Chicken Chukka : மாதம்பட்டி ஸ்பெஷல் ரெசிபி! சிக்கன் சுக்கா! தயிர் சாதத்துடன் தொட்டு சாப்பிட அடடா எத்தனை அருமை!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chicken Chukka : மாதம்பட்டி ஸ்பெஷல் ரெசிபி! சிக்கன் சுக்கா! தயிர் சாதத்துடன் தொட்டு சாப்பிட அடடா எத்தனை அருமை!

Chicken Chukka : மாதம்பட்டி ஸ்பெஷல் ரெசிபி! சிக்கன் சுக்கா! தயிர் சாதத்துடன் தொட்டு சாப்பிட அடடா எத்தனை அருமை!

Priyadarshini R HT Tamil
Jul 06, 2024 05:58 AM IST

Chicken Chukka : மாதம்பட்டி ரங்கராஜின் ஸ்பெஷல் ரெசிபி, சிக்கன் சுக்கா செய்வது எப்படி தெரியுமா? தயிர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அடடா எத்தனை அருமையாக இருக்கும் பாருங்கள்.

Chicken Chukka : மாதம்பட்டி ஸ்பெஷல் ரெசிபி! சிக்கன் சுக்கா! தயிர் சாதத்துடன் தொட்டு சாப்பிட அடடா எத்தனை அருமை!
Chicken Chukka : மாதம்பட்டி ஸ்பெஷல் ரெசிபி! சிக்கன் சுக்கா! தயிர் சாதத்துடன் தொட்டு சாப்பிட அடடா எத்தனை அருமை!

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 2

ஏலக்காய் – 1

ஸ்டார் சோம்பு – 1

பிரியாணி இலை – 1

கறிவேப்பிலை – ஒரு கொத்து

வர மிளகாய் – 4

பச்சை மிளகாய் – 2

சின்ன வெங்காயம் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 2 (அரைத்தது)

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – அரை ஸ்பூன்

மல்லித்தூள் – அரை ஸ்பூன்

மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஸ்டார் சோம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவேண்டும்.

பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வர மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது என ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

பின்னர் சின்ன வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். அடுத்து அரைத்த தக்காளி விழுதுகளைச் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை மசிக்கவேண்டும்.

அடுத்து உப்பு, மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

கடைசியாக சிக்கன் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். சிக்கன் வேகும் வரையும், எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கி எடுத்தால் சுவையான சிக்கன் சுக்கா மாதம்பட்டி ரங்கராஜ் சுவையில் தயார்.

இதை டிஃபன், சாதம், வெரைட்டி ரைஸ் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

குறிப்பாக இந்த சிக்கன் சுக்காவை தயிர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சுவை அள்ளும்.

இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் ஒன்றாக இருக்கும். இதை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். எனவே கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மனஅழுத்தத்துக்கு மருந்து

சிக்கனில் டிரிப்டோஃபன் மற்றும் அமினோ அமிலம் உள்ளது. இவையிரண்டும் உடலில் செரோட்டினின் சுரக்க உதவுகிறது. இது உங்கள் மனநிலையை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு வேதிப்பொருள்.

இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் மூளை இயக்கத்துக்கு உதவுகிறது

வைட்டமின் பி12 மற்றும் சோலைன் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்துக்கும் உதவுகிறது. வயோதிகர்களுக்கு நினைவாற்றலை வழங்குகிறது.

சாப்பிடுவதற்கு எளிதானது

சிக்கன் சாப்பிடுவது எளிதானது. கடித்து விழுங்க சிறந்தது. சுவை நிறைந்தது. இதில் அதிக புரதச்சத்து அதிகம் உள்ளது.

சிக்கன் தசையை வலுப்படுத்துகிறது

இதில் உயர்தர புரதச்சத்து உள்ளது. 30 கிராம் புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

எலும்பை வலுப்படுத்துகிறது

இதில் உள்ள புரதச்சத்து எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

எடை இழக்க உதவுகிறது

புரதச்சத்து நிறைந்தது. அது ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது.

சிக்கனை முழுமையாக சமைத்துதான் சாப்பிட வேண்டும். முறையாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் உணவில் இருந்து பரவும் நோய்கள் குணமாகும். 165 டிகிரியில் அதை எப்போதும் சமைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது சளி, இருமலை குணப்படுத்த உதவுகிறது. இது சிங்க் மற்றும் புரதச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.