சிக்கன் மசாலா : சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்ற சிக்கன் மசாலா; ஸ்பெஷல் பொடி அரைத்து சேர்த்து செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சிக்கன் மசாலா : சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்ற சிக்கன் மசாலா; ஸ்பெஷல் பொடி அரைத்து சேர்த்து செய்வது எப்படி?

சிக்கன் மசாலா : சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்ற சிக்கன் மசாலா; ஸ்பெஷல் பொடி அரைத்து சேர்த்து செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Published Jun 03, 2025 10:00 AM IST

சிக்கன் மசாலா : இதை சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவை அள்ளும். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒன்றாக இந்த சிக்கன் மசாலா இருக்கும். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

சிக்கன் மசாலா : சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்ற சிக்கன் மசாலா; ஸ்பெஷல் பொடி அரைத்து சேர்த்து செய்வது எப்படி?
சிக்கன் மசாலா : சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்ற சிக்கன் மசாலா; ஸ்பெஷல் பொடி அரைத்து சேர்த்து செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

சிக்கன் மேரியனேட் செய்வது எப்படி?

• சிக்கன் – அரை கிலோ

• உப்பு – சிறிதளவு

• மஞ்சள் தூள் – 4 சிட்டிகை

(ஒரு பாத்திரத்தில் சிக்கன், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து மூடிவைத்து மேரியனேட் செய்துகொள்ளவேண்டும்)

ஃபிரஷ் மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

• வர மல்லி – ஒரு ஸ்பூன்

• ஏலக்காய் – 2

• கிராம்பு – 6

• சீரகம் – அரை ஸ்பூன்

• பட்டை – 4 துண்டு

• வெந்தயம் – கால் ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

(ஒரு கடாயில் மல்லி, ஏலக்காய், கிராம், பட்டை, சீரகம், வெந்தயம், கடுகு சேர்த்து ட்ரையாக வறுக்கவேண்டும். அதை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும்)

தாளிக்க தேவையான பொருட்கள்

• எண்ணெய் – 50 மில்லி

• இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

• பூண்டு பல் – 20

• வர மிளகாய் – 2

• மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்

• கஷ்மீரி மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• உப்பு – தேவையான அளவு

• எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்

செய்முறை

1. ஒரு கடாயில் மேரியனேட் செய்த சிக்கனை சேர்த்து மூடிவைக்கவேண்டும். அதில் உள்ள தண்ணீர் வெளியேறிவிடும். தண்ணீர் வெளியேறிய பின்னர், அதை வடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

2. பின்னர் அதே கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், சிக்கனை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதை தனியாக வைத்துவிட்டு, அதே எண்ணெயில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

3. பச்சை வாசம் போனவுடன், பூண்டு, வர மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும். அடுத்து கறிவேப்பிலை, மிளகாய்த் தூள், கஷ்மீரி மிளகாய்த் தூள் சேர்த்து நன்றான வதக்கவேண்டும். அடுத்து உப்பு, அரைத்த ஃபிரஷ் மசாலாப் பொடியை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, வறுத்து வைத்துள்ள சிக்கன் சேர்க்கவேண்டும். அடுத்து 2 ஸ்பூன் எலுமிச்சை பழத்தின் சாறு சேர்த்து கலந்துவிட்டு, சில நிமிடங்கள் நன்றாகப் பிரட்டிவிட்டு, வேகவைத்து எடுத்தால் சூப்பர் சுவையான சிக்கன் மசாலா தயார்.

இதை சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவை அள்ளும். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒன்றாக இந்த சிக்கன் மசாலா இருக்கும். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.