Chow Chow Chutney : இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் அனைத்துக்கும் செட்டாகும்! இந்த ஒரு சட்னி மட்டும் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chow Chow Chutney : இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் அனைத்துக்கும் செட்டாகும்! இந்த ஒரு சட்னி மட்டும் போதும்!

Chow Chow Chutney : இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் அனைத்துக்கும் செட்டாகும்! இந்த ஒரு சட்னி மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Updated Aug 31, 2024 12:43 PM IST

Chow Chow Chutney : இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் அனைத்துக்கும் செட்டாகும்! இந்த ஒரு சட்னி மட்டும் போதும்!

Chow Chow Chutney : இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் அனைத்துக்கும் செட்டாகும்! இந்த ஒரு சட்னி மட்டும் போதும்!
Chow Chow Chutney : இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் அனைத்துக்கும் செட்டாகும்! இந்த ஒரு சட்னி மட்டும் போதும்!

சௌசௌவின் நன்மைகள்

இதயத்தை காக்கிறது.

கல்லீரல் பாதுகாப்பை அதிகரிக்கிறது.

ரத்தச்சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.

கர்ப்ப கால ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.

புற்றுநோயைத் தடுக்கிறது.

வயோதிகத்தை குறைக்கிறது.

குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

உடல் எடை குறைப்ப உதவுகிறது.

முளையின் செயல்திறனை அதிகரிக்கிறது.

இத்தனை நன்மைகள் கொண்ட சௌசௌவில் இருந்து சட்னி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். வழக்கமான தேங்காய், வெங்காயம், தக்காளி, பூண்டு சட்னிகள் மட்டும் சாப்பிட்டு போர் அடித்திருந்தால், இந்தச் சட்னி உங்களுக்கு வித்யாசமான சுவையைத்தரும். அதனுடன் உடலுக்கும் நல்லது. உடலுக்கு குளிர்ச்சி மற்றும் நீர்ச்சத்தை அள்ளி வழங்கும் காயாக உள்ளது.

சௌசௌ சட்னி செய்ய தேவையான பொருட்கள்

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 1

சௌ சௌ – 2

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்

கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்

வர மிளகாய் – 4

வரமல்லி – ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

சௌசௌ எடுத்து அதன் தோலை சீவிவிட்டு, கிரேட்டரில் நன்றாக துருவி எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமல்லி, வரமிளகாய் சேர்த்து ட்ரையாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி துருவிய சௌசௌ, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்வேண்டும். அனைத்தும் நன்றாக மேஷ் ஆகும் வரை வதக்கவேண்டும்.

பின்னர் இரண்டையும் ஆறவைத்து முதலில் ட்ரை மசாலாக்களை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவேண்டும். அதிலே வதக்கிய சௌசௌ, தக்காளி கலவையை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். தண்ணீர் சேர்க்கக்கூடாது.

ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து அரைத்த சட்னியில் சேர்த்தால் சூப்பரான சௌசௌ சட்னி தயார்.

இதை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, சாதம் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இதுபோல் நீங்கள் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

சௌசௌ போன்ற காய்கறிகளை சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, இது வழக்கமான சட்னி தான் என்று கூறி கொடுத்துவிடலாம்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.