Cold Remedy : ஆஸ்துமா, நெஞ்சு சளி, இருமலில் இருந்து நிவாரணம்; நோய் எதிர்ப்பையும் அதிகரிக்கும்! இந்த ஒன்று மட்டும் போதும்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cold Remedy : ஆஸ்துமா, நெஞ்சு சளி, இருமலில் இருந்து நிவாரணம்; நோய் எதிர்ப்பையும் அதிகரிக்கும்! இந்த ஒன்று மட்டும் போதும்

Cold Remedy : ஆஸ்துமா, நெஞ்சு சளி, இருமலில் இருந்து நிவாரணம்; நோய் எதிர்ப்பையும் அதிகரிக்கும்! இந்த ஒன்று மட்டும் போதும்

Priyadarshini R HT Tamil
Jun 30, 2024 01:10 PM IST

Cold Remedy : ஆஸ்துமா, நெஞ்சு சளி, இருமலில் இருந்து நிவாரணம் பெறலாம். நோய் எதிர்ப்பையும் அதிகரிக்க இந்த ஒன்று மட்டும் போதும். இதை நீங்கள் தினமும் செய்யும்போது உங்களுக்கு அது நன்மை தரும்.

Cold Remedy : ஆஸ்துமா, நெஞ்சு சளி, இருமலில் இருந்து நிவாரணம்; நோய் எதிர்ப்பையும் அதிகரிக்கும்! இந்த ஒன்று மட்டும் போதும்
Cold Remedy : ஆஸ்துமா, நெஞ்சு சளி, இருமலில் இருந்து நிவாரணம்; நோய் எதிர்ப்பையும் அதிகரிக்கும்! இந்த ஒன்று மட்டும் போதும்

இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

தேவையான பொருட்கள்

வெற்றிலை – 1

இஞ்சி – ஒரு இன்ச்

தேன் – ஒரு ஸ்பூன்

செய்முறை

வெற்றிலை மற்றும் இஞ்சியை அரைத்து சாறு பிழிந்து, அதில் தேன் கலந்து பருகினால், ஆஸ்துமா, நெஞ்சு சளி மற்றும் இருமல் என அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

மழைக்காலங்களில் வாரம் ஒருமுறையும், சளி ஏற்படும்போது மூன்று முதல் 5 நாட்களும் இதை செய்யவேண்டும்.

அதே வெற்றிலையைப்பயன்படுத்தி நீங்கள் நோய் எதிர்ப்பை அதிகரிக்க முடியும். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

வெற்றிலை – 1

சோம்பு – கால் ஸ்பூன்

உலர்ந்த திராட்சை – 10

மிளகு – 4

செய்முறை

வெற்றிலையில் சோம்பு, உலர்ந்த திராட்சை, மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டால்போதும், உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதை தினமும் மதிய உணவு சாப்பிட்டபின் எடுத்துக்கொள்ளவேண்டும். அது உணவை செரிக்க வைக்கவும் உதவும்.

வெற்றிலையில் உள்ள நன்மைகள் மற்றும் சத்துக்கள்

100 கிராம் வெற்றிலையில் 1.3 மைக்ரோகிராம் அயோடின் உள்ளது. 4.6 மைக்ரோகிராம் பொட்டாசியம், 2.9 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ, 13 மைக்ரோகிராம் வைட்டமின் பி1, 0.89 மைக்ரோகிராம் நிக்கோடினிக் அமிலம் ஆகியவை உள்ளது.

ஆரோக்கியமான உணவுகள் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கின்றன. வெற்றிலையும் அதில் ஒன்றுதான். இதில் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

இந்திய கலாச்சாரத்தில் வெற்றிலை என்பது நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் உணவு வகைகளுள் ஒன்று. இது ஒரு சிறிய இலைதான். இதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இது பல மில்லியன் இந்தியர்களின், சுவை அரும்புகளையும், இதயத்தையும் கொள்ளை கொண்டது.

இந்தியாவில், திருமணங்கள் முதல் திருவிழாக்கள் வரை வெற்றிலை என்பது முக்கியமான ஒன்றாகும். இது இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்தது. இது சுவை நிறைந்தது மட்டுமல்ல, ஆரோக்கியமும் நிறைந்தது.

ஆராய்ச்சிகளின் அடிப்படையில் 15 முதல் 20 மில்லியன் வரை இந்தியர்கள், வெற்றிலையை உட்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் 55,000 எக்டேர் வரை பயிரிடப்படுகிறது. இது 9,000 மில்லியன் ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறுகிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 66 சதவீதம் வரை மேற்கு வங்கத்தில் இருந்து பெறப்படுகிறது.

வெற்றிலை செரிமானத்தை அதிகரித்து, மலச்சிக்கலைப்போக்குகிறது

பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது

செரிமான மண்டலத்துக்கு நன்மை கொடுக்கிறது

மனஅழுத்தத்தைப் போக்குகிறது

நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது

வெற்றிலையை எடுத்துக்கொள்ளும் முறைகள்

காலையல் வெறும் வயிற்றில் மென்று உண்ணலாம். நீங்கள் மனஅழுத்தத்தில் இருக்கும்போது, இதை சாப்பிடலாம். இதில் உள்ள ஃபினோலிக் உட்பொருள், உங்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

வெற்றிலை உங்களுக்கு மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. இதை ஓரிரவு தண்ணீரில் ஊறவிட்டு, காலையில் வடிகட்டி, அந்த தண்ணீரை மட்டும் பருகவேண்டும். இது மலச்சிக்கலைப் போக்குகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.