தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Chicken Chukka Fried And Fried Chicken Chukka

Chicken Chukka: வறுத்து அரைச்ச சிக்கன் சுக்கா.. பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊற வைக்கும்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 16, 2024 12:08 PM IST

வறுத்து அரைத்த சிக்கன் சுக்கா இப்படி ஒரு முறை செய்து பாருங்க

சிக்கன் சுக்கா ரெசிபி
சிக்கன் சுக்கா ரெசிபி

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

சிக்கன்

மஞ்சள் துள்

மிளகாய் தூள்

கரம் மசாலா

மல்லித்தூள்

உப்பு

இஞ்சி

பூண்டு

தயிர்

எண்ணெய்

சோம்பு

கறிவேப்பிலை

மல்லி இலை

வெங்காயம்

தக்காளி

செய்முறை

ஒரு கிலோ சிக்கனை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். நன்றாக தண்ணீரை வடித்து விட்டு கொள்ள வேண்டும். இதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். ஒரு ஸ்பூன் 3 ஸ்பூன் மிளகாய் தூளை சேர்க்க வேண்டும். 2 மல்லி தூளை சேர்த்து கொள்ள வேண்டும். இரண்டு ஸ்பூன் கரம் மசாலா பவுடரையும் சேர்த்து கொள்ள வேண்டும். 

இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் இரண்டு குழி கரண்டி அளவு கெட்டியான தயிரை கலந்து கொள்ள வேண்டும். மேலும் அதில் இரண்டு ஸ்பூன் கடலெண்ணெய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இந்த மசாலா கலந்த கலவையை குறைந்தது அரை மணி நேரம் ஊற விட வேண்டும்.

இப்போது ஒரு சூடான கடாயில் இரண்டு ஸ்பூன் மிளகு, இரண்டு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மல்லி விதை ஒரு ஸ்பூன் சோம்பு , இரண்டு வத்தல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும். இல்லை என்றால் எளிதில் கறுகி விடும். இந்த மசாலா பொருட்கள் வாசம் வந்த பிறகு அதை வேறு தட்டிற்கு மாற்றி ஆற விட வேண்டும். நன்றாக ஆறிய மசாலா பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு இரு ஸ்பூன் சோம்பு தூளை சேர்த்து பொரிய விட வேண்டும். பின்னர் ஒரு கிலோ சிக்கனுக்கு அரைக்கிலோ அளவு வெங்காயத்தை எடுத்து கொள்ள வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறிய பிறகு அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து வதக்க வேண்டும். 

இஞ்சி பூண்டு பச்சை வாடை போன பிறகு அதில் இரண்டு பழுத்த தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். தக்காளி வதங்கிய பிறகு ஏற்கனவே மசாலா சேர்த்து ஊற வைத்த சிக்கனை சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் சிக்கனுக்கு தேவையான உப்பை சரி பார்த்து சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும். தேவை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை சேர்த்து கொள்ள வேண்டும்.

சிக்கன் நன்றாக வெந்த பிறகு அதில் ஏற்கனவே நாம் அரைத்து வைத்த பொடியை சேர்த்து கிளற வேண்டும். இரண்டு நிமிடம் கிளறினால் போதுமானது. அதில் பச்சை கறிவேப்விலை மற்றும் மல்லி இலையை பொடியாக நறுக்கி சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். அவ்வளவு தான் ருசியான சிக்கன் சுக்கா மசாலா ரெடி

ருசி அருமையாக இருக்கும் சூடான சாதத்துடன் சேர்த்து சப்பிட ருசியாக இருக்கும். மேலும் இந்த சிக்கன் சுக்காவுடன் புரோட்டா சப்பாத்தி இட்லி தோசை என எதை சேர்த்து சாப்பிட்டாலும் மிகவும் நன்றாக இருக்கும் . வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் வேண்டும் என கேட்பார்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்