சிட்லம் பொடி, கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நான்கு வகை பருப்பு சேர்த்து செய்வது! ஆரோக்கியமான டிஃபன் சைட்டிஷ்!
சிட்லம் பொடி, கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நான்கு வகை பருப்பு சேர்த்து செய்யப்படும் வித்யாசமான மற்றும் ஆரோக்கியமான டிஃபன் சைட்டிஷ்!
பொடி வகைகள் சிறந்த சைட்டிஷ்களாகும். இவற்றை தயாரித்து வைத்துக்கொண்டால், நாம் சைட்டிஷ்கள் செய்ய முடியாத காலகட்டத்தில் மிகவும் உற்ற துணையாக இருக்கும். இவற்றை சாதத்திலும் சேர்த்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சுவை நிறைந்ததாக இருக்கும். சட்னி செய்ய முடியாத காலத்தில் கைகொடுக்கும். ஆனால் சிலருக்கு பொடி வகைகள் மிகவும் பிடித்தவையாக இருக்கும். அவர்கள் இதை சாப்பிடும்போது தான் டிபஃன் சாப்பிட்ட திருப்தியே கிடைக்கும். எனவே பொடி பிரியர்களுக்காக இந்த ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளத. ஒரே வகை பொடியை சாப்பிடுவது கட்டாயம் அலுப்பைக் கொடுக்கும். அதனால் தான் இந்த வித்யாசமான பொடி ரெசிபி உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பருப்பும் சேர்த்து செய்யப்படுவதால், இதை நீங்கள் சாதம் மற்றும் டிஃபன் இரண்டுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வழக்கமான இட்லிப்பொடியை தயாரிக்க கடலை பருப்பு மற்றும் உளுந்து பயன்படுத்தப்படும். ஆனால் இந்தப்பொடியை தயாரிக்க 4 வகை பருப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இந்தப்பொடி மிகுந்த சுவையானதாகவும். உங்கள் சாப்பாட்டுக்கு வித்யாசமான ருசியையும் தரும். இதில் கடைசியில் ஒரு தாளிப்பும் கொடுக்கப்படும். பொதுவாக பொடி வகைகளையும் செய்யும்போது, பெரும்பாலும் தாளிப்பு கொடுக்கப்படுவதில்லை. அரைத்து அப்படியே வைத்து விடுவார்கள். ஆனால் இந்தப்பொடியில் மட்டும் கொடுக்கப்படும் வித்யாசமான தாளிப்பு இந்தப்பொடிக்கு வித்யாசமான ருசியைத்தரும். எனவே கட்டாயம் கீழே கொடுக்கப்பட்டுள்ள ரெசிபியை பின்பற்றி இந்தப் பொடியை செய்து பாருங்கள். உங்கள் உணவின் சுவையை மேலும் அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – கால் கப்
உளுந்து – கால் கப்
துவரம் பருப்பு – கால் கப்
பாசி பருப்பு – கால் கப்
வர மிளகாய் – 10 (உங்கள் கார அளவுக்கு ஏற்ப அதிகம் அல்லது குறைவாக எடுத்துக்கொள்ளலாம். நீள மிளகாய் அல்லது குண்டு மிளகாய் என இரண்டில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
கடுகு – கால் ஸ்பூன்
பொட்டுக் கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானவுடன் அனைத்து வகை பருப்புக்களையும் சேர்த்து நல்ல பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதை தனியாக ஆறவைத்துவிடவேண்டும்.
அடுத்து வர மிளகாய், புளி, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து ஆறவிடவேண்டும். அதில் வறுத்த பருப்புகள் மற்றும் உப்பு சேர்த்து காய்ந்த மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து, தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து, கடுகு சேர்த்து பொரிந்தவுடன், பொட்டுக்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுபட்டு வந்தவுடன், அரைத்து வைத்துள்ள பொடியில் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். இதை சாதம், இட்லி, தோசை ஆகியவற்றுக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். பருப்பு கலந்து செய்யப்படுவதால் சாதத்திலும் சேர்த்து சாப்பிடலாம்.
இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்களை ஹெச்டி. தமிழ் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணைய பக்கத்தில் இணைந்திருங்கள். ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்