Reels Addiction: தொடர்ந்து ரீல்ஸ் ஸ்கோர்ல் செய்யும் பழக்கம் இருக்கிறதா? இது உங்களை அடிமையாக்கலாம்! புதிய ஆய்வு!
Reels Addiction: நீங்கள் ரீல்ஸ் பார்க்கும் போது ஒன்றிலிருந்து தொடங்கி மற்றொன்றுக்கு ஸ்க்ரோலிங் செய்து கொண்டே இருக்கிறீர்களா. இந்த ரீல் பார்க்கும் பழக்கம் பிற்காலத்தில் அடிமையாக மாற வாய்ப்புகள் அதிகம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

உலகில் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே பல தொழில்நுட்ப வளர்ச்சிகள் நடந்து வருகின்றன. சக்கரத்தில் தொடங்கி இப்போது நாம் பயன்படுத்தி வரும் ஏஐ தொழில்நுட்பம் வரை மனிதன் அவனது வசதிக்காக உருவாக்கி வருகிறான். ஆனால் இப்போது நாம் பயன்படுத்தி வரும் பல தொழில்நுட்பங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் இல்லை. இப்பொழுது நாம் அந்த சொகுசான வாழ்க்கையை அனுபவித்து வருகிறோம். இது போல கண்டறியப்பட்டது தான் போன்கள். தொலைதூரத்தில் இருப்பவர்களை தொடர்பு கொண்ட பேச கண்டறிந்த இந்த சாதனம் நாள்போக்கில் மேம்பட்டு வருகிறது. தற்போது நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் நமக்கு பல விதங்களில் உதவுகிறது. இத்தகைய பலன்களை கொடுக்கும் ஸ்மார்ட் போன்கள் தான் நமக்கு மிகப்பெரிய ஆபத்து என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அந்த அளவிற்கு நாம் அதனை முறையில்லாமல் பயன்படுத்தி வருகிறோம்.
ரீல்ஸ்க்கு அடிமை
நீங்கள் ரீல்ஸ் பார்க்கும் போது ஒன்றிலிருந்து தொடங்கி மற்றொன்றுக்கு ஸ்க்ரோலிங் செய்து கொண்டே இருக்கிறீர்களா. இந்த ரீல் பார்க்கும் பழக்கம் பிற்காலத்தில் அடிமையாக மாற வாய்ப்புகள் அதிகம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இது குறித்து சீனாவில் உள்ள தியான்ஜின் நார்மல் யுனிவர்சிட்டி நடத்திய ஆய்வின்படி, இந்தப் பழக்கம் உங்கள் மூளையின் கவனம் செலுத்தும் திறனை பலவீனப்படுத்தும் எனத் தெரியவந்துள்ளது.
ஆய்வு
இந்த ஆய்வு 17 முதல் 30 வயதுக்குட்பட்ட 111 பேரிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் ஒரு பகுதியாக இருந்தவர்களிடம் இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டன. இரண்டு மாதங்களில் சராசரியாக 95 நிமிடங்களுக்கு இதுபோன்ற குறுகிய வீடியோக்களைப் பார்க்கும்படி அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒவ்வொருவரின் மூளை செயல்பாடு MRI ஐப் பயன்படுத்தி மதிப்பீடு செய்யப்பட்டது. சோதனை முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த பழக்கம் மக்களை தீவிர போதைக்கு தள்ளுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது முடிவெடுப்பது மற்றும் உணர்ச்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய மூளையின் பகுதிகளான ஆர்பிடோஃப்ரன்டல் கோர்டெக்ஸ் மற்றும் சிறுமூளை ஆகியவற்றையும் பாதிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆய்வில் பங்கேற்பாளர்களின் மூளையின் பின்புற சிங்குலேட் கார்டெக்ஸ் மற்றும் டார்சோலேட்டரல் ப்ரீஃப்ரொன்டல் கோர்டெக்ஸில் அதிக செயல்பாடு காணப்பட்டது. அதிக ரீல்களைப் பார்ப்பவர்கள் சுய-குறிப்பு சிந்தனையில் ஈடுபடுகிறார்கள், இது கவனக்குறைவுக்கு வழிவகுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குறுகிய வீடியோக்களை அதிகம் பார்ப்பவர்கள் கவனக்குறைவுக்கு ஆளாகிறார்கள். மேலும், தூக்கமின்மை போன்ற தூக்க பிரச்சனைகளாலும் மோசமான தூக்கம் ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதே மூளையை மீண்டும் சீராக இயங்க வைக்க உதவும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்