Coconut Milk White Kuruma : தேங்காய்ப்பால் வெள்ளை காய்கறி குருமா! டிபஃனுக்கு ஏற்ற செம்ம காம்போ!
Coconut Milk White Kuruma : தேங்காய்ப்பால் வெள்ளை காய்கறி குருமா! டிபஃனுக்கு ஏற்ற செம்ம காம்போ!

தேவையான பொருட்கள்
கேரட் – 2
பீன்ஸ் – 5
உருளைக்கிழங்கு – 1
காய்ந்த பச்சைபட்டாணி – அரை கப்
தேங்காய்த்துருவல் – ஒரு கப்
கிராம்பு – 4
பட்டை – சிறிய துண்டு
ஸ்டார் சோம்பு - 1
ஏலக்காய் - 2
கறிவேப்பிலை – 10
தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அரைக்க
தேங்காய்த்துருவல் – முக்கால் கப்
பச்சை மிளகாய் – 3
கசகசா – அரை ஸ்பூன்
பொட்டுக்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்
சோம்பு – ஒரு ஸ்பூன்
பூண்டு பற்கள் – 10
இஞ்சி – சிறிய துண்டு
முந்திரிப்பருப்பு – 8
செய்முறை
பட்டாணியை 6 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவேண்டும். தேவைப்ட்டால் முளைக்கட்டி எடுத்துக்கொள்ளலாம்.
கேரட் மற்றும் உருளைக்கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி பொடியாக நறுகிக்கொள்ள வேண்டும். பீன்ஸையும் பொடியாக நறுக்கவேண்டும்.
ஒரு கப் தேங்காய்த்துருவலை தேங்காய்ப்பால் எடுத்துக் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு பற்கள், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, கசகசா, பொட்டுக்கடலை, சோம்பு மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
குக்கரில், ஊறவைத்த பட்டாணி மற்றும் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து அரைகப் கப் தண்ணீர் விட்டு 3 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, ஸ்டார் சோம்பு, ஏலக்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும்.
பின் அரைத்த விழுதை சேர்த்து தொடர்ந்து கையை எடுக்காமல் வதக்கவேண்டும்.
அவை வதங்கியதும் வேகவைத்த காய்கறிகளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவேண்டும்.
பின்னர் ஒரு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடங்கள் மூடி வைக்கவேண்டும்.
குருமா காய்கறிகளோடு சேர்ந்து கொதித்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து குறைந்த சூட்டில் லேசான கொதி வந்ததும் இறக்கவேண்டும். சப்பாத்தி, இடியாப்பம், ஆப்பம், நெய் சோறுக்கு பரிமாறவேண்டும்.
நன்றி – விருந்தோம்பல்.
தேங்காய்ப்பாலில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்
100 மில்லி லிட்டர் தேங்காய் பாலில் 169 கலோரிகள் உள்ளது. 1.1 கிராம் புரதச்சத்துக்களும், 16.9 கிராம் கொழுப்பும், 14.6 சாச்சுரேடட் கொழுப்பும், 3.3 கிராம் கார்போஹைட்ரேட்டும், 2 கிராம் சர்க்கரையும் உள்ளது.
தேங்காய்ப்பால் அனைவருக்கும் ஏற்ற ஒரு சிறந்த உணவு. வயிற்றில் உள்ள அல்சரை குணப்படுத்த உதவுகிறது. பாலில் உள்ள லாக்டோஸ் இதில் கிடையாது என்பதால், பாலுக்கு பதில் இதை பயன்படுத்தலாம். சைவ உணவுப்பிரியர்களுக்கு ஏற்றது. இதில் அலர்ஜி, பூஞ்ஜை மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது. இது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்