தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chettinadu Mushroom Biriyani : செட்டிநாடு மஸ்ரும் பிரியாணி! சூப்பர் சுவையான ரெசிபி இதோ! செஞ்சு சாப்பிட ஹாப்பி!

Chettinadu Mushroom Biriyani : செட்டிநாடு மஸ்ரும் பிரியாணி! சூப்பர் சுவையான ரெசிபி இதோ! செஞ்சு சாப்பிட ஹாப்பி!

Priyadarshini R HT Tamil
Jun 03, 2024 05:54 AM IST

Chettinadu Mushroom Biriyani : செட்டிநாடு மஸ்ரும் பிரியாணி! சூப்பர் சுவையான ரெசிபியை இப்படி செஞ்சு சாப்பிட்டால் மகிழ்ச்சியாக இருக்கும்.

Chettinadu Mushroom Biriyani : செட்டிநாடு மஸ்ரும் பிரியாணி! சூப்பர் சுவையான ரெசிபி இதோ! செஞ்சு சாப்பிட ஹாப்பி!
Chettinadu Mushroom Biriyani : செட்டிநாடு மஸ்ரும் பிரியாணி! சூப்பர் சுவையான ரெசிபி இதோ! செஞ்சு சாப்பிட ஹாப்பி!

ட்ரெண்டிங் செய்திகள்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

சீரகத் தூள் – ஒரு ஸ்பூன்

மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்

மிளகுத் தூள் – அரை ஸ்பூன் 

இஞ்சி - பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

வறுத்த பெரிய வெங்காயம் – அரை கப்

(பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவேண்டும்)

புதினா – கைப்பிடியளவு

கொத்தமல்லித்தடிது – கைப்பிடியளவு

காளான் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – ஒரு கப்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 4

ஏலக்காய் – 1

ஸ்டார் சோம்பு – 1

பிரியாணி இலை – 1

ஜாவித்ரி – சிறிது

சோம்பு – ஒரு ஸ்பூன்

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 3 கீரியது

தக்காளி – 2 நறுக்கியது

தேங்காய்ப்பால் – 2 கப்

செய்முறை -

காளான்களை கழுவி சுத்தம் செய்யவேண்டும். அவற்றை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், மல்லி தூள், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர், வறுத்த வெங்காயம், புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து இந்தக்கலவையை அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

அகலமான கடாய் அல்லது நீங்கள் வழக்கமாக பிரியாணி செய்ய பயன்படுத்தும் கடாயை எடுத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவேண்டும். பின்னர் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரயாணி இலை, ஜாவித்ரி, சோம்பு மற்றும் நறுக்கிய வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.

அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து குழைவாக வெந்தவுடன், ஊறவைத்த காளான்களை சேர்த்து, நன்றாக கலந்து சில நிமிடங்கள் வேகவைக்கவேண்டும். தேவையான அளவு தேங்காய்ப்பால் மற்றும் தண்ஷீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். மசாலாவை சரிபார்த்து, தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக்கொள்ளவேண்டும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து மிதமான தீயில் 20 நிமிடம் வேகவைக்கவேண்டும். பிரியாணியை நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து, ரைத்தா மற்றும் கிரேவியுடன் சூடாக பரிமாறவேண்டும்.

பிரியாணிக்கு தண்ணீர் அளவு

பாஸ்மதி அரிசி என்றால் ஒரு கப் அரிசிக்கு ஒன்னேகால் முதல் ஒன்றரை கப் வரை தண்ணீர் சேர்க்கவேண்டும். சீரக சம்பா அரிசி என்றால், 2 முதல் இரண்டரை கப் வரை தண்ணீர் சேர்க்கவேண்டும். காளான் பிரியாணி செய்வதற்கு சீரக சம்பா அரிசிதான் சிறந்த தேர்வு.

செட்டிநாடு மஸ்ரூம் பிரியாணி

செட்டிநாடு மஸரூம் பிரியாணி தென்னிந்திய உணவுகளுள் ஒன்று. அது மசாலாக்கள் மற்றும் காளானின் ருசியுடன் உங்கள் உணவுக்கு சூப்பர் சுவையைத்தரும்.

இந்த பிரியாணி செய்வதற்கு மசாலாக்கள் சேர்த்த மஸ்ரூமை ஊறவைக்கவேண்டும். பிரியாணி செய்து முடித்த பின்னர் அதை மல்லித்தழைகள் தூவி இறக்கவேண்டும். இதை வெங்காயம் அல்லது வெள்ளரி பச்சடியுடன் பரிமாற சுவைஅள்ளும். இது சைவ உணவுகள் மட்டுமே விரும்பி சாப்பிடுபவர்களுக்கு சிறந்த தேர்வு. இது பிரியாணி மற்றும் காளான் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ்.

WhatsApp channel

டாபிக்ஸ்