Chocolate : உங்கள் குழந்தைகளுக்கு சாக்லேட் அதிகம் கொடுப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் இதோ.. நன்மைகளும் இல்லாமல் இல்லை!
Chocolate and tooth enamel degradation: பல் எனாமல் பலவீனப்படுத்துவது முதல் வாயில் கிருமிகளின் வளர்ச்சியைத் தூண்டுவது வரை, சாக்லேட்டுகள் எதிகம் கொடுப்பது ஏன் நல்லதல்ல என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

Chocolate and tooth enamel degradation: பொதுவாக சாக்லேட்டுகளை வெறுப்பவர்கள் என்று யாரையும் எளிதில் நம்மால் சொல்லி விட முயாது. எந்த ஒரு சின்ன வெற்றியையும் கொண்டாட சாக்லேட் சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகறிது. நமது நாளை ஒரு சிறப்பானதாக மாற்ற சாக்லேட்கள் போதுமானவை. சாக்லேட்டுகள் சிறந்த பரிசு பொருளாகவும் பார்க்கப்படுகிறது.
ஒரு குழந்தைக்கு மகிழ்ச்சியாக உணர பரிசளிப்பதாக இருந்தாலும் அல்லது எங்கள் காதல் கூட்டாளரை ஆச்சரியப்படுத்துவதாக இருந்தாலும், சாக்லேட்டுகள் சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. குழந்தைகள் பெரியவர்களை விட சாக்லேட்டுகளை அதிகம் விரும்புகிறார்கள். சந்தையிலும் கலர் கலராக நிறைய சாக்லேட்டு விற்பனைக்கு உள்ளது. குழந்தைகள் நாள் முழுவதும் அவற்றை மென்று சாப்பிடுவதைக் காணலாம். இருப்பினும், சாக்லேட்டுகள் ஆரோக்கியமானதா என்ற கேள்வி அவ்வபோது எழாமல் இல்லை.
எச்.டி லைஃப்ஸ்டைலுக்கு அளித்த பேட்டியில், டென்டெம், டென்டெமின் எம்.டி டென்டல் லேசர்ஸ் டி குனிதா சிங், "சாக்லேட் மற்றும் மிட்டாய்கள் உட்பட எதையும் அதிகமாக உட்கொள்வது ஆபத்தானது. முடிந்தவரை குழந்தைகளை விலக்கி வையுங்கள். ஏனெனில், நம் மனம் சாக்லேட்டை ரசித்தாலும், நம் பற்கள் அப்படி ஆராதிப்பதில்லை. டார்க் சாக்லேட் இன்னும் சில ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, ஆனால் பால் மற்றும் இனிப்பு சாக்லேட்டுகளைத் தவிர்க்க வேண்டும்.