Chia Seeds Benefits : வெப்பத்தை தணிக்க உதவும் சியா விதைகள்.. ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?
சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதில் நார்ச்சத்தும் உள்ளது. இதை சாப்பிட்டால் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.

கோடை காலம் நெருங்கி விட்டது. பிப்ரவரி மாதமே இப்படி வெப்பம் என்றால் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் எப்படி இருக்கும் என்று யோசித்தால் பயமாக இருக்கிறது அல்லவா? வெப்பம் கண்டிப்பாக அதிகரிக்கத்தான் செய்யும். இதனால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் உணவுகளை கண்டிப்பாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அத்தகைய உணவுகளில் ஒன்று சியா விதைகள். இந்த சியா விதைகள் குடிநீரில் சேர்க்கப்படுவது சிறந்தது. சியா விதைகளை ஜூஸ் அல்லது தண்ணீரில் கலந்து தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம். சியா விதைகளை ஜூஸில் கலந்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
சியா விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
கலோரிகள்-138, புரதம்-4.7 கிராம், கொழுப்பு-8.7 கிராம், கார்போஹைட்ரேட்-11.9 கிராம், நார்ச்சத்து-9.8 கிராம், தினசரி தேவையில் 14 சதவீதம் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், ஜிங்க், வைட்டமின் பி1, வைட்டமின் பி3.