Chicken Angara : சிக்கன் அங்காரா; வட இந்திய ரெஸ்டாரென்ட்களில் மட்டுமல்ல; வீட்டிலும் செய்ய முடியும்! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chicken Angara : சிக்கன் அங்காரா; வட இந்திய ரெஸ்டாரென்ட்களில் மட்டுமல்ல; வீட்டிலும் செய்ய முடியும்! இதோ ரெசிபி!

Chicken Angara : சிக்கன் அங்காரா; வட இந்திய ரெஸ்டாரென்ட்களில் மட்டுமல்ல; வீட்டிலும் செய்ய முடியும்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Feb 01, 2025 11:47 AM IST

Chicken Angara : சிக்கன் அங்காரா, வட இந்திய ரெஸ்டாரென்ட்களில் அதிகம் பரிமாறப்படும் ரெசிபி. இதை வீட்டில் செய்வது எப்படி என்று பாருங்கள்.

Chicken Angara : சிக்கன் அங்காரா; வட இந்திய ரெஸ்டாரென்ட்களில் மட்டுமல்ல; வீட்டிலும் செய்ய முடியும்! இதோ ரெசிபி!
Chicken Angara : சிக்கன் அங்காரா; வட இந்திய ரெஸ்டாரென்ட்களில் மட்டுமல்ல; வீட்டிலும் செய்ய முடியும்! இதோ ரெசிபி! (yummy tummy )

மசாலா செய்ய தேவையான பொருட்கள்

• பட்டை – 1

• கிராம்பு – 4

• ஸ்டார் சோம்பு – 1

• ஏலக்காய் – 1

• ஜாவித்ரி – அரை

• வர மல்லி விதைகள் – அரை ஸ்பூன்

• சீரகம் – அரை ஸ்பூன்

• முந்திரி – 5

• மிளகு – அரை ஸ்பூன்

• வர மிளகாய் – 1 முதல் 3 வரை (உங்கள் கார அளவுகளுக்கு எடுத்துக்கொள்ளலாம்)

ஒரு கடாயில் பட்டை, கிராம்பு, ஸ்டார் சோம்பு, ஏலக்காய், ஜாவித்திரி, வர மல்லி விதைகள், சீரகம், முந்திரி, பாதாம், மிளகு, வர மிளகாய் என அனைத்தையும் சேர்த்து ட்ரை ரோஸ்ட் செய்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து பொடித்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

சிக்கன் அங்காரா செய்ய தேவையான பொருட்கள்

• எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி

• பெரிய வெங்காயம் – 1

(பொடியாக நறுக்கி எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

• தக்காளி – 1

(பொரித்து வைத்துள்ள வெங்காயத்துடன், தக்காளியை சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவேண்டும்)

• சிக்கன் – அரை கிலோ

• இஞ்சி – பூண்டு பேஸ்ட் – ஒரு ஸ்பூன்

• தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

• கஷ்மீரி மிளகாய்த் தூள் – ஒன்றரை டேபிள் ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• கசூரி மேத்தி – ஒரு ஸ்பூன்

• மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை

சுத்தம் செய்த சிக்கனில் அரைத்து வைத்துள்ள வெங்காயம் – தக்காளி பேஸ்ட், இஞ்சி – பூண்டு பேஸ்ட், தயிர், கஷ்மீரி மிளகாய்த் தூள், உப்பு, கசூரி மேத்தி என அனைத்தையும் சேர்த்து நன்றாக மேரியனேட் செய்துகொள்ளவேண்டும்.

அடுத்த நாள் செய்வதற்கு முதல் நாள் இரவே மேரியனேட் செய்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் நன்றாக இருக்கும். ஒரு இரவு இதை நீங்கள் மேரியனேட் செய்து வைத்தால்தான் சுவை நன்றாக இருக்கும். குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது மேரியனேட் செய்ய வேண்டும்.

பின்னர் வெங்காயம் பொரித்த எண்ணெயை கடாயில் சேர்த்து மேரியனேட் செய்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்கவேண்டும். மூடிவைத்து வேகவைக்கவேண்டும். இடையிடையே திறந்து கிளறிவிடவேண்டும். சிக்கன் நன்றாக வெந்தவுடன், மல்லித்தழை தூவி இறக்கினால், சூப்பர் சுவையான வட இந்திய சிக்கன் அங்காரா தயார்.

இதை நீங்கள் இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, பூரி, பரோட்டா என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

ஸ்மோக் செய்வது எப்படி?

இந்த சிக்கன் அங்காரவை ஸ்மோக் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். அதற்கு சூடான அடுப்புக்கறியை ஒரு கிண்ணத்தில் வைத்து, அதை கடாயின் மத்தியில் வைத்து, அந்த கரியில் நெய் விட்டு மூடிவைத்தால் அதில் இருந்து புகை வரும். அந்த புகை உள்ளே இருக்குமாறு செய்யவேண்டும். அப்போது அந்தப்புகை சிக்கன் முழுவதிலும் பரவி சூப்பர் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு கறி கிடைக்கவில்லையென்றாலும் அந்த ஸ்டைப்பை செய்யாமலும் சிக்கன் அங்காராவை செய்து சாப்பிடலாம். இது மிகவும் சுவையானதாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிக்கன் அங்காரா பிடிக்கும். ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று கேட்பீர்கள். எனவே செய்து சாப்பிட்டு, மகிழுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.