படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகள்! அடித்து திருத்துவதா? அறிவுறுத்துவதா? எப்படி உற்சாகப்படுத்தவேண்டும்? இதோ வழிகள்!
படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளை அடித்து திருத்துவதா அல்லது அறிவுறுத்தி திருத்துவதா என்ற குழப்பம் எண்ணற்ற பெற்றோருக்கு உள்ளது. எனவே அவர்களை எப்படி உற்சாகப்படுத்தவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகள் படிக்க அடம்பிடிக்கிறார்களா? அவர்களை அடித்து திருத்துவதா அல்லது அறிவுறுத்துவதா? அவர்களை படிக்க எப்படி ஊக்கப்படுத்தவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். படிக்கும் மனநிலையிலே இல்லாத உங்கள் குழந்தையை படிக்கவைக்க நீங்கள் செய்யவேண்டியது என்ன? உங்கள் குழந்தைகளை படிப்பிலும் சிறிது ஆர்வம் காட்ட வைக்கவேண்டும். இது சிலருக்கு எளிதாகவும், சிலருக்கு மிகச் சவாலாகவும் இருக்கும். படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளை நாம் வழிக்குக்கொண்டு வருவது மிகவும் சிரமம் ஆகும். அவர்கள் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். சரியான அணுகுமுறையில் நீங்கள் அவர்களை படிக்க உற்சாகப்படுத்த முடியும். இதனால் அவர்களின் படிப்பும் அதிகரிக்கும். உங்கள் குழந்தையை படிக்க உற்சாகப்படுத்துவது எப்படி? குறிப்பாக படிப்பதற்கு அடம்பிடிக்கும் குழந்தைகளை வழிக்குக் கொண்டுவருவது எப்படி?
நேர்மறையான படிக்கும் சூழல்
உங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல படிக்கும் சூழலை உருவாக்கிக்கொடுங்கள். அவர்கள் எவ்வித இடையூறுமின்றி படிக்க வசதி செய்துகொடுங்கள். ஒரு நல்ல ஒருங்கிணைக்கப்பட்ட சூழலில் அவர்கள் படிக்கட்டும். அந்த இடத்தில் நல்ல காற்று, வெளிச்சம் இருக்கட்டும். அங்கு அவர்களுக்கு முக்கியமாக தொந்தரவு இருக்கக்கூடாது. இதனால் அவர்களின் கவனம் சிதறாமல் இருக்கும். நன்றாக கவனிக்க முடியும். அவர்களுக்கு இது ஒழுக்கத்தை உருவாக்கும்.
சிறிய சாதிக்கக் கூடிய இலக்குகள்
பெரிய செயல்களையெல்லாம் சிறிதாக்குங்கள். உங்களால் எட்ட முடிந்த இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் குழந்தைகள் அதிகப்படியாக உணர மாட்டார்கள். அவர்களுக்கு செய்து முடித்த உணர்வை இது தரும். இதில் ஒவ்வொரு படியையும் அவர்கள் எட்டும்போது, அவர்களின் முன்னேற்றத்தை பாராட்டுங்கள். அவர்களின் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் குறையவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.