Tamil News  /  Lifestyle  /  Child Rearing Tips How To Raise Your Children To Be Honest And Intelligent Here Are The Tips

Child Rearing Tips : உங்கள் குழந்தைகளை நேர்மையானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் வளர்ப்பது எப்படி? இதோ டிப்ஸ்!

Priyadarshini R HT Tamil
Nov 19, 2023 04:00 PM IST

Child Rearing Tips : உங்கள் குழந்தைகளை நேர்மையானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் வளர்க்க வேண்டுமா? இதோ டிப்ஸ்!

Child Rearing Tips : உங்கள் குழந்தைகளை நேர்மையானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் வளர்ப்பது எப்படி? இதோ டிப்ஸ்!
Child Rearing Tips : உங்கள் குழந்தைகளை நேர்மையானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் வளர்ப்பது எப்படி? இதோ டிப்ஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

குழந்தைகளின் ரோல் மாடலாக இருங்கள்

குழந்தைகள் எப்போதும் அவர்களின் பெற்றோரை அப்படியே பின்பற்றுகிறார்கள். நீண்ட காலம் அவர்கள் பெற்றோரின் சாயல் அவர்களுடன் ஒட்டிக்கொள்கிறது. எனவே பெற்றோரின் செயல்கள் மற்றும் வார்த்தைகளே உங்கள் குழந்தைகளுக்கு நீண்ட நாள், சரி எது தவறு எது என்று கூறுகிறது. எனவே உங்கள் குழந்தைகள் சரியானதை கற்றுக்கொள்வதற்கு நீங்களே காரணமாகிறீர்கள் என்ற பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும். அவர்களுக்கு சரியானவற்றையும், நல்லனவற்றையும் கற்றுக்கொடுக்க வேண்டும். எனவே உங்கள் செயல்களிலும், உங்கள் பேச்சிலும் நேர்மை கட்டாயம் இருக்க வேண்டும். உங்கள் சிந்தனைகள், முடிவுகள், உணர்வுகள் என அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். எனவே உங்கள் தவறுகளை ஏற்க பழகுங்கள், பொறுப்பெடுத்துக்கொள்ளுங்கள். நேர்மைக்கான ஒரு ரோல் மாடலாக நீங்கள் உங்கள் குழந்தைக்கு இருக்கும்போது, அவர்களுக்கு ஒரு பலமான அடித்தளத்தை நீங்கள் உருவாக்குகிறீர்கள். அதை அவர்கள் பின்பற்றி அவர்களின் வாழ்வை வளமாக்கிக்கொள்வார்கள்.

கேள்வி கேட்பதை ஊக்குவியுங்கள்

உங்கள் குழந்தைகள் கேள்வி கேட்பதை ஊக்குவிக்க வேண்டும். புதிய விஷயங்கள் குறித்து அவர்கள் பேசுவதையும் நீங்கள் உற்சாகப்படுத்த வேண்டும். உங்கள் குழந்தை சிறியவராக இருந்தால், இன்றும் புதிய விஷயங்களை தெரிந்துகொள் விழைபவராக இருந்ததால், கட்டாயம் அவர்கள் கேள்வி கேட்காமல் இருக்கக்கூடாது என்பது முக்கியம். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கான விடைகளை அவர்கள் தெரிந்துகொள்ள உங்கள் அனுபவங்கள், புத்தகங்கள், உரையாடல்கள் வாயிலாக பதில் அளிக்க முயற்சி செய்யுங்கள். அவர்களை கேள்விகள் கேட்க ஊக்குவிப்பதன் மூலம், அவர்களுக்கு பிரச்னைகளை தீர்க்கும் திறன், காரணங்களை அறியும் தன்மை ஆகியவை தூண்டப்படும். இதனால் அவர்களால் சுதந்திரமாகவும், லாஜிக் உடனும் சிந்திக்க முடியும்.

அறத்துடன் முடிவெடுக்கும் திறன்

அவர்கள் குழந்தைகள்தானே அவர்களுக்கு அறவழி என்பது எதற்கு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அறத்துடன் வாழ இப்போதிருந்தே கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம். அறம் குறித்து அவர்களிடம் பேச வேண்டும். சிறு வயது முதலே அவர்கள் அறத்தின் வழியில்தான் செல்ல வேண்டும். தங்களின் நடவடிக்கைகள் மற்றவர்களை எப்படி பாதிக்கும் என்பது குறித்து அவர்கள் சிந்திக்க வேண்டும். அடுத்தவர்கள் நம்மை காயப்படுத்தும்போது நமக்கு ஏற்படும், அதே வலிதான், நாம் அவர்களை காயப்படுத்தும்போதும் ஏற்படும் என்று அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அடுத்தவர்களிடம் அன்பு, கருணை, அனுதாபம் காட்டுவது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டும். நற்செயல்களை செய்வதற்கு அவர்களை ஊக்குவிக்கவேண்டும். இதுவும் நேர்மையாக குழந்தைகள் வளர்வதற்கு துணைபுரியும். இதனால் அவர்கள் முடிவெடுக்கும்போது நேர்மையை கடைபிடிப்பார்கள்.

பாதுகாப்பான இடத்தை உருவாக்க வேண்டும்

விதிகளை மீறி நீங்கள் நடக்கக்கூடாது. நீங்களே தவறு செய்தாலும் முன்வந்து மன்னிப்பு கேட்டுவிடவேண்டும். உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக உணரும் ஒரு சூழலை அவர்களுக்கு உருவாக்கி தரவேண்டும். அவர்கள் தங்களை வெளிப்படுத்தும்போது அச்சமின்றி நடந்துகொள்ளும் சூழலை உருவாக்கித்தரவேண்டும். திறந்த மனதுடன் பேச அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு நீங்கள் அவர்கள் பேச வருவதை நன்றாக கவனிக்க வேண்டும். அவர்களின் சிந்தனை, அக்கறை என அனைத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். ஏதாவது அவர்களை வருத்தம் கொள்ளவைக்கிறதா? அவர்களுக்கு பிடித்தது என்ன என்று அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் கருத்தில் இருந்து வேறுபட்டாலும் அவர்களின் கருத்தை நீங்கள் மதிக்கவேண்டும். இது உண்மையாக இருக்கவும், நேர்மையாக வளரவும் ஊக்குவிக்கும். அவர்கள் வளரவளர உங்களிடம் எதையும் பகிர்வதற்கு தயங்க மாட்டார்கள். உங்கள் வழிகாட்டல்களை பெறவும் அவர்களிடம் தயக்கம் இருக்காது.

நேர்மையை கற்றுக்கொடுக்க வேண்டும்

குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்த எதுவும் அவர்களுக்கு தெரியாது. அவர்களின் பெற்றோர், மூத்தவர்கள் மற்றும் ஆசிரியர்களால் அவர்கள் ஒவ்வொன்றையும் புரிந்துகொள்கிறார்கள். பின்னர் அவர்களின் அனுபவம் மற்றும் காலச்சூழல் இவற்றால் புரிந்துகொள்கிறார்கள். வாழ்வின் எல்லா சூழலிலும் நேர்மை எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்கு பெற்றோர்தான் கற்றுக்கொடுக்க வேண்டும். உண்மையுடனும், நேர்மையுடனும், கொள்கைகளுடன் நடந்துகொள்வது வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்று அவர்களுடன் உரையாட வேண்டும். உறவில் நேர்மை என்ன செய்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். எனவே அவர்கள் நன்மதிப்புகளுடனும், கொள்கையுடனும் வாழ்வது எவ்வளவு முக்கியம் என்பதை கற்றுக்கொடுங்கள். எந்த சூழலிலும் அறநெறி தவறாது வாழ்தல் எவ்வளவு அவசியம் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்தால்தான் அவர்கள் வளரும்போது நேர்மையுடனும், நாணயத்துடனும், புத்திசாலிகளாகவும் வளர்வார்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்