Chia or Flax Seeds : உங்களுக்கு அதிக நன்மைகளைத் தருவது சியா விதைகளா அல்லது ஃப்ளாக்ஸ் சீடா? – விளக்கம்!
Chia or Flax Seeds : உங்களுக்கு அதிக நன்மைகளைத் தருவது சியா விதைகளா அல்லது ஃப்ளாக்ஸ் சீடா என்று தெரிந்துகொள்ளுங்கள். இங்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Chia or Flax Seeds : உங்களுக்கு அதிக நன்மைகளைத் தருவது சியா விதைகளா அல்லது ஃப்ளாக்ஸ் சீடா? – விளக்கம்!
ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னஸ் என்பதை மக்கள் இன்று கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால், சியா, ஃப்ளாக்ஸ், வெள்ளரி, தர்ப்பூசணி, பரங்கி போன்ற இந்த விதைகள் கடும் பிரபலமாகிவிட்டது. இவற்றில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
இந்த விதைகளை தண்ணீர், பழச்சாறுகள் மற்றும் பானங்களில் கலந்து பருகுவதன் மூலமும், ஓட்ஸ், சாலட்கள், பருப்பு வகைகளில் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் சியா மற்றும் ஃப்ளாக்ஸ் விதைககள் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
சியா மற்றும் ஃப்ளாக்ஸ் என்ற இரண்டு விதைகளிலும் உங்கள் உடலுக்கு தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவற்றில் நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான கொழுப்புகளும் உள்ளது.