தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chettinadu Sundal Gravy : சொக்கவைக்கும் செட்டிநாடு கொண்டைக்கடலை குழம்பு! மசாலா அரைத்து செய்வது எப்படி? 2 ரெசிபி!

Chettinadu Sundal Gravy : சொக்கவைக்கும் செட்டிநாடு கொண்டைக்கடலை குழம்பு! மசாலா அரைத்து செய்வது எப்படி? 2 ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Jun 27, 2024 11:38 AM IST

Chettinadu Sundal Gravy : செட்டிநாடு கொண்டைக்கடலை குழம்பு. மசாலா ஃபிரஷ்ஷாக அரைத்து செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Chettinadu Sundal Gravy : சொக்கவைக்கும் செட்டிநாடு கொண்டைக்கடலை குழம்பு! மசாலா அரைத்து செய்வது எப்படி? 2 ரெசிபி!
Chettinadu Sundal Gravy : சொக்கவைக்கும் செட்டிநாடு கொண்டைக்கடலை குழம்பு! மசாலா அரைத்து செய்வது எப்படி? 2 ரெசிபி! (mangani samayal)

கொண்டைக்கடலை மசாலா குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்

மசாலா அரைக்க

கடலை எண்ணெய் – ஒரு ஸ்பூன்

பட்டை – 1

ட்ரெண்டிங் செய்திகள்

வரமல்லி – ஒரு ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

மிளகு – அரை ஸ்பூன்

வரமிளகாய் – 4 -5 (அல்லது உங்கள் கார அளவுக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளவேண்டும்)

பூண்டு – 3

சின்ன வெங்காயம் – 4

தக்காளி – 1 (பெரியது)

தேங்காய் துருவல் – கால் கப்

மஞ்சள் தூள் – சிறிது

உப்பு – சிறிதளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், பட்டை, வரமல்லி, சீரகம், மிளகு, வரமிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, தேங்காய் துருவல், மஞ்சள்தூள், மசாலாவுக்குத் தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

வதக்கிய அனைத்தையும் ஆறவைக்கவேண்டும். பின்னர் அதை மிக்ஸிஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவேண்டும்.

செட்டிநாடு கொண்டை கடலை மசாலா குழம்பு செய்ய தேவையான மசாலா தயார்.

கொண்டைக்கடலை செட்டிநாடு குழம்பு தேவையான பொருட்கள்

கொண்டைக்கடலை – கால் கப்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

சோம்பு – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

சின்ன வெங்காயம் – 8 (பொடியான நறுக்கியது)

புளி – எலுமிச்சை அளவு (சூடான தண்ணீர்ல் ஊறவைத்து கரைத்து, தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும்)

கத்தரிக்காய் – 2 (நறுக்கியது)

உருளைக்கிழங்கு – 2 (நறுக்கியது)

முருங்கைக்காய் – 1 (நறுக்கியது)

மிளகாய்ப் பொடி – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

கருப்பு கொண்டைக்கடலையை ஓரிரவு ஊறுவைத்து, அதை குக்கரில் சேர்த்து 6 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதை தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன், பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும்.

பின்னர் வேகவைத்த கொண்டக்கடலை, நறுக்கிய கத்தரிக்காய், முருங்கைக்காய் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

பின்னர் அரைத்த மசாலா மற்றும் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து, மிளகாய்ப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் விடவேண்டும்.

விசில் இறங்கியவுடன், குழம்பை திறந்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால் சூப்பர் சுவையில் செட்டிநாடு கொண்டைக்கடலை மசாலாக் குழம்பு தயார்.

இதை சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம் மட்டுமே போதுமானது. ஏனெனில், குழம்பிலே சுண்டல் மற்றும் மற்ற காய்கறிகளும் உள்ளது.

இதனால் உங்களுக்கு கூடுதலாக தொட்டுக்கொள்ள ஒரு காய் தேவைப்படாது. இது ஆரோக்கியமானதும் கூட. இதற்கு தேவையான மசாலா ஃபிரஷ்ஷாக அரைத்து செய்யப்படுவதால், இதன் சுவையும் வித்யாசமாக இருக்கும்.

கொண்டைக்கடலை பொதுவாகவே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அவர்கள் விரும்பி சாப்பிடும் ஒன்றாக இது இருக்கும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசித்து சாப்பிடும் ஒரு குழம்பாக இருக்கும்.

டாபிக்ஸ்