தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cold Home Remedy : கர்கர் என்ற நெஞ்சுசளியை அடித்து வெளியேற்ற வேண்டுமா? வெற்றிலையுடன் இது போதும்!

Cold Home Remedy : கர்கர் என்ற நெஞ்சுசளியை அடித்து வெளியேற்ற வேண்டுமா? வெற்றிலையுடன் இது போதும்!

Priyadarshini R HT Tamil
Jun 18, 2024 10:12 AM IST

Cold Home Remedy : கர்கர் என்ற நெஞ்சுசளியை அடித்து வெளியேற்ற வேண்டுமா? வெற்றிலையுடன் மிளகு, கிராம்பு மற்றும் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள்.

Cold Home Remedy : கர்கர் என்ற நெஞ்சுசளியை அடித்து வெளியேற்ற வேண்டுமா? வெற்றிலையுடன் இது போதும்!
Cold Home Remedy : கர்கர் என்ற நெஞ்சுசளியை அடித்து வெளியேற்ற வேண்டுமா? வெற்றிலையுடன் இது போதும்!

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

தேவையான பொருட்கள்

வெற்றிலை – 1

ட்ரெண்டிங் செய்திகள்

நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் – ஒரு ஸ்பூன்

செய்முறை

வெற்றிலையில் மிளகு மற்றும் கிராம்பின் மொட்டுப்பகுதியை மட்டும் கிள்ளி எடுத்துவிட்டு, அடிப்பகுதியை வைத்து, நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டால், அது கர்கர் என சத்தம் கேட்டுகுமளவுக்கு இருக்கும் நெஞ்சு சளியையும் போக்கும். நெஞ்சில் உள்ள மொத்த சளியும் கரைந்து வந்துவிடும்.

சளி அதிகம் இருக்கும்போது மட்டும் கிராம்பு சேர்த்தால் போதும். இல்லாவிட்டால் கிராம்பு இல்லாமல் கூட வெற்றிலையை சாப்பிடலாம். நாட்டுச்சர்க்கரை அல்லது தேனுக்கு பதில் ரோஜா குல்கந்தைக் கூட பயன்படுத்தலாம்.

வெற்றிலையின் காம்பு மற்றும் நுனியை மட்டும் கிள்ளி எடுத்துவிட்டு, நன்றாக தண்ணீரில் அலசி சுத்தம் செய்துகொள்ளவேண்டும்.

வெற்றிலையில் உள்ள நன்மைகள் மற்றும் சத்துக்கள்

100 கிராம் வெற்றிலையில் 1.3 மைக்ரோகிராம் அயோடின் உள்ளது. 4.6 மைக்ரோகிராம் பொட்டாசியம், 2.9 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ, 13 மைக்ரோகிராம் வைட்டமின் பி1, 0.89 மைக்ரோகிராம் நிக்கோடினிக் அமிலம் ஆகியவை உள்ளது.

ஆரோக்கியமான உணவுகள் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கின்றன. வெற்றிலையும் அதில் ஒன்றுதான். இதில் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

இந்திய கலாச்சாரத்தில் வெற்றிலை என்பது நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் உணவு வகைகளுள் ஒன்று. இது ஒரு சிறிய இலைதான். இதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இது பல மில்லியன் இந்தியர்களின், சுவை அரும்புகளையும், இதயத்தையும் கொள்ளை கொண்டது.

இந்தியாவில், திருமணங்கள் முதல் திருவிழாக்கள் வரை வெற்றிலை என்பது முக்கியமான ஒன்றாகும். இது இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்தது. இது சுவை நிறைந்தது மட்டுமல்ல, ஆரோக்கியமும் நிறைந்தது.

ஆராய்ச்சிகளின் அடிப்படையில் 15 முதல் 20 மில்லியன் வரை இந்தியர்கள், வெற்றிலையை உட்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் 55,000 எக்டேர் வரை பயிரிடப்படுகிறது. இது 9,000 மில்லியன் ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறுகிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 66 சதவீதம் வரை மேற்கு வங்கத்தில் இருந்து பெறப்படுகிறது.

வெற்றிலை செரிமானத்தை அதிகரித்து, மலச்சிக்கலைப்போக்குகிறது.

பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

செரிமான மண்டலத்துக்கு நன்மை கொடுக்கிறது.

மனஅழுத்தத்தைப் போக்குகிறது.

நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது.

இத்தனை ஆரோக்கிய நன்மைகளை உணவில் சேர்த்து உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

வெற்றிலையை எடுத்துக்கொள்ளும் முறைகள்

காலையல் வெறும் வயிற்றில் மென்று உண்ணலாம்.

நீங்கள் மனஅழுத்தத்தில் இருக்கும்போது, இதை சாப்பிடலாம். இதில் உள்ள ஃபினோலிக் உட்பொருள், உங்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

வெற்றிலை உங்களுக்கு மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. இதை ஓரிரவு தண்ணீரில் ஊறவிட்டு, காலையில் வடிகட்டி, அந்த தண்ணீரை மட்டும் பருகவேண்டும். இது மலச்சிக்கலைப் போக்குகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.