தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Cholesterol Do You Want To Reduce The Fat In Your Body These Drinks Are Enough When I Wake Up In The Morning

cholesterol : உடலின் கொழுப்பை கரைக்க வேண்டுமா? காலையில் எழுந்தவுடன் இந்த பானங்கள் மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Feb 13, 2024 05:09 PM IST

வீட்டிலே தயாரிக்கக்கூடிய, கொழுப்பை எரிக்கக்கூடிய எளிய பானங்கள். இவற்றை காலையில் வெறும் வயிற்றில் பருகி பலன்பெறுங்கள்.

cholesterol : உடலின் கொழுப்பை கரைக்க வேண்டுமா? காலையில் எழுந்தவுடன் இந்த பானங்கள் மட்டும் போதும்!
cholesterol : உடலின் கொழுப்பை கரைக்க வேண்டுமா? காலையில் எழுந்தவுடன் இந்த பானங்கள் மட்டும் போதும்!

ட்ரெண்டிங் செய்திகள்

சூடான எலுமிச்சை பழங்கள் ஊறிய தண்ணீர்

இளஞ்சூடான எலுமிச்சை பழங்கள் கலந்த தண்ணீரை நீங்கள் காலையில் பருகலாம். இது உங்கள் உடலில் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.

கிரீன் டீ

கிரீன் டீக்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. கொழுப்பு கரைவதை ஊக்குவிக்கிறது. அது நாள் முழுவதும் உங்கள் உடலில் கொழுப்பு கரைவதற்கு உதவுகிறது.

ஆப்பிள் சைடர் வினிகர் பானம்

இது பசியை கட்டுப்படுத்துகிறது. இது இன்சுலின் உணர்திறகை அதிகரிக்கிறது. மேலும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் அதற்கு நீங்கள் ஆப்பிள் சைடர் வினிகரில் சிறிது தண்ணீர் மற்றும் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.

இஞ்சி டீ

ஒரு கப் இஞ்சி டீயை தயாரித்து காலையில் பருகி, உங்கள் உடல் அதிக கலோரிகளை எரிக்க ஊக்குவியுங்கள். இந்த இஞ்சி டீ செரிமானத்தை அதிகரிக்கிறது. அழற்சியை குறைக்கிறது. தெர்மோஜெனிசிஸ்ஸை அதிகரிப்பதன் மூலம் இவற்றை இஞ்சி டீ செய்கிறது.

பாதாம் பால் மற்றும் மச்சா பொடி

பாதாம் பாலில் மச்சா பொடியை கலந்து ஸ்மூத்தி செய்து பருகுங்கள். மச்சாப்பொடி கிரீன் டீ இலைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த மச்சா பொடி ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது உங்கள் உடல் வளர்சிமை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பை கரைக்க உதவுகிறது.

மஞ்சள் பால்

உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினாலோ அல்லது உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க விரும்பினாலோ இந்த மஞ்சள் பால் உங்களுக்கு தேவை. இதில் உள்ள அழற்சிக்கு எதிரான குணங்கள் உங்களுக்கு கொழுப்பை குறைக்க உதவுகிறது. பாலில் மஞ்சள் தூள், இஞ்சி, பட்டை சேர்த்து கலந்து பருகவேண்டும். அனைத்தையும் பொடியாக்கியும், ஃபிரஷ்ஷாகவுமே கலந்து பருகலாம்.

புதினா வெள்ளரி தண்ணீர்

தண்ணீரில் புதினா இலைகள் மற்றும் வெள்ளரியை நறுக்கி ஓரிரவு ஊறவைத்துவிடவேண்டும். காலையில் எழுந்து வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை வடிகட்டி பருகினால் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குவதுடன், கொழுப்பையும் கரைக்கிறது. உடல் கழிவுநீக்கம் செய்ய உதவுகிறது.

சியா விதைகள்

சியா விதைகளை ஒரு மணி நேரம் அல்லது ஒரு இரவு ஊறவைத்து, அதில் எலுமிச்சை சாறு பிழிந்து பருகினால், உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுப்பதுடன், உங்களுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் மற்றும் ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்களை வழங்குகிறது. இது உடல் வளர்சிதை மாற்றத்தை உயர்த்தி, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

எலுமிச்சை, இஞ்சி தண்ணீர்

தண்ணீரில், எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் மற்றும் இஞ்சி சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகினால், அது உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். செரிமானம் மற்றும் உடல் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவுகிறது.

பட்டை மற்றும் தேன் தண்ணீர்

பட்டை மற்றும் தேன் கலந்து பருகும் தண்ணீர் உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரிக்க உதவுகிறது. கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதை வெதுவெதுப்பான தண்ணீருடன் பருகுவதும் பலன்களை மேலும் அதிகரிக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்