Coffee or Tea? Which is Healthy : உங்கள் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை வழங்குவது காபியா? டீயா? காலை பானத்தில் எது சிறந்தது?
Coffee or Tea? Which is Healthy : உங்கள் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை வழங்குவது காபியா? டீயா? உங்கள் காலை பானத்தில் எது சிறந்தது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் சூடாக பருகும் பானங்களில், சுவையைவிட ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தீர்கள் என்றால் நல்லது. டீயும், காபியும் உங்களுக்கு சுவையைக் கொடுத்தாலும், அதை தினமும் பருகுவதால் உங்கள் உடலுக்கு நன்மை மற்றும் தீமைகளைக் கொண்டுவருகிறது. எது உங்களுக்கு சிறந்தது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் சுடசுட காபி அல்லது தேநீர் மற்றும் சுடசுடச் செய்திகள் அடங்கிய செய்தித்தாளுடன் உங்கள் நாளை துவங்குபவர் என்றால் நீங்கள் கட்டாயம் காபியா அல்லது டீயா எது நல்லது என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். இந்த இரு பானங்களுக்கு இடையேயும் எது மிகவும் பிரபலம் என்பதில், போட்டியே உண்டு. எது உங்களுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தருகிறதோ அதுவே சிறந்த பானம் என்று கொள்ளுங்கள்.
காபியைவிட டீயே அதிகளவில் பருகப்படுகிறது.
தேயிலையை காயவைத்து தயாரிக்கப்படும் பொடியில் இருந்து டீ தயாரிக்கப்படுகிறது. டீயை பாலில் கலந்து பருகுவது ஒருமுறை என்றால், அதை பாலில் கலக்காமல் ப்ளாக் டீயாக பருகுவது ஒருமுறை என டீ இரண்டு வகையில் கிடைக்கும்.
தேயிலைகளைப் பறித்து, காயவைத்து, நொதிக்கவைத்து, அந்த இலையில் உள்ள பாலிஃபினால்கள் என்னும் இயற்கை வேதிப்பொருட்கள் கொண்டுவரப்படுகிறது.
எனினும், கிரீன், வெள்ளை மற்றும் ஊலாங் டீக்கள் கேமலியா செடியில் இருந்து கொண்டுவரப்படுகிறது. அது வேறு ஒருமுறையில் தயாரிக்கப்படுகிறது. மூலிகை தேநீரில், விதைகள், வேர்கள், இலைகள், பழங்கள் என அனைத்தும் மற்ற தாவரங்களில் இருந்து வருகிறது.
வறுத்து அரைத்த காபி கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது காபி என்ற மற்றொரு காலை அல்லது சுறுசுறுப்பு பானம். இவை காபி பீன்கள் அல்லது காபி செரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஒரு கப் காபியில், ஆயிரக்கணக்கான இயற்கை வேதிப்பொருட்கள் உள்ளன. ஆனால் இது எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதில் உள்ளது. எப்படி கொட்டைகள் வறுக்கப்பட்டு, இடிக்கப்படுகின்றன என்பதிலும் உள்ளது. காபி அல்லது டீயில் எது சிறந்தது?
காபியின் நன்மைகள்
இதய நோய்கள், மூளை நோய், கல்லீரல் பிரச்னைகள், நீரிழவு நோய்கள் ஏற்படும் ஆபத்தை காபி பருகுவது குறைக்கிறது. இது தற்காலிகமாக ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. மூளை செல்களை பாதுகாக்கிறது. உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கிறது. ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது.
இந்த அழுத்தம் உடலின் செல்களை சேதப்படுத்துகிறது. பார்க்கின்ச்ன்ஸ் என்ற நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இந்நோய் உடலில் டோப்பமைன் அளவு குறைவதால் ஏற்படுகிறது. காபி தினமும் பருகுவதால் உங்கள் உடலில் டோப்பமைன் அளவை அது அதிகரிக்கும்.
டீ பருகுவதால் ஏற்படும் நன்மைகள்
தினமும் டீ பருகுவதால், உங்கள் உடலில் கொழுப்பு, ரத்த அழுத்தம், வீக்கம், சர்க்கரை மற்றும் கொழுப்பு வளர்சிதை ஏற்படும் ஆபத்துக்கள் குறையும். உடல் வெப்பநிலை மற்றும் இன்சுலின் சென்சிட்டிவிட்டியை இது முறைப்படுத்துகிறது. டீயில் அதிகம் உள்ள பாலிஃபினால்கள், தாவர உட்பொருட்கள், அமினோ அமிலங்கள் உங்கள் மூளைக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கிறது. மேலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கிறது.
காபி அல்லது டீ எது ஆரோக்கியம் நிறைந்தது?
டீயை மிதமான அளவு எடுத்துக்கொள்ளவேண்டும். தினமும் ஒரு கப் டீ போதுமானது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலை ஃப்ரி ராடிக்கல்களிடம் இருந்து காக்கிறது. ஃப்ரி ராடிக்கல்கள் உங்கள் உடலில் சேதம் அல்லது ஆபத்தான நோய்களை ஏற்படுத்துகிறது. அதிகளவில் காபி பருகும்போது, அது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. தலைவலி, பதற்றம், ஒய்வின்மை, படபடப்பு, உறக்கத்தில் பிரச்னைகள் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

டாபிக்ஸ்