சிக்கன் - மிளகு ரசம் : இது சிக்கன் - மிளகு ரசம்; வழக்கமானதைப் போல் அல்லாமல் வித்யாசமான சுவையில் அசத்தும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சிக்கன் - மிளகு ரசம் : இது சிக்கன் - மிளகு ரசம்; வழக்கமானதைப் போல் அல்லாமல் வித்யாசமான சுவையில் அசத்தும்!

சிக்கன் - மிளகு ரசம் : இது சிக்கன் - மிளகு ரசம்; வழக்கமானதைப் போல் அல்லாமல் வித்யாசமான சுவையில் அசத்தும்!

Priyadarshini R HT Tamil
Published Jun 09, 2025 03:36 PM IST

சிக்கன் - மிளகு ரசம் : இது சிக்கன் - மிளகு ரசம், வழக்கமான ரசத்தைப் போல் அல்லாமல் வித்யாசமான சுவையில் அசத்தும். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

சிக்கன் - மிளகு ரசம் : இது சிக்கன் - மிளகு ரசம்; வழக்கமானதைப் போல் அல்லாமல் வித்யாசமான சுவையில் அசத்தும்!
சிக்கன் - மிளகு ரசம் : இது சிக்கன் - மிளகு ரசம்; வழக்கமானதைப் போல் அல்லாமல் வித்யாசமான சுவையில் அசத்தும்!

தேவையான பொருட்கள்

• சிக்கன் – 100 கிராம்

• உப்பு – தேவையான அளவு

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• இஞ்சி – பூண்டு பேஸ்ட் – ஒரு ஸ்பூன்

• தக்காளி – 3

• பூண்டு – 8 பல்

• பச்சை மிளகாய் – 1

• மிளகு – 2 ஸ்பூன்

• சீரகம் – ஒரு ஸ்பூன்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• மல்லித்தழை – சிறிதளவு

• எண்ணெய் – 2 ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – கால் ஸ்பூன்

செய்முறை

1. ஒரு குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். பின்னர் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து 4 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவேண்டும்.

2. ஒரு மிக்ஸி ஜார் அல்லது சிறிய உரலில், மிளகு, சீரகம், பச்சை மிளகாய், தோலுடன் பூண்டு பற்கள் சேர்த்து கொரகொரப்பாக இடித்துக்கொள்ளவேண்டும்.

3. குக்கரில் வெந்த சிக்கனுடன், இதையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அடுத்து கறிவேப்பிலை மற்றும் மல்லித்தழை சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

4. ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து சிக்கன் – மிளகு ரசத்தில் சேர்க்கவேண்டும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் சூப்பர் சுவையான சிக்கன் – மிளகு ரசம் தயார்.

இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். சளி, இருமல், காய்ச்சல் என குளிர் காலத்தில் இதைச் செய்து சாப்பிடும்போது அது உங்களுக்கு இதமானதாக இருக்கும். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுலவார்கள். இதை சூப்பாகவும் பருகலாம் அல்லது சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.