தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Coconut Water Do You Know When To Drink Coconut Water

Coconut water: இளநீரை எப்போது குடித்தால் அதிக பலன் கிடைக்கும் தெரியுமா?

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 22, 2024 02:49 PM IST

கோடை காலம் வரும்போது தினமும் குறைந்தது ஒரு இளநீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயம் இளநீரை ஒரு நாளில் எந்த நேரத்தில் குடிப்பது ஆரோக்கிய நன்மைகளை இரட்டிப்பாக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

இளநீரை எப்போது குடிக்க வேண்டும்
இளநீரை எப்போது குடிக்க வேண்டும் (Pixabay)

ட்ரெண்டிங் செய்திகள்

இளநீரில் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. எனவே இளநீர் குடிப்பதால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மேலும், மாங்கனீஸ், வைட்டமின் சி, கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேங்காய் நீரில் ஏராளமாக உள்ளன. எனவே கோடை காலம் வரும்போது தினமும் குறைந்தது ஒரு இளநீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயம் இளநீரை ஒரு நாளில் எந்த நேரத்தில் குடிப்பது ஆரோக்கிய நன்மைகளை இரட்டிப்பாக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

உடற்பயிற்சிகளுக்கு முன்

உடற்பயிற்சி செய்வதற்கு முன் இளநீர் குடிப்பது நல்லது. இது கோடையில் நீரிழப்பு பிரச்சனைகளை தடுக்கிறது. ஆற்றலையும் தருகிறது. இதனால் வொர்க்அவுட்டிற்குப் பிறகு புரோட்டீன் ஷேக் குடிப்பதற்குப் பதிலாக, எலக்ட்ரோலைட்கள் நிறைந்த தேங்காய்த் தண்ணீரைக் குடிப்பது நல்லது. இது சோர்விலிருந்து பாதுகாக்கிறது. உடனடி ஆற்றலை வழங்குகிறது.

உணவுக்கு முன்

உணவுக்கு முன் ஒரு டம்ளர் இளநீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் ஒருவர் அதிகமாக உணவு உண்ண முடியாது. அதனால் எடை கூடும் வாய்ப்பு மிகவும் குறைவாகும். விரைவில் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த குறிப்புகளை பின்பற்றுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மேலும், இளநீர் உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. அவை இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கின்றன.

தூங்குவதற்கு முன்

இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் இளநீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது மன அழுத்தத்தைத் தடுக்கிறது. மனநல பிரச்சனைகளுக்கு இது தெய்வீக மருந்தாக செயல்படுகிறது. பதட்டத்தை குறைக்க உதவுகிறது. இதயத் துடிப்பு அதிகரிப்பதைத் தடுக்கிறது. மன அழுத்தத்தை போக்க தேங்காய் நீரை பயன்படுத்தலாம். இது உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் நன்றாக தூங்க உதவுகிறது. இளநீர் குடிப்பதால் சிறுநீர் பாதை சுத்தமாகும். இது சிறுநீரக தொற்று மற்றும் சிறுநீரக பிரச்சனைகளை தடுக்கிறது.

பலர் இரவில் மது அருந்துகின்றனர். காலையில் எழுந்தவுடன், ஹேங்கொவர் பிரச்சனையால் அவதிப்படுவார்கள். அதிகமாக மது அருந்தினால் உடலில் நீர்ச்சத்து குறையும். இது தலைவலி மற்றும் குமட்டலை ஏற்படுத்துகிறது. இந்த ஹேங்கொவரை தவிர்க்க, காலையில் எழுந்து இளநீர் குடிக்க வேண்டும். ஹேங்கொவரைக் குறைப்பதோடு, அதிக நன்மைகளும் கிடைக்கும்.

மேலே குறிப்பிட்டுள்ள நேரத்தில் இளநீர் குடிப்பது சிறந்த பலனைத் தரும். ஆரோக்கியமும் மிக நன்றாக இருக்கும். இரண்டு வாரங்களுக்கு தேங்காய் தண்ணீரை இப்படி குடித்து பாருங்கள். குழந்தைகளுக்கும் கோடையில் தினமும் இளநீர் குடிக்க வையுங்கள். இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இளநீர் குடித்த பிறகு அதற்கு உள்ளிருக்கும் வழுக்கை சாப்பிடுவது அல்சர் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். நாவில் இருக்கும் வறட்சி பிரச்சனையை தவிர்க்க உதவும்.

WhatsApp channel

டாபிக்ஸ்