Cold Herbal Medicine : கடும் சளியாக இருந்தாலும், அடித்து வெளியேற்ற வேண்டுமா? இதோ இந்த வீட்டு வைத்தியம் மட்டும் போதும்!
Cold Herbal Medicine : கடும் சளியாக இருந்தாலும், அடித்து வெளியேற்ற வேண்டுமா? இதோ இந்த வீட்டு வைத்தியம் உங்களுக்கு உதவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பின்பற்றலாம்.
சளித்தொல்லை
சளி என்பது மூக்கு மற்றும் தொண்டையை பாதிக்கிறது. இது அதிகளவில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதில்லை. பொதுவாக வைரஸ் கிருமிகளே இந்த தொற்றுக்கு காரணமாகின்றன. அதிகமாகிவிட்டால் அது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
பெரியவர்களுக்கு ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறையும், குழந்தைகளுக்கு அடிக்கடியும் சளித்தொற்றுகள் ஏற்படுகிறது.
பெரும்பாலும் சளித்தொற்று 7 முதல் 10 நாட்கள் வரை இருக்கும். புகைப்பவர்களுக்கு இது கூடுதலான நாட்கள் இருக்கும். பெரும்பாலும் சளிக்கு மருத்துவ கவனம் தேவையில்லை. ஆனால் அறிகுறிகள் குறையாமல் மோசமடைந்து சென்றால், அதற்கு உடனடியாக நீங்கள் மருத்துவர்களை அணுகவேண்டும்.
மூக்கு மற்றும் தொண்டையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு கிருமிகள் காரணமாகின்றன. அவை சுவாச மண்டலத்தின் மேற்புறத்தில் தொற்றுக்களை ஏற்படுகிறது.
அறிகுறிகள்
வைரஸ் தொற்று ஏற்பட்ட 1 முதல் 3 நாட்களில் அறிகுறிகள் தோன்றும். அறிகுறிகள் ஒருவருக்கொருவர் மாறுபடும்.
சளி ஒழுகுதல்
தொண்டையில் கரகரப்பு, புண், தொண்டை கட்டிக்கொள்வது
இருமல்
தும்மல்
உடல் நலன் பாதிக்கப்படுவது
உடல் வலி மற்றும் தலைவலி
குறைவான காய்ச்சல்
மூக்கில் உள்ள சளி, கெட்டியாக வாய்ப்பு ஏற்படும். அது மஞ்சள் அல்லது பச்சை நிறத்துக்கு மாறும். இவையனைத்து வழக்கமானது. இவை ஏற்பட்டால் உங்களுக்கு பாக்டீரியாக்கள் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம் கிடையாது.
எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?
பெரும்பாலும் உங்களுக்கு மருத்துவ கவனம் தேவையில்லை. ஆனால் பின்வரும் பிரச்னைகள் ஏற்பட்டால், மருத்துவரிடம் செல்லவேண்டும்.
இந்த அறிகுறிகள் மோசமானால், சரியாகவில்லையென்றால் உடனே மருத்துவரிடம் செல்லவேண்டும்.
101.3 டிகிரி காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
காய்ச்சல் முடிந்து மீண்டும் காய்ச்சல் வந்தால் மருத்துவ கவனம் தேவை.
மூச்சுத்திணறல், மூச்சு வாங்குவது, வீசிங், தொண்டையில் கடும் புண், தலைவலி, சைனஸ் வலி ஆகியவை ஏற்பட்டால் மருத்துவரை அணுகவேண்டும்.
குழந்தைகளுக்கு
குழந்தைகளுக்கு சளி ஏற்பட்டால் பெரும்பாலும் மருத்துவ உதவி தேவையில்லை. ஆனால் கீழ்கண்ட பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
பிறந்த குழந்தைகள் முதல் 12 வாரம் வரையில் உள்ள குழந்தைகளுக்கு 100.4 டிகிரி காய்ச்சல் ஏற்பட்டால்,
காய்ச்சல் அதிகரித்தால், எந்த வயது குழந்தைக்கும் 3 நாளைக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால்,
அறிகுறிகள் தீவிரமானால், தலைவலி, தொண்டை வலி மற்றும் இருமல் ஏற்பட்டால்,
மூச்சுத்திணறல் அல்லது வீசிங் ஏற்பட்டால்,
காது வலி வந்தால்,
சாப்பிடப்பிடிக்காமல் போனால்,
மயக்கம், சோர்வு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவேண்டும்.
கடும் சளியையும் அடித்து வெளியேற்றி, இருமலைப்போக்க வேண்டுமா? இதோ அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வீட்டு வைத்தியத்தை மட்டும் முயற்சி செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்
ஓமவல்லி இலைகள் – 2
துளசி இலைகள் – ஒரு கைப்பிடியளவு
சின்ன வெங்காயம் – 6
இந்துப்பு – கால் ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை
எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்
செய்முறை
துளசி, ஓமவல்லி, இந்துப்பு, சின்ன வெங்காயம் இது நான்கையும் மட்டும் உரலில் போட்டு நன்றாகத்தட்டி சாறு எடுத்துக்கொள்ளவேண்டும்.
அந்த சாறில் மிளகுத்தூள், எலுமிச்சை சாறு கலந்து பருகவேண்டும். இது குளிர் காலத்தில் ஏற்படும் சளி மற்றும் இருமலை முற்றிலும் போக்கிவிடும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது நல்ல பலனைத்தரும். குழந்தைகளுக்கு தரும்போது, இதில் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் இதன் காரத்தன்மையால் அவர்கள் பருக மாட்டார்கள்.
இதுபோன்ற எண்ணற்ற வீட்டு வைத்திய குறிப்புக்களை பெற தொடர்ந்து ஹெச்.டி தமிழுடன் இணைந்திருங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்