடம் செல்லவேண்டும்.
101.3 டிகிரி காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
காய்ச்சல் முடிந்து மீண்டும் காய்ச்சல் வந்தால் மருத்துவ கவனம் தேவை.
மூச்சுத்திணறல், மூச்சு வாங்குவது, வீசிங், தொண்டையில் கடும் புண், தலைவலி, சைனஸ் வலி ஆகியவை ஏற்பட்டால் மருத்துவரை அணுகவேண்டும்.
குழந்தைகளுக்கு
குழந்தைகளுக்கு சளி ஏற்பட்டால் பெரும்பாலும் மருத்துவ உதவி தேவையில்லை. ஆனால் கீழ்கண்ட பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
பிறந்த குழந்தைகள் முதல் 12 வாரம் வரையில் உள்ள குழந்தைகளுக்கு 100.4 டிகிரி காய்ச்சல் ஏற்பட்டால்,
காய்ச்சல் அதிகரித்தால், எந்த வயது குழந்தைக்கும் 3 நாளைக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால்,
அறிகுறிகள் தீவிரமானால், தலைவலி, தொண்டை வலி மற்றும் இருமல் ஏற்பட்டால்,
மூச்சுத்திணறல் அல்லது வீசிங் ஏற்பட்டால்,
காது வலி வந்தால்,
சாப்பிடப்பிடிக்காமல் போனால்,
மயக்கம், சோர்வு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவேண்டும்.
பனிக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், மூச்சுத்திணறலைப் போக்க நீங்கள் வீட்டிலேயே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் கூறுகிறார். அதற்கு அவர் ஒரு சூப் ரெசிபியை பகிர்கிறார்.
தேவையான பொருட்கள்
தூதுவளை - ஒரு கைப்பிடி அளவு
துளசி இலை - ஒரு கைப்பிடி அளவு
ஓமவல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
வெற்றிலை – 2
சுக்கு – அரை இன்ச்
மிளகு – ஒரு ஸ்பூன்
திப்பிலி – 4
பூண்டு – 4
சின்ன வெங்காயம் – 4
தக்காளி – 1
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
செய்முறை
துளசி, ஓமவல்லி, தூதுவளை, வெற்றிலை, சுக்கு, மிளகு, திப்பிலி, பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள் என அனைத்தையும் நன்றாக மிக்ஸி ஜாரில் அல்லது அம்மியில் அரைத்து 4 முதல் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி பின்னர் உப்பு வேண்டிய அளவு எடுத்து சேர்த்து கொதிக்க வைத்து சூப்பாக செய்து வடிகட்டி காலை வெறும் வயிற்றில் அல்லது இரவில் அல்லது உகந்த நேரத்தில் குடிக்கலாம். இந்த அளவு 3 முதல் 4 பேருக்கு ஏற்றது. இது சுவையானதாகவும் இருக்கும். இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கும் கொடுக்கலாம். வீட்டில் உள்ள அனைவரும் பருகலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்