Chocolate Cake : பேக்கிங் தெரியலையா? கவலைவேண்டாம்! நீங்களும் கேக் செய்யலாம்! ரைசிங் ஏஜென்ட்களும் தேவையில்லை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chocolate Cake : பேக்கிங் தெரியலையா? கவலைவேண்டாம்! நீங்களும் கேக் செய்யலாம்! ரைசிங் ஏஜென்ட்களும் தேவையில்லை!

Chocolate Cake : பேக்கிங் தெரியலையா? கவலைவேண்டாம்! நீங்களும் கேக் செய்யலாம்! ரைசிங் ஏஜென்ட்களும் தேவையில்லை!

Priyadarshini R HT Tamil
Jan 11, 2025 12:15 PM IST

சாக்லேட் கேக் செய்வது எப்படி என்று பாருங்கள்.

Chocolate Cake : பேக்கிங் தெரியலையா? கவலைவேண்டாம்! நீங்களும் கேக் செய்யலாம்! ரைசிங் ஏஜென்ட்களும் தேவையில்லை!
Chocolate Cake : பேக்கிங் தெரியலையா? கவலைவேண்டாம்! நீங்களும் கேக் செய்யலாம்! ரைசிங் ஏஜென்ட்களும் தேவையில்லை!

தேவையான பொருட்கள்

பன்னீர் – 200 கிராம்

முட்டை – 2

சர்க்கரை அல்லது வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்

கோகோ பவுடர் – 4 டேபிள் ஸ்பூன்

காபி டிகாஷன் – 50 மில்லி லிட்டர்

சாக்கோ சிப்ஸ்கள் – ஒரு கைப்பிடியளவு

செய்முறை

பன்னீரை துருவி, முட்டையையும் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அடித்துக்கொள்ளவேண்டும். அதனுடன், அடுத்து சர்க்கரை அல்லது நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கவேண்டும். கோகோ பவுடர், காபி டிகாஷன் என அனைத்தையும் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவேண்டும். இதை கேக் டின்னில் ஊற்றி, அதன் மேல் சாக்கோ சிப்களை போட்டு வைக்கவேண்டும். இதை அவனில் வைத்தும் வேக வைத்துக்கொள்ளலாம் அல்லது ஸ்டீமரில் வைத்தும் வேகவைத்துக்கொள்ளலாம். சூப்பர் சுவையான சாக்கோ கேக் தயார்.

இதை உங்கள் குழந்தைகளுக்கு பள்ளி விட்டு வந்தவுடன் செய்துகொடுத்தால் அவர்கள் மகிழ்வார்கள். இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடிக்கும் இந்த கேக்கை நீங்கள் ஒருமுறை கட்டாயம் செய்து பாருங்கள். அடிக்கடி செய்யத் துவங்கிவிடுவீர்கள்.

மேலும் ஒரு கேக் ரெசிபியை தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

மைதா – 1 கப்

கோகோ பவுடர் – 3 டேபிள் ஸ்பூன்

காபி எசன்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்

காபி பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை – 1 கப்

பால் – ஒன்றரை கப்

உலர் பழங்கள் – 3 கப்

செய்முறை

முதலில் காபி கேக் செய்வதற்கு, ஒரு பெரிய பாத்திரத்தில் உலர் பழங்கள் (உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பழங்களை எடுத்துக்கொள்ளலாம்) எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் காபி எசன்ஸ், பவுடர் மற்றும் பால் சேர்த்து நன்றாக ஊறவைக்க வேண்டும். இதை நன்றாக மூடி ஓரிரவு ஊறவைக்க வேண்டும்.

அவனை 160 டிகிரி செல்சியஸ் அளவுக்கு ப்ரீ ஹீட் செய்ய வேண்டும். பின்னர் ஒரு கேக் டின்னில் பேக்கிங் பேப்பரை வைத்து பத்திரமாக வைக்க வேண்டும்.

கேக் செய்ய மாவை தயார் செய்ய வேண்டும். அதில் மைதா, கோகோ பவுடர், சர்க்கரை, ஓரிரவு ஊறவைத்த உலர் பழங்கள் என அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும். இப்போது இதில் இருந்து கேக் தயாரிக்க முடியும்.

கேக் டின்னில் அந்த மாவை ஊற்றி, 50 முதல் 55 நிமிடங்கள் வரை பேக் செய்ய வேண்டும். 50 நிமிடங்கள் கழித்து கேக்க வெந்துள்ளதா என்பதை டூத் பிக் வைத்து சரிபார்க்க வேண்டும். வேகவில்லையென்றால் கூடுதலாக 5 முதல் 7 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். சுவையான காபி கேக் சாப்பிட தயார்.

பாரம்பரியமான முறையில் இந்த கேக் ஐசிங் சர்க்கரையைப் பயன்படுத்தி செய்யப்படும். ஆனால் அனைவரும் செய்ய ஏதுவாக மைதா, கோகோ பவுடர், பால், சர்க்கரை, காபி தூள் வைத்து செய்யலாம். வழக்கமான ஃப்ரூட் கேக் செய்வதுபோல் ஓரிரவு உலர் பழங்களை ஊறவைக்க வேண்டும்.

அதை காபி எசன்சில் ஊறவைப்பது இந்த கேக்குக்கு நல்ல சுவையை தரும். இந்த கேக் நல்ல பிரவுன் நிறத்தில் பார்ப்பதற்கு அட்டகாசமாகவும், சுவையில் அபாரமாகவும் இருக்கும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.