Cluster Beans Pachadi : கொத்தவரங்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்; இப்படி ஒரு பச்சடி செய்து பாருங்கள்!
Cluster Beans Pachadi : எனினும் இந்த கொத்தவரங்காய் சிலருக்குப் பிடிக்காது. இதுபோன்ற ஒரு சுவையான பச்சடியை செய்துகொடுங்கள். அவர்கள் வேண்டும் என விரும்பி சாப்பிடுவார்கள்.

கொத்தவரங்காய் பச்சடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். கொத்தவரங்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. இதில் கலோரிகளும் குறைவு. கொத்தவரங்காய் செரிமான ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை காக்கின்றன. மலச்சிக்கலைத் தடுத்து ஆரோக்கியமான செரிமா மண்டலத்தைக் கொடுக்கின்றன. இது உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது. கொத்தவரங்காயில் கலோரிகள் குறைவு என்பதால், உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும்.
இதனால் உங்கள் உடல் எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது. இது உங்களின் ஒட்டுமொத்த கலோரிகள் உட்கொள்ளும் அளவையும் குறைக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உங்கள் உடலில் தொற்றுக்கள் மற்றும் நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. இதனால் உங்களின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் உடலில் கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இதனால் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து குறைகிறது. இதுபோல் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. எனினும் இந்த கொத்தவரங்காய் சிலருக்குப் பிடிக்காது. இதுபோன்ற ஒரு சுவையான பச்சடியை செய்துகொடுங்கள். அவர்கள் வேண்டும் என விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
• பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
• கொத்தவரங்காய் – 15 வரை
• எண்ணெய் – 4 ஸ்பூன்
• கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
• உளுந்து – ஒரு ஸ்பூன்
• வேர்க்கடலை – 2 ஸ்பூன்
• தேங்காய் – ஒரு கைப்பிடியளவு
• புளி – சின்ன நெல்லிக்காய் அளவு
• பெருங்காயம் – சிறிதளவு
• வர மிளகாய் – 3
• பச்சை மிளகாய் – 2
• மல்லித்தழை – சிறிதளவு
• உப்பு – தேவையான அளவு
• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயத்தை வதக்கிக்கொள்ளவேண்டும். அதை தனியாக வைத்துவிடவேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் கொத்தவரங்காய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து லேசாக வேக வைத்து எடுதது தனியான வைத்துக்கொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து கடலை பருப்பு, உளுந்து, வேர்க்கடலை, தேங்காய், புளி, பெருங்காயம், வர மிளகாய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து கொத்தவரங்காயை சேர்த்து வதக்கி, ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து வதக்கிய வெங்காயம் மற்றும் மல்லித்தழை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்தால் சூப்பர் சுவையான கொத்தவரங்காய் பச்சடி அல்லது சட்னி தயார். இதை சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிட சுவை அள்ளும். இதற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் மற்றும் அப்பளம் மட்டுமே போதுமானது.
ஒரு சிலருக்கு கொத்தவரங்காய் என்றால் பிடிக்காது. ஆனால் இதுபோல் செய்துகொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்றாக இந்த டிஷ் இருக்கும். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
குறிப்பு – இதில் கடைசியாக அரை ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து அரைத்தால் நன்றாக இருக்கும். ஆனால் இது முற்றிலும் உங்கள் விருப்பம்தான்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்