Chicken White Kuruma : சிக்கன் வெள்ளை குருமா! சாதம், டிபஃன் இரண்டுக்கும் சிறந்த காம்பினேஷன்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chicken White Kuruma : சிக்கன் வெள்ளை குருமா! சாதம், டிபஃன் இரண்டுக்கும் சிறந்த காம்பினேஷன்!

Chicken White Kuruma : சிக்கன் வெள்ளை குருமா! சாதம், டிபஃன் இரண்டுக்கும் சிறந்த காம்பினேஷன்!

Priyadarshini R HT Tamil
Jan 10, 2024 10:00 AM IST

Chicken White Kuruma : சிக்கன் வெள்ளை குருமா! சாதம், டிபஃன் இரண்டுக்கும் சிறந்த காம்பினேஷன்!

Chicken White Kuruma : சிக்கன் வெள்ளை குருமா! சாதம், டிபஃன் இரண்டுக்கும் சிறந்த காம்பினேஷன்!
Chicken White Kuruma : சிக்கன் வெள்ளை குருமா! சாதம், டிபஃன் இரண்டுக்கும் சிறந்த காம்பினேஷன்!

பூண்டு – 8 பல்

பச்சை மிளகாய் – 4

(இதை மட்டும் தனியாக மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்)

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

தேங்காய் – அரை கப் (துருவியது)

சோம்பு – ஒரு ஸ்பூன்

கசகசா – அரை ஸ்பூன்

முந்திரி – 8

பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்

(இவையனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதை எடுத்து தனியாக வைத்துவிடவேண்டும்)

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 4

ஏலக்காய் – 1

பிரியாணி இலை – 1

ஸ்டார் சோம்பு – 1

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

சிக்கன் – கால் கிலோ (சுத்தம் செய்தது)

கறிவேப்பிலை – 1 கொத்து

மல்லித்தழை – கைப்பிடியளவு

செய்முறை

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, ஸ்டார் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

ஏற்கனவே அரைத்து வைத்துள்ள இஞ்சி-பூண்டு மற்றும் பச்சை மிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமானவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

தக்காளி நன்றாக குழைந்து வந்தவுடன், அதில் சிக்கன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து குக்கரை மூடி 6 விசில் விட்டு இறக்கினால் சுவையான சிக்கன் வெள்ளை குருமா சாப்பிட தயாராகிவிடும்.

இந்த குருமா இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், பூரி, சப்பாத்தி, சாதம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

இது வெள்ளை குருமா என்பதால் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் என எதுவும் சேர்க்கக்கூடாது. காரம் வேண்டுமெனில் கூடுதலாக பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் காரம் விரும்புபவர்கள் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.

வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக இந்த குருமா இருக்கும்.

Whats_app_banner
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.