Chettinadu Prawn Masala : செட்டிநாடு இறால் மசாலா! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உச்சுக்கொட்ட வைக்கும் சுவை!-chettinadu prawn masala chettinadu prawn masala from kids to adults the ultimate taste - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chettinadu Prawn Masala : செட்டிநாடு இறால் மசாலா! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உச்சுக்கொட்ட வைக்கும் சுவை!

Chettinadu Prawn Masala : செட்டிநாடு இறால் மசாலா! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உச்சுக்கொட்ட வைக்கும் சுவை!

Priyadarshini R HT Tamil
Sep 14, 2024 01:48 PM IST

Chettinadu Prawn Masala : செட்டிநாடு இறால் மசாலா செய்முறை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உச்சுக்கொட்ட வைக்கும் சுவையில் செய்வது எப்படி என்று பாருங்கள்.

Chettinadu Prawn Masala : செட்டிநாடு இறால் மசாலா! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உச்சுக்கொட்ட வைக்கும் சுவை!
Chettinadu Prawn Masala : செட்டிநாடு இறால் மசாலா! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உச்சுக்கொட்ட வைக்கும் சுவை!

தேவையான பொருட்கள்

இறால் – அரை கிலோ (சுத்தம் செய்துகொள்ளவேண்டும்)

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

ஏலக்காய் – 2

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

இஞ்சி-பூண்டு விழுது – 2 ஸ்பூன்

சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகு – 2 ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

வர மிளகாய் – 4

வரமல்லி – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

செய்முறை

இறாலை சுத்தமாக்கிக்கொள்ளவேண்டும். அதற்கான பிரத்யேக முறையில் இறாலை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய், வரமல்லி ஆகிய அனைத்தையும் ட்ரையாக வறுக்கவேண்டும். இவற்றை மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவேண்டும். இதில் மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவேண்டும். இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவேண்டும்.

கடாயில் எண்ணெய் சூடாக்கி, பட்டை, ஏலக்காய், கறிவேப்பிலை தாளிக்க வேண்டும். இதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும். இதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். குறைவான தீயில் நன்றாக அனைத்தையும் மசியும் வரை வதக்கவேண்டும்.

மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிவிட்டு, அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்த்து கலந்து நன்றாக வதக்கவேண்டும்.

சுத்தம் செய்த இறால் மசாலாக்களை உப்பு சேர்த்து வதக்கவேண்டும். குறைவான தீயில் நன்றாக வேகவைக்கவேண்டும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கினால் சூப்பர் சுவையில் செட்டிநாடு இறால் மசாலா தயார். இதை பரோட்டா அல்லது சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும் செட்டிநாடு இறால் மசாலாவை நீங்கள் ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சுவைப்பீர்கள்.

இறாலை சாப்பிடும்போது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அசைவ உணவுகளில் மிகவும் சிறந்தது கடல் உணவுகள்தான். கடல் உணவுகளில் மிகவும் சிறந்தது இறால். இறாலில் மேலும் பல வகை டிஷ்களும் செய்யலாம். இறால் தொக்கு, வடை என பல்வேறு வகையில் செய்து சாப்பிடலாம்.

இதுபோன்ற சுவையான ரெசிபிக்களை மேலும் தெரிந்துகொள்ள நீங்கள் ஹெச்.டி தமிழுடன் இணைந்திருங்கள். தினமும் பயனுள்ள தகவல்களுடன் நல்ல ரெசிபிக்களை தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறோம். இவற்றை படித்து, பயன்படுத்தி பலன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.