கில்மா பிரியாணி : கோயமுத்தூர் ஸ்பெஷல் கில்மா பிரியாணி; பெயரே ஒரு மாதிரி உள்ளதா? செய்தால் டேஸ்ட் அசத்தும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கில்மா பிரியாணி : கோயமுத்தூர் ஸ்பெஷல் கில்மா பிரியாணி; பெயரே ஒரு மாதிரி உள்ளதா? செய்தால் டேஸ்ட் அசத்தும்!

கில்மா பிரியாணி : கோயமுத்தூர் ஸ்பெஷல் கில்மா பிரியாணி; பெயரே ஒரு மாதிரி உள்ளதா? செய்தால் டேஸ்ட் அசத்தும்!

Priyadarshini R HT Tamil
Updated May 06, 2025 09:36 AM IST

கில்மா பிரியாணி : அதுதான் கில்மா பிரியாணி. இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள். இதைச் செய்வதற்கு முதலில் பிரியாணியை தயாரித்துக்கொள்ளவேண்டும்.

கில்மா பிரியாணி : கோயமுத்தூர் ஸ்பெஷல் கில்மா பிரியாணி; பெயரே ஒரு மாதிரி உள்ளதா? செய்தால் டேஸ்ட் அசத்தும்!
கில்மா பிரியாணி : கோயமுத்தூர் ஸ்பெஷல் கில்மா பிரியாணி; பெயரே ஒரு மாதிரி உள்ளதா? செய்தால் டேஸ்ட் அசத்தும்!

பிரியாணி செய்வது எப்படி?

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், ஸ்டார் சோம்பு சேர்த்து பொரிந்தவுடன், பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமானவுடன், தக்காளி சேர்த்து மசித்துவிட்டு, இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ளவேண்டும். புதினாவையும் சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வந்தவுடன், மிளகாய்த் தூள் மற்றும் பிரயாணி மசாலா சேர்த்து வதக்கவேண்டும். அடுத்து ஊறவைத்த அரிசி மற்றும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வெந்தவுடன் தம்போட்டு இறக்கி தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். இந்த பிரியாணி நன்றாக ஆறிவிடவேண்டும். எனவே இந்த பிரியாணியை நீங்கள் காலையிலேயே செய்து வைத்துவிட்டு மதியம் கில்மா பிரியாணியை தயாரித்துக்கொள்ளுங்கள். சூடான பிரியாணி சேர்த்து கிளறினால், அது மசிந்துவிடும், பிரியாணி பொலபொலவென இருக்காது.

சிக்கன் 65 செய்ய தேவையான பொருட்கள்

• போன்லெஸ் சிக்கன் – கால் கிலோ

• உப்பு - தேவையான அளவு

• எலுமிச்சை பழச்சாறு – அரைப்பழம்

• சிக்கன் 65 மசாலா – ஒரு ஸ்பூன்

• இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

• எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் போன்லெஸ் சிக்கனை சேர்த்து அதில் உப்பு, எலுமிச்சை பழச்சாறு, 65 மசாலா மற்றும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.

2. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் ஊறிய சிக்கன் துண்டுகளை சேர்த்து பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். பொரித்தவற்றை சிறு துண்டுகளாக நறுகிக்கொள்ள வேண்டும்.

பிரியாணி செய்வது எப்படி?

• எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• பெரிய வெங்காயம் – 1

• உப்பு – தேவையான அளவு

• முட்டை – 2 முதல் 4 வரை

• இஞ்சி – பூண்டு விழுது – அரை ஸ்பூன்

• மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்

• மல்லித் தூள் – அரை ஸ்பூன்

• கரம் மசாலாத் தூள் – அரை ஸ்பூன்

• மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை

  1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவேண்டும்.

2. அது வதங்கிய பின்னர் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ளவேண்டும். பச்சை வாசம் போனவுடன், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

3. அடுத்து சிறிதளவு மட்டும் உப்பு சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் சிக்கன் 65 மற்றும் பிரியாணி இரண்டிலும் உப்பு சேர்த்துள்ளோம். எனவே இங்கு அளவாக உப்பு சேர்த்துக்கொள்ளவேண்டும்.

4. அடுத்து முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக வறத்துக்கொள்ளவேண்டும். அடுத்து பிரியாணி மற்றும் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பர் சுவையான கில்மா பிரியாணி தயார்.

இதற்கு ஒரு ரைத்தா மட்டுமே போதும். சிக்கன் 65 துண்டுகள் இதில் இருப்பதால் அதை மட்டுமே தொட்டுக்கொண்டு சாப்பிட்டு விடலாம். இது சூப்பர் சுவையானதாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். மதியம் செய்த குஸ்கா மிஞ்சி விட்டாலும் நீங்கள் இதுபோல் செய்து இரவு சாப்பிடலாம். ஒருமுறை ருசித்தால் அடிக்கடி செய்துவிடுவீர்கள். செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.