Cold Home Remedy : குழந்தைகள் கர்கர் என்று மூச்சு விடுகிறார்களா? நெஞ்சில் சளி கட்டிக்கொண்டுள்ளதா? இதோ எளிய தீர்வு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cold Home Remedy : குழந்தைகள் கர்கர் என்று மூச்சு விடுகிறார்களா? நெஞ்சில் சளி கட்டிக்கொண்டுள்ளதா? இதோ எளிய தீர்வு!

Cold Home Remedy : குழந்தைகள் கர்கர் என்று மூச்சு விடுகிறார்களா? நெஞ்சில் சளி கட்டிக்கொண்டுள்ளதா? இதோ எளிய தீர்வு!

Priyadarshini R HT Tamil
Updated Aug 01, 2024 02:13 PM IST

Cold Home Remedy : குழந்தைகள் கர்கர் என்று மூச்சு விடுகிறார்களா? நெஞ்சில் சளி கட்டிக்கொண்டுள்ளதா? இதோ வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய தீர்வு. இதோ கண்டுபிடித்து பலன்பெறுங்கள்.

Cold Home Remedy : குழந்தைகள் கர்கர் என்று மூச்சு விடுகிறார்களா? நெஞ்சில் சளி கட்டிக்கொண்டுள்ளதா? இதோ எளிய தீர்வு!
Cold Home Remedy : குழந்தைகள் கர்கர் என்று மூச்சு விடுகிறார்களா? நெஞ்சில் சளி கட்டிக்கொண்டுள்ளதா? இதோ எளிய தீர்வு!

இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

மழைக்காலம் துவங்கிவிட்டது. குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் என்று பற்றிப் பரவத்துவங்கிவிட்டது. இந்த மழைக்கால சவால்களுள் ஒன்றுதான் இந்த சளி. இது நெஞ்சுப்பகுதியில் கட்டிகொண்டால் நீங்கள் மூச்சுவிட அதிகம் சிரமப்படுவீர்கள்.

மேலும் குழந்தைகளுக்கு தாங்கவே முடியாது. எனவே மூன்று வயதுக்கு மேலே உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய குறிப்பை பின்பற்றி பயன்பெறலாம். இதற்கு குறைவான பொருட்களே போதுமானது. குறிப்பாக வீட்டில் உள்ள பொருட்களே கூட போதுமானதுதான்.

தேவையான பொருட்கள்

ஓமம் – ஒரு ஸ்பூன்

துளசி - 10 இலைகள்

தேன் – ஒரு ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் ஓமத்தை வறுக்கவேண்டும். அதில் இரண்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி அது ஒரு டம்ளராக சுண்டும் வரை கொதிக்கவிடவேண்டும். அது நன்றாக சுண்டியதும் அதில் துளிசி இலைகளை சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்துவிடவேண்டும்.

அதை வடிகட்டி, அதில் தேன் கலந்து இளஞ்சூட்டில் பருகினால், நெஞ்சில் உள்ள சளி கரைந்து ஓடிவிடும். இதை மூன்று வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம். 

மூன்று வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். இதை மூன்று முதல் 5 நாட்கள் வரை கொடுக்கவேண்டும். அதற்கு மேல் தேவைப்பட்டால் ஒரு வாரம் வரை எடுத்துக்கொள்ளலாம். 

அதற்கு மேலும் சளி சரியாகவிட்டால் மருத்துவரிம் செல்வதுதான் நல்லது. எனவே, நீங்கள் சாப்பிடும் மருந்துகளை நிறுத்திவிடவேண்டாம். ஆனால் பொதுவாகவே சளிக்கு எந்த மருந்தும் எடுக்கத்தேவையில்லை. இதுபோன்ற இயற்கை மருத்துவங்களே போதுமானது.

ஆனால், தாங்கமுடியாத சளி, நாள்பட்ட சளி இவற்றிற்கெல்லாம் மருத்துவரிடம் அணுகி தேவையான மருந்தை பெறுவதுதான் சரியானது. எனவே மழைக்காலத்தில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது.

இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள். இதுபோன்ற எளிய மருத்துவக்குறிப்புக்களை தெரிந்துகொள்ள நீங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9