Chewing Food : உணவை ஏன் மென்று சாப்பிடவேண்டும்? எத்தனை முறை சவிக்க வேண்டும் தெரியுமா?
Chewing Food : உணவை மென்று விழுங்கவேண்டும் என்பதற்கு ஆயுர்வேதம் கூறும் விளக்கம் என்ன?
உங்கள் உணவை 32 முறை சவிக்க வேண்டும்
ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் என அனைவருமே உணவை சவித்து உண்ண வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறார்கள். அதுதான் சரியான உணவு உண்ணும் முறை. அவ்வாறு உணவை சவித்து உண்ணும்போதுதான், நீங்கள் செரிமான ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
ஆனால் உணவை 32 முறை நீங்கள் சவித்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரியுமா? இதற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான அறிவியல் காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
ஏன் 32 முறை?
சுகாதார நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து வல்லுனர்களும், உணவை விழுங்கும் முன் 32 முறை சவிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இது போகிறபோக்கில் கூறிவிட்டு போன எண் கிடையாது. உங்கள் உணவை நன்றாக சவித்து சாப்பிடும்போது, அது செரிமானத்துக்கு உதவுகிறது. இதனால் உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை எளிதாக உறிஞ்சுகிறது.
உணவை சிறு துகள்களாக்குகிறது
உங்கள் உணவை நீங்கள் சவித்து சாப்பிடும்போது, உங்கள் பற்கள் உணவை சிறு துகள்களாக உடைக்கிறது. உங்கள் வாயில் உள்ள உமிழ்நீரில் எண்சைம்கள் உள்ளது. அவை கார்போஹைட்ரேட்களை நீங்கள் சவிக்கும்போது உடைத்து கொடுத்துவிடுகிறது. உங்கள் உணவை நீங்கள் சவித்து சாப்பிடும்போது, உணவு செரிமானத்து ஏற்ற அளவில் சிறியதாகிறது. உங்கள் உடல் அதை எளிதாக உறிஞ்சிக்கொள்கிறது.
ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது
உணவை 32 முறை சவிப்பதால் அல்லது அதற்கு மேலும் மென்று விழுங்குவதால், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை அதிகளவில் வெளியிடுகிறது. உணவுப்பொருட்கள் சிறியதாக இருக்கும்போது, உங்கள் உடல் உணவில் உள்ள வைட்டமின்கள், மினரல்கள் உள்ளிட்ட தேவையான ஊட்டச்சத்துக்களை எளிதாக உறிஞ்சுகிறது.
எடை குறைப்பு
உங்கள் உணவை நன்றாக மென்று சாப்பிடுவது உங்களுக்கு உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. மெதுவாக சாப்பிடுவதாலும், உங்கள் உணவை நன்றாக சவித்து சாப்பிடுவதாலும், உங்கள் மூளை அதிகம் சாப்பிட்டுவிட்டீரிகள் என பதிவுசெய்து கொள்கிறது. இதனால் நீங்கள் அதிகம் சாப்பிடுவது தவிர்க்கப்பட்டு, உடல் எடையை குறைக்கவும், எடையை மேலாண்மை செய்யவும் உதவுகிறது.
செரிமானம் சிறக்கிறது
நன்றாக சவித்து வரும் உணவை செரிமானம் செய்வது உங்கள் வயிறு மற்றும் குடலுக்கு எளிதான காரியம். இதனால் செரிமானத்தால் ஏற்படும் வயிறு உப்புசம், வாயுத்தொல்லை மற்றும் செரிமானமின்மை ஆகிய பிரச்னைகளைப் போக்குகிறது.
அதிகம் சாப்பிடுவதை தடுக்கிறது
உங்கள் உணவை நன்றாக சவித்து, மெதுவாக சாப்பிடுவது, உங்கள் மூளைக்கு நீங்கள் அதிகம் சாப்பிட்டுவிட்ட உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால், நீங்கள் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உங்கள் உடல் எடை அதிகரிப்பது குறைக்கப்பட்டு, எடை முறையாக பராமரிக்கப்படுகிறது.
சாப்பிடுவதில் கவனம்
உங்கள் உணவை 32 முறை சவிப்பதால், நீங்கள் சாப்பிடும்போது கவனமுடன் இருக்கிறீர்கள் என்பதை உறுதி
ப்படுத்துகிறது. இதனால் உணவின் சுவை, தரம் மற்றும் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுகிறீர்கள். இது உங்கள் உணவை நீங்கள் மகிழ்ச்சியுடன் உட்கொள்ள உதவுகிறது. உங்கள் உடலின் பசியும் தெரியவருகிறது. வயிறு நிறைந்த உணர்வையும் கொடுக்கிறது.
தொண்டையில் சிக்குவதை குறைக்கிறது
உங்கள் உணவை நன்றாக சவித்து சுவைக்கும்போது, அது தொண்டையில் சிக்கிக்கொள்வதை தடுக்கிறது. உங்கள் உணவை சிறு துகள்களாக உடைப்பதை உறுதி செய்கிறது. இதை நீங்கள் எளிதாக விழுங்க முடியும் என்பதால் அது தொண்டையில் சிக்கிக்கொண்டு வேறு தொல்லைகளை ஏற்படாமல் தடுக்கிறது.
டாபிக்ஸ்