Chia Seeds for Weight Loss : பக்கவிளைவுகளின்றி பட்டுன்னு குறைக்க வேண்டுமா உடல் எடையை? இந்த 2 விதைகள் போதும்!
உங்கள் உடல் எடையை குறைப்பதில் இந்த விதைகள் செய்யும் மாயங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
ஆரோக்கியமான முறையில், பக்கவிளைவுகளின்றி 2 வாரத்தில் 2 கிலோ எடையை குறைக்க முடியும்.
இதை செய்ய துவங்கும் முன் உங்கள் உடல் எடையை பார்த்துக்கொள்ளுங்கள். பின்னர் 7 நாட்கள் கழித்து மீண்டும் சரிபார்த்தால், 2 கிலோ கட்டாயம் குறைந்திருக்கும்.
தொப்பை குறைக்க விரும்புபவர்கள், இடுப்பைச் சுற்றியுள்ள சதையை குறைக்க விரும்புபவர்கள்.
சப்ஜா விதை
அடர் கருப்பு நிறத்தில் உள்ள திருநீற்று பச்சிலையில் விதைகள். ஊறவைத்து சாப்பிட வேண்டும். உடலுக்கு குளிர்ச்சியை தரும். ஜஸ்கீரீம் மற்றும் குளிர் பானங்களில் கலந்திருக்கும். உடலில் உள்ள கழிவுகளை அடித்து வெளியேற்றும்.
ரத்தத்தை சுத்தம் செய்யும். ஆனால் சப்ஜா விதைகள் விரைவாக எடையை குறைக்காது. 2 கிலோ எடையை குறைக்க வேண்டுமெனில் ஒரு மாதம் வரை எடுத்துக்கொள்ளும்.
சியா விதைகள்
சியா விதைகளில் அதிகளவு ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. குறைந்தளவு மட்டுமே கார்போஹைட்ரேட் உள்ளது. அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்தது. ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மை கொண்டது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் இதை எடுத்துக்கொள்ளலாம்.
மலச்சிக்கலை சரிசெய்யும். தொப்பை குறைக்க உதவும். உடல் இயக்கத்தை சீர்செய்யும். வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வேகமாக வெளியேற்றும். வயிறை நன்றாக சுத்தம் செய்யும். உடலுக்கு தேவையான ஆற்றலை தரும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
பயன்படுத்தும் முறை
இரண்டு விதைகளையும் ஒரு டம்ளர் தண்ணீரில் தனித்தனியாக சேர்க்க வேண்டும்.
சப்ஜா விதை ஊறி ஜெல் போல் வரும். சியா விதைகளும் பாதியளவு ஜெல் பதத்துக்கு வரும்.
இதில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும்.
காலையில் பல் துவக்கிய பின்னர் சிறிதளவு தண்ணீர் பருகிவிட்டு, சியா விதைகள் ஊறிய தண்ணீரை பருகவேண்டும்.
பின்னர் ஒரு மணி நேரத்தில் முக்கால் லிட்டம் தண்ணீரை பருகவேண்டும். உங்களுக்கு நல்ல ஃபிரஷ்ஷான உணர்வு கிடைக்கும். உடல் நன்றாக வியர்க்க துவங்கும். உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு தேவையில்லை.
மலச்சிக்கலை நீக்கி, தொப்பையை குறைக்கும். ஒரு வாரம் கட்டாயம் ஒரு நாள் கூட எடுக்க வேண்டும். கடும் உடற்பயிற்சிகள் செய்ய தேவையில்லை. ஆனால், எளிய உடற் பயிற்சிகள் செய்ய வேண்டும்.
இதேபோல் சப்ஜா விதைகளையும் எடுக்கலாம். ஆனால் இதை எடுத்தால் 2 கிலோ எடை குறைய ஒரு மாதம் ஆகும். சியா விதைகள் அதைவிட குறுகிய காலத்திலே உங்கள் உடல் எடையை குறைத்துவிடும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்