தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Coconut Poli Coconut Poli You Can Eat It In A Super Delicious Way

Coconut Poli : தேங்காய் போளி! சுடசுட சூப்பரான சுவையில் சாப்பிடலாம்!

Priyadarshini R HT Tamil
Jan 15, 2024 02:00 PM IST

Coconut Poli : தேங்காய்போளி! சுடசுட சூப்பரான சுவையில் சாப்பிடலாம்!

Coconut Poli : தேங்காய்போளி! சுடசுட சூப்பரான சுவையில் சாப்பிடலாம்!
Coconut Poli : தேங்காய்போளி! சுடசுட சூப்பரான சுவையில் சாப்பிடலாம்!

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

மாவு தயாரிக்க

மைதா – ஒரு கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

போலி நிரப்புவதற்கு

தண்ணீர் – முக்கால் கப்

வெல்லம் – 200 கிராம்

நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

துருவிய தேங்காய் – ஒரு கப்

ஏலக்காய் தூள் – கால் ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில், மைதா, எண்ணெய், உப்பு சேர்த்து நன்கு கலந்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் வரை மாவை மிருதுவாக பிசைந்துகொள்ள வேண்டும்.

மாவை சிறிது எண்ணெய் தடவி ஒரு மணி நேரம் மூடிவைக்கவேண்டும்.

ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி, வெல்லம் சேர்த்து, கரைந்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வறுக்கவேண்டும்.

வெல்லம் பாகை துருவிய தேங்காய் மீது வடித்து, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

மாவை சிறிய உருண்டைகளாக பிரித்துக்கொள்ள வேண்டும்.

உருண்டைகளாக உருட்டிய மாவின் நடுவில்ச்செய்து வைத்த தேங்காய் கலவைவை வைத்து மூடி அதை நன்றாக சப்பாத்திக்கு தேய்ப்பதுபோல் தேய்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயை சூடாக்கி, செய்து வைத்த போளியை வைத்து நெய் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை சுடவைத்து எடுக்வேண்டும்.

சூடான மற்றும் மற்றும் சுவையான தேங்காய் போளி தயார். இது ஒரு சிறப்பான மாலை நேர சிற்றுண்டி.

இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மாலைநேர சிற்றுண்டி.

பள்ளிவிட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். வழக்கமான பருப்பு போளியைவிட இது வித்யாசமான சுவையாக இருக்கும்.

தேங்காய் வெல்லம் சேர்த்து செய்வதால் இதை எளிதாக செய்துவிடலாம். ஆரோக்கியமும் நிறைந்தது. மைதா மாவை நல்ல மிருதுவாக பிசைந்து எடுத்தால், போளி மிகவும் சாப்ஃட்டாகவும், சுவையாகவும் இருக்கும்.

நன்றி – ஹேமா சுப்ரமணியன்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம் ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்