குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : ‘வாழ்வில் வரமாய் வந்த குழந்தைகள்’ இவையெல்லாம் உங்கள் குழந்தைகளிடம் இருக்கிறதா பாருங்கள்!
குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : அதிக நினைவாற்றல் திறன் கொண்டவர்களை மட்டும் வரம் என்று கூற முடியாது. கிரியேட்டிவானவர்கள், பிரச்னைகளைத் தீர்க்கும் எண்ணம் கொண்டவர்கள், விளையாட்டு துறைகளில் முன்னேறுபவர்கள் அல்லது கலைத்திறன் கொண்டவர்கள் என அது அனைத்தும் சேர்ந்தது என்று கூறலாம்.

உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷய முக்கியமான விஷயங்கள் என்ன? உங்கள் குழந்தைகளின் நல்ல குணங்களை கண்டுபிடித்து அதை குழந்தைப் பருவத்தில் இருந்தே வளர்த்தெடுத்தால் அவர்களின் வளமான எதிர்காலத்துக்கு அது உதவும். அதிக நினைவாற்றல் திறன் கொண்டவர்களை மட்டும் வரம் என்று கூற முடியாது. கிரியேட்டிவானவர்கள், பிரச்னைகளைத் தீர்க்கும் எண்ணம் கொண்டவர்கள், விளையாட்டு துறைகளில் முன்னேறுபவர்கள் அல்லது கலைத்திறன் கொண்டவர்கள் என அது அனைத்தும் சேர்ந்தது என்று கூறலாம். பள்ளிப் படிப்பை கடந்து உங்கள் குழந்தைகளிடம் உள்ள தனித்திறமைகளை பெற்றோர் உற்றுநோக்க வேண்டும்.
வலுவான தலைமைப் பண்புகள்
ஒரு சில குழந்தைகள் தாங்களாகவே முன்வந்து தலைமைப் பண்புகளை ஏற்பார்கள். அவர்களின் நண்பர்களை தன்னம்பிக்கையுடன் வழிநடத்துவார்கள். வலுவான முடிவெடுக்கும் திறனை காட்டுவார்கள். மற்றவர்களை கவர்ந்து இழுப்பார்கள், இவையெல்லாம் ஆரம்ப காலகட்டத்திலே தெரியவரும்.
பர்ஃபெக்ட்டானவர்களாக இருப்பார்கள்
உங்கள் குழந்தைகள் அவர்களே உயர்ந்த தரம் கொண்டவர்களாக இருப்பார்கள். உயர்ந்த எண்ணங்களும், குறிக்கோள்களும் கொண்டிருப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியவில்லையென்றால் பாதிக்கப்படுவார்கள். அவர்களையே விமர்சித்துக்கொள்வார்கள்.