Coconut Rice : மிச்சம் வைக்காமல் லன்ச் பாக்ஸை காலி செய்ய வேண்டுமா? இப்படி ஒரு சுவையில் தேங்காய் சாதம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Coconut Rice : மிச்சம் வைக்காமல் லன்ச் பாக்ஸை காலி செய்ய வேண்டுமா? இப்படி ஒரு சுவையில் தேங்காய் சாதம்!

Coconut Rice : மிச்சம் வைக்காமல் லன்ச் பாக்ஸை காலி செய்ய வேண்டுமா? இப்படி ஒரு சுவையில் தேங்காய் சாதம்!

Priyadarshini R HT Tamil
Jul 08, 2024 02:26 PM IST

Coconut Rice : மிச்சம் வைக்காமல் லன்ச் பாக்ஸை காலி செய்ய வேண்டுமா? உங்கள் குழந்தைகளுக்கு இப்படி ஒரு சுவையில் தேங்காய் சாதம் செய்து கொடுங்கள்.

Coconut Rice : மிச்சம் வைக்காமல் லன்ச் பாக்ஸை காலி செய்ய வேண்டுமா? இப்படி ஒரு சுவையில் தேங்காய் சாதம்!
Coconut Rice : மிச்சம் வைக்காமல் லன்ச் பாக்ஸை காலி செய்ய வேண்டுமா? இப்படி ஒரு சுவையில் தேங்காய் சாதம்!

வேகவைத்த சாதம் – ஒரு கிண்ணம்

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

வேர்க்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்

முந்திரி பருப்பு – 15

வர மிளகாய் – 2

பெருங்காய தூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை – 2 கொத்து

பச்சை மிளகாய் – 2 நறுக்கியது

இஞ்சி – 2 இன்ச் (பொடியாக நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து வதக்கவேண்டும். இதில் வேர்க்கடலை, முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவேண்டும்.

அடுத்து இதில் காய்ந்த மிளகாய், பெருங்காய தூள், கறிவேப்பில்லை, இஞ்சி சேர்த்து வதக்கவேண்டும். சேர்த்த பொருட்கள் அனைத்தும் வதங்கியவுடன், இதில் துருவிய தேங்காய் சேர்க்கத்து வதக்கவேண்டும்.

இறுதியாக வேகவைத்த சாதம் சேர்த்து கிளறினால், சுவையான தேங்காய் சாதம் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு வறுவல் அல்லது வாழைக்காய் வறுவல் கூட போதுமானது அல்லது ஊறுகாயே கூடபோதும்.

தேங்காயின் நன்மைகள்

தேங்காயின் சிறு பற்களை குழந்தைகள் மெல்ல கொடுத்தால் குழந்தைகளின் பற்கள் மற்றும் உடலுக்கும் நல்லது.

தேங்காயில் உள்ள மிதமான ஃபேட்டி ஆசிட்கள் குழந்தைகளுக்கு உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் உடலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

நீர்ச்சத்து இழப்பபை தடுக்க உதவுகிறது. தேங்காயில் எலெக்ட்ரோலைட்கள் உள்ளன. அது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்ககிறது. தசைகளும், நரம்புகளும் ஆரோக்கியமாக இருக்க தேங்காய் உதவுகிறது.

சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. தேங்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. அது வயதாவதை தாமதமாக்குவதுடன், சருமத்தையும் பாதுகாக்கிறது. சூரியனின் நச்சுக்கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கிறது.

அதற்காகத்தான் தேங்காய் எண்ணெயை நாம் வெளியில் இருந்து சருமத்திற்கு தடவுகிறோம். குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெயை சருமத்தில் தடவி காலை இளவெயிலில் நிற்க வைத்தால், அவர்களின் சருமம் வைட்டமின் – டியை அப்படியே எடுத்துக்கொண்டு சரும ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

பற்களுக்கும் எலும்பு ஆரோக்கியத்துக்கும் நல்லது. தேங்காய் கால்சியம் மற்றும் மெக்னீசியத்தை, உடல் நன்றாக கிரகிக்க உதவுகிறது. இவையிரண்டும் பற்களுக்கும், எலும்புகளுக்கும் மிகவும் உதவுகிறது.

தலைமுடி வளர்ச்சிக்கு தேங்காய் உதவுகிறது. அதனால்தான் தலைக்கும் தேங்காய் எண்ணெயை தடவுகிறார்கள். எந்த மூலிகை எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய் கட்டாயம் பயன்படுத்தப்படுகிறது. 

தலைமுடி வளர்ச்சிக்கும் தேங்காய் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பேன் மற்றும் பொடுகுகளில் இருந்தும் முடிக்கால்களை தேங்காய் காக்கிறது.

தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது. தேங்காயில் லாரிக் அமிலம் உள்ளது. அது மோனோலாரின் என்பதை உருவாக்குகிறது. இந்த மோனோலாரின் பாக்டீரியாக்கள், பூஞ்ஜைகள் மற்றும் வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.

சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்கிறது. அதிகளவில் தேங்காய் தண்ணீர் குடிப்பதால், சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. தேங்காயில் உள்ள பொட்டிசியம் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. இதனால், பக்கவாதம் வராமல் காக்கிறது.

தேங்காயில் இத்தனை நன்மைகள் உள்ளதால், தேங்காயை நீங்கள் தினமும் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். தேங்காய்ப்பால், மசாலா ஆகியவற்றை செய்தும் உணவில் தேங்காயை சேர்த்துக்கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.