Children's Day 2024: உங்கள் குழந்தைகளுடன் வேடிக்கை மற்றும் கொண்டாட்டங்கள் நிறைந்த நாளாக மாற்ற 5 வழிகள்
குழந்தைகள் தினம் இன்று. நடனம் முதல் ஒன்றாக கேக் வெட்டுவது வரை, உங்கள் குழந்தைகளுடன் இந்நாளைக் கொண்டாட 5 வேடிக்கையான யோசனைகள் இங்கே கொடுத்திருக்கிறோம். முழு விவரத்தை அறிய தொடர்ந்து படிக்கவும்.

குழந்தைகள் தினம் 2024: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ‘நேரு மாமா’ என்று அன்புடன் நினைவுகூரப்படும் ஜவஹர்லால் நேரு குழந்தைகளை மிகவும் நேசித்தார், மேலும் தனது நாட்களை அவர்களுடன் கழிக்க விரும்பினார். குழந்தைகள் தினத்தன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் குழந்தைகளையும் அவர்களின் அப்பாவித்தனத்தையும் கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
பெற்றோர்களும் இந்த நாளை தங்கள் குழந்தைகளுடன் வீட்டில் கொண்டாடுகிறார்கள், அவர்கள் மீது நிறைய அன்பையும் அக்கறையையும் பொழிகிறார்கள். இந்த ஆண்டு குழந்தைகள் தினத்தைக் கொண்டாட நாம் தயாராகி வருவதால், உங்கள் குழந்தைகளுடன் இந்த சிறப்பு நாளை செலவிட சில வேடிக்கையான வழிகளைப் பாருங்க.