Cold Remedy : சளி, இருமலைப்போக்க தினமும் ஒரு பானம் எடுக்கலாம்; அது என்னவென்று மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cold Remedy : சளி, இருமலைப்போக்க தினமும் ஒரு பானம் எடுக்கலாம்; அது என்னவென்று மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்!

Cold Remedy : சளி, இருமலைப்போக்க தினமும் ஒரு பானம் எடுக்கலாம்; அது என்னவென்று மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 27, 2025 12:54 PM IST

Cold Remedy : சளி, இருமலைப்போக்க தினமும் ஒரு பானம் எடுக்கலாம் எடுக்கவேண்டிய பானம் குறித்து மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்.

Cold Remedy : சளி, இருமலைப்போக்க தினமும் ஒரு பானம் எடுக்கலாம்; அது என்னவென்று மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்!
Cold Remedy : சளி, இருமலைப்போக்க தினமும் ஒரு பானம் எடுக்கலாம்; அது என்னவென்று மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்!

இயற்கை மருத்துவர் தீபா புதுயுகம் டிவிக்கு அளித்த பேட்டியில் சளி, இருமலுக்கான நிவாரணம் என்னவென்பது குறித்து கூறுகிறார். அவர் கூறுகையில், இந்த எளிய மருத்துவ முறைடியை நீங்கள் வீட்டிலேயே எளிதாக செய்யலாம் என்கிறார்.

அது என்னவென்று பாருங்கள். இதுகுறித்து அவர் கூறுகையில்,

சளி, இருமல், சளி ஒழுகுவது என பிரச்னைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட இந்த பானத்தைப் பருகலாம்.

தேவையான பொருட்கள்

தண்ணீர் – ஒரு டம்ளர்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகுத்தூள் – கால் ஸ்பூன்

(ஏலக்காய் மற்றும் கிராம்பை இடித்து வைத்துக்கொள்ளவேண்டும்)

துளசி – ஒரு கைப்பிடியளவு

ஓமவல்லி – ஒரு கைப்பிடியளவு

செய்முறை

ஒரு டம்ளர் தண்ணீரில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், ஏலக்காய், கிராம்பு, துளசி, ஓமவல்லி என அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு அதை வடிகட்டி நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து 40 மில்லி லிட்டர் பெரியவர்களும், 20 மில்லி லிட்டர் குழந்தைகளும் குடித்துக்கொண்டு வரலாம்.

இதை தினமும் செய்யும்போது சளி பிடிக்காமல் இருக்கும். ஆனால், சளி வந்துவிட்டாலும், இதையே மூன்று வேளையாக பருகினால் போதும். இது உங்கள் உடலில் எந்த தொற்றுக்களும் ஏற்படாமல் காக்கும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.