Climate Change : சுட்டெரிக்கும் வெயில்; கருகும் பயிர்கள்! பருவநிலை மாற்ற பாதிப்புகளைக் குறைக்க என்ன செய்வது?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Climate Change : சுட்டெரிக்கும் வெயில்; கருகும் பயிர்கள்! பருவநிலை மாற்ற பாதிப்புகளைக் குறைக்க என்ன செய்வது?

Climate Change : சுட்டெரிக்கும் வெயில்; கருகும் பயிர்கள்! பருவநிலை மாற்ற பாதிப்புகளைக் குறைக்க என்ன செய்வது?

Priyadarshini R HT Tamil
May 11, 2024 06:54 PM IST

Climate Change : பருவநிலை மாற்ற பாதிப்புக்களை குறைக்க காடுகளை உருவாக்குவதே சிறந்த வழி என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Climate Change : சுட்டெரிக்கும் வெயில்; கருகும் பயிர்கள்! பருவநிலைமாற்ற பாதிப்புகளைக் குறைக்க என்ன செய்வது?
Climate Change : சுட்டெரிக்கும் வெயில்; கருகும் பயிர்கள்! பருவநிலைமாற்ற பாதிப்புகளைக் குறைக்க என்ன செய்வது?

நகர்புற மையங்கள், பசுமைத் திட்டங்களை கொண்டிருந்தால் மட்டுமே, சுகாதார, ஆற்றல் திறன் மிக்க (Energy Efficient), நீடித்த வளர்ச்சியை எட்டும் என வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

பசுமை பரப்புகளின் அவசியம்

அதற்கு பசுமைப்பரப்புகளை அதிகப்படுத்துவது (Green Spaces) மிக, மிக அவசியம்.

2010களில் சென்னையின் பசுமைப்பரப்பு 4 சதவீதம் என இருந்தது தற்போது 5 சதவீதம் என மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால், தேவையானதோ 33 சதவீதம்

பசுமைப்பரப்புகளை அதிகப்படுத்த முறையான திட்டமிடல், வளர்ச்சி பற்றி சிந்திக்கும்போது, பசுமைப்பரப்பையும் இணைத்தே சிந்தித்தல், மரங்களை, பசுமைப்பரப்பை உருவாக்கும்போது, அதை எப்படி பாதிப்பின்றி காப்பது என்பது பற்றி, ஒவ்வொரு இடத்தின் தேவை, இருக்கும் மக்களுக்கு ஏற்ப திட்டமிட்டு, மக்களால் அதை எளிதில் அணுகி செய்யும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

சமூக பசுமை சொத்துகள் என்பது இருக்கும் வன அல்லது பசுமைப்பரப்புகளை காத்து Sacred Groove Garden காப்பதும், வீடுகளில் மரங்களை வளர்ப்பதை ஊக்குவிப்பதும் ஆகும்.

தொழிற்நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மரங்களை நட்டு மாசடைதல் பாதிப்பைக் குறைப்பதும், திடக்கழிவு மேலாண்மையை செவ்வனே கடைப்பிடிப்பதும் (கண்ட இடங்களில் குப்பையை கொட்டி, முறையாக கழிவுகளை கையாளாமல்போவது மாசடைதல் பிரச்னையை அதிகமாக்கும்), நகர்புறங்களில் உள்ள ஈரநிலங்களை காப்பதும், நீரோடைகள், நீர் நிலைகள், நீர் வழிந்தோடும் பாதைகளில் மரங்களை வளர்த்து பாதுகாத்தல், மழைநீர் தேங்கும் பகுதிகளுக்கு அருகில் தோட்டங்கள் அமைத்தல் (Rain Gardens) போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

அதன் மூலம் நகர்புற பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த முடியும்.

ஆனால், பரந்தூர் விமானநிலையம் அமைக்கும் இடத்தில் 27 சதவீதம் ஈரநிலங்கள் இருந்தும், விமானநிலையம் வந்தால் அவை அழியும் அபாயத்தை அறிந்தும், தமிழக அரசு பரந்தூர் விமானநிலையத்தை அமைக்க முற்படுவது சரியா?

தமிழக நகர்புறங்கள் எப்படி உள்ளது 

தமிழகத்தின் நகர்புறங்கள் தான் 80 சதவீதம் ஆற்றலை பயன்படுத்துகின்றன. அவை தான் 70 சதவீதம், பசுமைக்குடி வாயுக்கள் வெளியேற காரணமாக உள்ளன. அதிக கார்பன் வழித்தடத்தை நகர்புற மையங்கள் கொண்டுள்ளன.

நகர்புற ஆறுகள் அல்லது நீர்நிலைகள் அனைத்தும் மிகவும் மாசடைந்துள்ளன. ஆக்கிரமிப்புகள், ஆலைக் கழிவுகள், விவசாயக் கழிவுகள், குப்பை கொட்டுதல் போன்றவற்றால் அவை பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளன.

நாம் நகர்புறத்தை சிமெண்ட் மூலம் கட்டிடங்கள், நடைபாதைகள் அமைத்து வருவதற்கு பதிலாக பசுமைப்பரப்பை அதிகரித்தால், பருவநிலை மாற்ற பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும்.

கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை செடி பூக்கள் 80 சதவீதம் கடும் வெப்ப அலையால் குறைந்து, திராட்சை சாகுபடியும் கணிசமான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

காவேரி டெல்டாபகுதிகளில் கடும் வெப்ப அலை காரணமக வெற்றிலை சாகுபடி 50 சதவீதம் குறைந்துள்ளது. வெற்றிலை இலைகள் வெயிலால் கருகியுள்ளன.

வீடுகளில் குளிர்விப்பான்களை (AC)மாட்டுவதற்குப் பதில், உள்ளூர் மரங்களை நட்டு பசுமைப்பரப்பை அதிகப்படுத்துவது குறித்து நாம் சிந்திக்க மறுப்பது, குளிர்விப்பான் பயன்பாடு மூலம் புவிவெப்பமடைதல் அதிகமாகவதை கவனத்தில்கொள்ளாமல், வருங்கால சந்ததியினரின் சுகாதாரத்தைப் பற்றி கவலைகொள்ளாமல் இருப்பது எப்படி சரியாகும்?

TBGPCCR கருத்தளவில் மட்டுமில்லாமல் செயல்பாட்டிலும் களத்தில் இறங்க வேண்டும். அப்போது தான் உரிய பலன் கிட்டும்.

நன்றி – மருத்துவர் புகழேந்தி.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.