தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Cholesterol Remedy How To Fix Fat Tumors Naturally Without Surgery

Cholesterol Remedy : உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகளை அறுவைசிகிச்சையின்றி இயற்கை முறையில் சரிசெய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Jan 31, 2024 12:37 PM IST

Cholesterol Remedy : உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகளை அறுவைசிகிச்சையின்றி இயற்கை முறையில் சரிசெய்வது எப்படி?

Cholesterol Remedy : உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகளை அறுவைசிகிச்சையின்றி இயற்கை முறையில் சரிசெய்வது எப்படி?
Cholesterol Remedy : உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டிகளை அறுவைசிகிச்சையின்றி இயற்கை முறையில் சரிசெய்வது எப்படி? (PG Novels)

ட்ரெண்டிங் செய்திகள்

சிலருக்கு உடலில் கொழுப்பு கட்டி ஏற்பட்ட உடனே இதற்கு தீர்வு என்று அறுவைசிகிச்சையைத்தான் எண்ணுகிறார்கள். ஆனால் அதற்கு இயற்கையிலேயே சில தீர்வுகள் உள்ளது.

எனவே கட்டியின் தன்மையைப்பொறுத்து அதற்கு அறுவைசிகிச்சைதேவைதானா அல்லது இயற்கை முறையிலேயே கரைக்க முடியுமா என்பது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

பொதுவாக கொழுப்பு கட்டிகள் வயிறு, கை, கழுத்து, முதுகு ஆகிய இடங்களில் ஏற்படும். அதற்கு காரணங்களாக உடல் உழைப்பு இன்மை கூறப்படுகிறது.

சரியான உடல் உழைப்பு இல்லாவிட்டால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. அப்போது உடலில் கொழுப்பு எந்த இடத்திலாவது தங்க துவங்கிவிடும். மேலும் உடலில் நச்சுக்களும் தங்க துவங்கிவிடும். நச்சுக்கள் தங்கத்துவங்கும்போது நமது உடலில் கொழுப்பு கட்டி ஏற்படுகிறது.

இதை சரிசெய்வதற்கு இரண்டு டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்

நாட்டு கமலா ஆரஞ்சு – 2 (அதன் தோல்)

நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் – 2 ஸ்பூன்

கல் உப்பு - ஒரு கைப்பிடி

செய்முறை

உடலில் கொழுப்புகட்டி உள்ளவர்கள் இரண்டு நாட்டு கமலா ஆரஞ்சுகளை தினமும் சாப்பிட வேண்டும்.

அந்த கமலா ஆரஞ்சை சாப்பிட்டுவிட்டு அதன் தோளை தூக்கி எறிந்துவிடாமல் அதை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு இரும்பு கடாய் அல்லது மண் சட்டியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அது நன்றாக சூடானதும் அதில் இந்த கமலா ஆரஞ்சு பழத்தின் தோல்களை சேர்துது நன்றாக நிறம் மாறும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெய் மற்றும் தோல் இரண்டும் சேர்ந்து நன்றாக சுருண்டு ஒரு பிரவுன் அல்லது கருப்பு நிறம் வரும் வரை வறுக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் ஒரு கைப்பிடி கல் உப்பும் சேர்த்து வறுக்க வேண்டும்.

சூடான இந்த கலவையை ஒரு காட்டன் துணியில் சூடாக எடுத்து கொட்டி, கொழுப்பு கட்டி உருவாகியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதுபோல் செய்தால் அந்த இடத்தில் தடைபட்ட ரத்த ஓட்டம் சீராகும்.

ஒரு நாளில் இரண்டு முறை இதுபோல் தினமும் கட்டி கரையும் வரை செய்யலாம். இந்த சூட படும்போது அது உங்களுக்கு இதமாகவும் இருக்கும்.

ஏற்கனவே தயார் செய்து வைத்த கலவையையும் அவ்வப்போது சூடு செய்து ஒத்தடம் கொடுக்கலாம். இதை ஒரு நாளில் மூன்று முறை கூட செய்யலாம்.

ஒரு வாரத்தில் நல்ல பலன் தரும்.

மேலும் கொழுப்பு கட்டிகளில் நமது கைகளில் உள்ள 5 விரல்களையும் குவித்து அதன் மீது மெதுவாக தட்டிவிடவேண்டும்.

அப்போது செய்யும்போது தடைபட்ட ரத்த ஓட்டம் சீராக கொழுப்பு கட்டி கரைவதை நீங்கள் கண்கூடாக காண முடியும்.

ஆனால் இதுபோன்ற இயற்கை முறைகள் பலன் அளிக்காதவர்கள். கட்டாயம் மருத்துவரை அணுகி ஆலோசனையைப்பெறுவது சிறந்தது.

பொறுப்பு துறப்பு - இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு உங்களுக்கு உதவவில்லையென்றால் மருத்துவரின் பரிந்துரைதான் சிறந்தது. இவையனைத்தும் கிடைத்த தகவல்களின்பேரில் கூறப்பட்டவை. இதன் உறுதித்தன்மையை ஹெச்டி தமிழ் ஆராயவில்லை. எனவே இங்கு பகிரப்படும் மருத்துவக்குறிப்புகளை பின்பற்றி ஆரோக்கியமாக வாழலாம். ஆனால், தீவிரமான நிலைகளுக்கு மருத்துவர்களின் ஆலோசனைகளே மேலானது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்