Chia Seed Benefits : புரதம், கால்சியம், இரும்பு என எண்ணற்ற சத்துக்களை அள்ளித்தரும் சியா விதையின் நன்மைகளை பாருங்க!
Benefits of Chia Seeds : நீங்கள் சியா விதைகளை சாப்பிடவேண்டும் என்பதற்கான 10 காரணங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
சியா விதைகளின் ஆரோக்கிய நன்மைகள்
சியா விதைகள், சிறிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்று. இதில் எண்ணிலடங்கா ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. குறிப்பாக சைவ உணவுகள் மட்டுமே உட்கொள்பவர்கள் தங்களின் தசைகளை வலுப்படுத்த வேண்டும் என்றாலோ அல்லது சரும ஆரோக்கியம் பெறவேண்டும் என்றாலோ சியா விதைகளை சாப்பிடவேண்டும். சைவம் உண்பவர்கள் ஏன் சியா விதைகளை சாப்பிடவேண்டும் என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
புரதச்சத்துக்கள் நிறைந்தது
சியா விதைகள் சிறியதாக இருந்தபோதிலும், அதில் அதிகளவில் புரதச்சத்துக்கள் உள்ளது. இதனால் இது தாவர அடிப்படையிலான சிறந்த உணவாகும். இது தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. தசைகளை வலுவடையச் செய்கிறது.
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்தது
சியா விதைகளில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. தசைகளை மீட்கிறது மற்றும் சருமத்தை பளபளக்கச் செய்கிறது.
நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது
சியா விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது, இந்த நார்ச்சத்துக்கள் உடலில் செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகிறது. வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை முறைப்படுத்தி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் நலனை அதிகரிக்கிறது.
முக்கிய அமினோ அமிலங்கள்
சியா விதைகளில் உடலுக்கு தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. இதனால் ஒரு முழு புரதச்சத்துக்கள் நிறைந்த ஒன்றாக மாற்றுகிறது. அது தசை வளர்ச்சி மற்றும் சரிசெய்வதற்கும் உதவுகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
சியா விதைகள் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை போக்குகிறது. ஃப்ரி ராடிக்கல்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. சருமத்தின் நிறத்தை காக்கிறது.
கால்சியம் நிறைந்தது
சியா விதைகளில் கால்சியம் அதிகம் உள்ளது. அது எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது. உடல் நன்றாக இயங்குவதற்கும் உதவுகிறது.
இரும்புச்சத்தை அதிகரிக்கிறது
சியா விதைகளில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் சியா விதைகளை சாப்பிடும்போது, மயக்கம், சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படாது. இது உடலுக் தேவையான ஆற்றலை வழங்குகிறது. மேலும் சருமத்திற்கும் ஊட்டமளிக்கிறது.
உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகிறது
சியா விதைகளை ஊறவைக்கும்போது ஒரு ஜெல் போல் ஆகிவிடும். இது நிறைய தண்ணீரை உறிஞ்சி வைத்துக்கொள்கிறது. இதனால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்களை வழங்குகிறது. தசைகள் சரியாக இயங்குவதற்கு உதவுகிறது.
சமையலறையில் பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது
சியா விதைகளை பல உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளலாம். இதை ஸ்மூத்திகள், ஓட்ஸ் உணவுகள் மற்றும் சாலட்கள், பேக்கிங் செய்யும் உணவுகள் என அனைத்திலும் சேர்த்துக்கொள்ளலாம்.
குளூட்டன் இல்லாதது
இதில் குளூட்டன் கிடையாது. இதில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் தசைகளை வலுப்படுத்துகிறது. சருமத்தை பளபளபாக்குகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்