குழந்தைகளின் பெயர்கள் : உங்கள் வாழ்வின் விடியல் அல்லது அதிகாலை என்ற அர்த்தத்தில் வரும் குழந்தைகளின் பெயர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குழந்தைகளின் பெயர்கள் : உங்கள் வாழ்வின் விடியல் அல்லது அதிகாலை என்ற அர்த்தத்தில் வரும் குழந்தைகளின் பெயர்கள்!

குழந்தைகளின் பெயர்கள் : உங்கள் வாழ்வின் விடியல் அல்லது அதிகாலை என்ற அர்த்தத்தில் வரும் குழந்தைகளின் பெயர்கள்!

Priyadarshini R HT Tamil
Updated May 11, 2025 11:40 AM IST

உங்கள் வாழ்வில் விடியலாக வந்தவர்கள் அல்லது அதிகாலை என்ற அர்த்தத்தில் வரும் குழந்தைகளின் பெயர்களை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டுமா? இதோ இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பெயர்கள் : உங்கள் வாழ்வின் விடியல் அல்லது அதிகாலை என்ற அர்த்தத்தில் வரும் குழந்தைகளின் பெயர்கள்!
குழந்தைகளின் பெயர்கள் : உங்கள் வாழ்வின் விடியல் அல்லது அதிகாலை என்ற அர்த்தத்தில் வரும் குழந்தைகளின் பெயர்கள்!

செஹெர்

செஹெர் என்றால், அதிகாலை அல்லது விடியல் என்று பொருள். இது அமைதி, அறிவு மற்றும் புதிய நாளின் அழகான துவக்கம் என எண்ணற்ற அர்த்தங்களைக் கொடுக்கும்.

பிரத்யுஷா

பிரத்யுஷா என்றால் அதிகாலை அல்லது விடியல் என்ற அர்த்தத்தைத் தரும். இது பிரகாசத்தைக் கொடுக்கும். புத்துணர்வு, புத்தாக்கத், முதல் துவக்கத்தின் வாக்குறுதி என எண்ணற்ற அர்த்தங்களைக் கொடுக்கிறது.

ஆருஷி

ஆருஷி என்றால், அதற்கு சூரியன் முதல் கதிர் என்று பொருள். சூரியன் கொண்டுவரும் புத்துணர்ச்சி, நேர்மறையான ஆற்றல் மற்றும் பிரகாசமான எதிர்காலத்துக்கு அளிக்கப்படும் வாக்குறுதி என்பனவற்றைக் குறிக்கிறது.

விவனிகா

விவனிகா என்றால் சூரியனிடம் இருந்து வந்து பூமியை எழுப்பும் முதல் பொன் கதிர்கள் என்று பொருள். இது உயிராற்றல், உயிர் சக்தி மற்றும் எல்லையற்ற சாத்தியக்கூறுகள் என்பதைக் குறிக்கும்.

ஆஹான்

ஆஹான் என்றால், விடியல் அல்லது சூரிய உதயம் என்று பொருள். இந்தப் பெயருக்கு புதிய துவக்கங்கள் என்று பொருள். புதிய துவக்கம் என்பதை இந்தப் பெயர் குறிக்கும்.

அருணோதய்

அருணோதய் என்றால், சூரிய உதயம் என்று பொருள். இது புதிய நாளின் துவக்கம் என்பதைக் குறிக்கும். இது நம்பிக்கை மற்றும் எல்லையற்ற வாய்ப்புக்கள் என்பதைக் குறிக்கும்.

விஹான்

விஹான் என்றால் விடியல் என்று பொருள். இதற்கு புத்துணர்ச்சி மற்றும் நேர்மறை எண்ணம் என்ற அர்த்தமும் உள்ளது. இது ஒரு நாளின் புதிய துவக்கம் என்பதைக் குறிக்கும். இது புதிய நம்பிக்கை மற்றும் பிரகாசமான துவக்கம் என்பனவற்றை குறிக்கும்.

உஷிக்

விடியலை வழிபடுபவர் அல்லது அதிகாலையில் துயில் எழுபவர் என்று பொருள். உஷிக் என்றால் தெய்வீகத்தன்மை, ஒழுக்கம் மற்றும் விடியலுடன் தொடர்புடைய ஆன்மீகத் தன்மை என்பதை இந்தப் பெயர் சுட்டிக்காட்டுகிறது.

அபியுதித்

அபியுதித் என்றால் உதித்து வரும் சூரியன் என்று பொருள். இது வளர்ச்சி மற்றும் சூரிய உதயத்தின் நேர்மறையான ஆற்றல் என்பதைக் குறிக்கும்.

உதிஷா

உதிஷா என்றால் சூரியனின் முதல் ஒளி என்று பொருள். புதிய விடியலின் துவக்கம். புத்துணர்வுடன் துவங்கும் நாள், புதிய துவக்கம் என எண்ணற்ற அர்த்தங்களை இந்தப் பெயர் கொடுக்கிறது.