தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cognitive Function : உங்கள் அறிவாற்றலை பெருக்க வேண்டுமா? இதோ இந்த வைட்டமின்களை உணவில் சேருங்கள்!

Cognitive Function : உங்கள் அறிவாற்றலை பெருக்க வேண்டுமா? இதோ இந்த வைட்டமின்களை உணவில் சேருங்கள்!

Priyadarshini R HT Tamil
Apr 29, 2024 04:00 PM IST

உங்கள் அறிவாற்றலை பெருக்க உதவும் வைட்டமின்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Cognitive Function : உங்கள் அறிவாற்றலை பெருக்க வேண்டுமா? இதோ இந்த வைட்டமின்களை உணவில் சேருங்கள்!
Cognitive Function : உங்கள் அறிவாற்றலை பெருக்க வேண்டுமா? இதோ இந்த வைட்டமின்களை உணவில் சேருங்கள்! (Unsplash)

ட்ரெண்டிங் செய்திகள்

வைட்டமின் பி12

வைட்டமின் பி12 உங்கள் அறிவாற்றலுடன் தொடர்புடையாது. அறிவாற்றல் இழப்பு, நினைவாற்றல் இழப்பு மற்றும் சில நரம்பியல் குறைபாடுகளுக்கு அந்த வைட்டமின் குறைபாடு காரணமாகிறது. எனவே உங்கள் மூளையின் சிறப்பான செயல்பாட்டுக்கு நீங்கள் வைட்டமின் பி12 ஐ கட்டாயம் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆட்டிறைச்சி, மீன், பால்பொருட்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றில் வைட்டமின் பி12 குறைபாடு உள்ளது. இவற்றை எடுத்துக்கொள்ளலாம் அல்லது சப்ளிமென்ட்களாக அதை எடுத்துக்கொள்வது அறிவாற்றலுக்கு நல்லது.

வைட்டமின் டி

உங்கள் அறிவாற்றலுடன், வைட்டமின் டி தொடர்புடையது. உங்களின் மனநிலையையும் மாற்றுவதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. அறிவார்ந்து சிறப்பாக செயல்படுவது, மனநிலை மாற்றங்கள் மற்றும் நினைவாற்றல் இழப்பு மற்றும் டிடென்ஷியா ஆகியவற்றிற்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாகிறது. எனவே வைட்டமின் டி எடுக்க உங்களுக்கு போதிய சூரிய வெளிச்சம் தேவை அல்லது சப்னிமென்ட்களாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

வைட்டமின் இ

அறிவாற்றல் இழப்பை மெதுவாக்குவது வைட்டமின் இயில் உள்ளது. அல்சைடர் என்ற நோயை குணப்படுத்துவதுடன், வயோதிகம் தொடர்பான நினைவாற்றல் பிரச்னைகளை சரிசெய்கிறது. நட்ஸ்கள், விதைகள், காய்கறி எண்ணெய்கள், கீரை மற்றும் பருப்பு வகைகளில் வைட்டமின் இ சது நிறைந்துள்ளது. அதின தேவைக்கு சப்ளிமெண்ட்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின் சி

அறிவாற்றல் திறனில் நீங்கள் சிறந்து விளங்குவதற்கு உங்களுக்கு போதிய அளவு வைட்டமின் சி எடுத்துக்கொள்வது உதவுகிறது. நினைவாற்றல் மற்றும் கவனம் ஆகியவை தேவை எனில் வைட்டமின் சி சத்து நிறைய தேவை. 

வைட்டமின் சி சத்துள்ள சிட்டரஸ் பழங்கள், ஸ்ட்ராபெரிகள், கிவி, குடை மிளகாய் மற்றும் ப்ரோகோலி எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது சப்ளிமெண்ட்களாகவும் சாப்பிடலாம்.

வைட்டமின் கே

வைட்டமின் கே நினைவாற்றல், அறிவாற்றலை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. உங்கள் அறிவை வெளிப்படுத்துவதிலும் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. கீரைகள், காய்கறிகள், ப்ரோகோலி, முளைகட்டிய தானியங்கள் மற்றும் புளிக்கவைக்கப்பட்ட உணவுகளில் வைட்டமின் கே உள்ளது. தேவைப்பட்டால் சப்ளிமெண்ட்களாக எடுத்துக்கொள்ளலாம்.

வைட்டமின் பி6

செரோடினின், டோப்பமைன் மற்றும் காபா போன்ற நியூரோ டிரான்ஸ்மிட்டர்களை உற்பத்தி செய்வதில், வைட்டமின் பி6 உதவுகிறது. இது மனநிலையை மாற்றுவதில், இந்த ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை வளர்க்கிறது. கோழி இறைச்சி, மீன், வாழைப்பழங்கள், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளில் வைட்டமின் பி6 உள்ளது. சப்ளிமெண்ட்களும் எடுத்துக்கொள்ளலாம்.

ஃபோலேட்

உங்கள் அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு போதிய அளவு ஃபோலேட் எடுக்க வேண்டும். நினைவாற்றல் மற்றும் மனநிலையை அமைதிப்படுத்துவதற்கு இந்த ஃபோலேட்கள் உதவுகிறது. கீரைகள், பச்சை காய்கறிகள், தானியங்கள், சிட்ரஸ் பழங்கள், அலகேடோ ஆகியவற்றில் ஃபோலேட் அதிகம் உள்ளது. இது வைட்டமின் பி 9 ஆகும்.

வைட்டமின் ஏ

நினைவாற்றல் திறனை வளர்ப்பதற்கு போதிய அளவு வைட்டமின் ஏ எடுத்துக்கொள்ள வேண்டும். அது நினைவாற்றலை அதிகரிப்பதுடன், கற்றல் திறனை ஊக்குவிக்கிறது. ஆட்டு ஈரல், மீன், முட்டைகள், பால் பொருட்கள் மற்றும் ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது.

தியாமைன் (வைட்டமின் பி1)

நினைவாற்றல், கவனிக்கும் திறன் அதிகரித்தல் மற்றும் ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்துக்கு போதிய அளவு தியாமைன் உட்கொள்ள வேண்டும். முழு தானியங்கள், பன்றி இறைச்சி, மீன், பீன்ஸ் மற்றும் நட்ஸ்களில் தியாமின் அதிகம் உள்ளது.

நியாசின் (வைட்டமின் பி3)

நியாசின் அறிவாற்றல் திறன் அதிகரிப்பதற்கு உதவுவதில் தொடர்புடையது. வயோதிகம் தொடர்பான நினைவாற்றல் இழப்பை குறைக்கிறது. இறைச்சி, கோழி, மீன், முழு தானியங்கள், நட்ஸ்கள் மற்றும் விதைகள் ஆகியவற்றில் நியாசின் உள்ளது. எனவே உங்கள் நினைவாற்றல் பெருகுவதற்கு இவற்றையெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்