Chia Seeds for Skin : முகப்பொலிவு, சரும ஆரோக்கியம் தரும் சியா விதைகள்! எப்படி பயன்படுத்துவது? இதோ குறிப்புகள்!
Chia Seeds for Skin : முகப்பொலிவு மற்றும் சரும ஆரோக்கியத்தை தரும் சியா விதைகளை நாம் நமது உடலுக்கு வெளியே எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளுங்கள். இதோ குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உங்கள் சருமத்திற்கு பளபளப்பை தரும் சியா விதைகள். சரும ஆரோக்கியத்துக்கு இதை எப்படி பயன்படுத்தவேண்டும என்று தெரிந்துகொள்ளுங்கள்.
சால்வியா ஹிஸ்பானிகா என்ற தாவரத்தில் இருந்து சியா விதைகள் பெறப்படுகின்றன. இந்த விதைகள் மெக்ஸிகோ மற்றும் கவுதமாலாவை பிறப்பிடமாகக் கொண்டவை. இதில் நார்ச்த்துக்கள், புரதச்சத்துக்கள் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் இ ஆகியவை உள்ளன.
100 கிராம் சியா விதைகளில் 16.5 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. சியா விதைகளை ஓரிரவு ஊறவைத்தால், அது ஜெல் போல் இருக்கும். இது உடலில் சூட்டை குறைத்து, செரிமானத்தை இலகுவாக்குகிறது.
சியா விதைகள் சருமத்துக்கு கொடுக்கும் நன்மைகள்
சியா விதைகள், சருமத்துக்கு நீர்ச்சத்தைக் கொடுக்கின்றன. சருமத்தை சூரியனில் காட்டுவதால் ஏற்படும் சேதத்தை போக்குகிறது. வீக்கத்தைக் குறைக்கிறது. சருமத்தை இறுக்கமாக்குகிறது.
வெளிப்புற மாசுக்களில் இருந்து சருமத்தை காக்கிறது. காயங்களை குணப்படுத்துகிறது. உள்புறத்தில் எடுத்துக்கொள்ளும்போது தரும் ஆரோக்கியத்தை வெளிப்புறத்தில் பயன்படுத்தும்போதும் சியா விதைகள் தருகின்றன. சரும ஆரோக்கியத்தைப் பேண சியா விதைகளை வெளிப்புறத்திலும் பயன்டுபடுத்தலாம்.
உங்கள் சருமத்தை பாதுகாக்க சியா விதைகளை பயன்படுத்துவது எப்படி?
சியா விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது, உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. இதை நீங்கள் சரும ஆரோக்கியத்துக்கும் பயன்படுத்தலாம்.
சியா விதைகளை ஓரிரவு ஊறவைத்துக்கொள்ளவேண்டும், அதை தேன் அல்லது தயிரில் கலந்து முகத்தில் பூசவேண்டும்.
சியா விதைகளை ஊறவைத்து வாழைப்பழம் மற்றும் அவகேடோவுடன் பிசைந்து முகத்தில் தடவவேண்டும். இது சருமத்தை மிருதுவாக்குகிறது. ஈரப்பதத்துடன் வைக்கிறது.
உடைத்த சியா விதைகளை தேங்காய் எண்ணெயில் கலந்து முகத்தில் நன்றாக ஸ்கிரப் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும்.
ஊறவைத்த சியா விதைகளில் கற்றாழைச்சாறை சேர்த்து உங்கள் சருமத்தில் பூச, சூரிய ஒளியால் ஏற்படும் வறட்சி மற்றும் வெடிப்புகள், சரும எரிச்சல் ஆகியவை குணமாகும்.
சியா விதைகளை வெள்ளரிச்சாறில் சில மணி நேரங்கள் ஊறவைக்கவேண்டும். அந்த தண்ணீரை கண்களைச்சுற்றி பஞ்சினால் ஒற்றி எடுக்க வேண்டும்.
சியா விதைகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் என்ன?
சியா விதைகளால் உங்களுக்கு அலர்ஜி என்றால், அதை உள்புறம் மற்றும் வெளிப்புறம் இரண்டுக்கும் பயன்படுத்தாதீர்கள். அதிகளவில் சியா விதைகளை சாப்பிட்டுவிட்டால் அவை உங்களுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். உங்கள் குடலில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, மலத்தை இறுகச்செய்துவிடும். எனவே சியா விதைகளை சாப்பிடும் முன் ஓரிரவு ஊறவைக்கவேண்டும்.
தொடர் மருந்து எடுப்பவர்கள், தைராய்ட் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோய் அல்லது உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சியா விதைகளை சாப்பிடும் முன் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. சருமத்தில் அவை எரிச்சல், சிவத்தல் போன்றவற்றை ஏற்படுத்தினால் உடனே அதை தவிர்த்தல் நல்லது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்