Chettinadu Milagai Chutney : தட்டு இட்லியுடன் சாப்பிட சுவை அள்ளும்! செட்டி நாடு மிளகாய் சட்னி! செஞ்சு அசத்த இதோ ரெசிபி!
Chettinadu Milagai Podi : தட்டு இட்லியுடன் சாப்பிட சுவை அள்ளும்! செட்டி நாடு மிளகாய் சட்னி, செஞ்சு அசத்த ரெசிபி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்
வரமிளகாய் – 6
சின்ன வெங்காயம் – ஒரு கைப்படியளவு
பூண்டு – 10 பல்
உப்பு – தேவையான அளவு
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மிளகாயை மட்டும் முதலில் பாதியளவுக்கு வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், சின்ன வெங்காயம், பூண்டு, உப்பு, புளி என அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். இதை வெறும் எண்ணெயிலே குறைவான தீயில் வதக்கிக்கொள்ளவேண்டும்.
அனைத்தையும் ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, போதிய அளவு தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் தாளிப்பு கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும்.
அதை அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து, இட்லி, தட்டு இட்லி, தோசை, ஊத்தப்பம், உப்புமா என டிபஃனுடன் பரிமாற சுவை அள்ளும். இதை தயாரிக்க ஆகும் நேரமும் குறைவுதான்.
தினமும் ஒரே மாதிரி சட்னி செய்து பேரரடிக்காமல் இருக்க இதுபோன்ற செட்டிநாடு மிளகாய் சட்னி சிறிது வித்யாசமான உணர்வைத்தரும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்கள் காரத்தின் அளவுக்கு ஏற்ப மிளகாயின் அளவை அதிகரித்து அல்லது குறைத்துக்கொள்ளவேண்டும். இதை சுலபமாக 15 நிமிடங்களில் செய்து முடித்துவிடலாம். சூப்பர் சுவையான செட்டிநாடு மிளகாய் சட்னியை செய்து அசத்துங்கள்.
செட்டிநாடு சமையல்
தமிழ்நாட்டில் செட்டிநாடு சமையலுக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. இது காரைக்குடி நகரத்தாரின் செய்முறை. செட்டிநாடு என்பது சிவகங்களை மாவட்டத்தில் உள்ள பகுதிகளைக் குறிக்கும்.
செட்டி நாடு உணவுகளைகளில் அதிகளவில் மசாலக்கள் சேர்க்கப்படும். அவை அப்போதே அரைத்து தயாரிக்க்கப்படும் மசாலாக்களாக இருக்கும். முன்னரே தயாரித்த பொடிகளை அதிகம் உணவுகளுக்கு பயன்படுத்தமாட்டார்கள்.
இந்த பகுதியில் வெயிலில் உலர்த்தப்பட்ட, உப்பு சேர்க்க்ப்பட்ட இறைச்சி மற்றும் காய்கறிகளை அதிகம் பயன்படுத்தி உணவுகளை சமைப்பார்கள். ஏனெனில் இப்பகுதியிலி வெயில் அதிகம் காணப்படும்.
இங்கு தயாரிக்கப்படும் உணவுகள் பெரும்பாலும் சாதத்துடனும், அரிசியைப் பயன்படுத்தி செய்யப்படும் இட்லி, தோசை, ஆப்பம், அடை போன்ற உணவுகளுடனும் தொட்டுக்கொள்ள உதவுபவை ஆகும்.
செட்டிநாடு மக்கள் பண்டைய காலத்தில் பர்மாவுடன் வணிகத் தொடர்புகொண்டிருந்தார்கள். அவர்கள் சிவப்பு அரிசி உணவை பர்மாவில் இருந்து கற்றுவந்து அந்த உணவு இன்றும் அப்பகுதியுன் தனிச்சிறப்பும், அடையாளமுமாக விளங்குகிறது.
செட்டிநாடு உணவுகளில் மிக புகழ்பெற்றவையாக, இடியாப்பம், பணியாரம், வெள்ளை பணியாரம், கருப்பட்டி, பணியாரம், பால்பணியாரம், குழிப்பணியாரம், கொழுக்கட்டை, மசாலா பணியாரம், ஆடிக்கூழ், கந்தரப்பம், சீய்யம், கவுனிஅரிசி, மசாலா சீய்யம், மாவுருண்டை, அதிரசம் ஆகியவை உள்ளது. மேலும் பல சைவ, அசைவ மசாலாக்களையும் அவர்கள் செய்கிறார்கள்.
செட்டிநாடு மசாலாவுக்கு பயன்படுத்தும் பொருட்கள்
அன்னாசிப்பூ, கல்பாசி, புளி, மிளகாய், சோம்பு, பட்டை, கிராம், பிரியாணி இலை, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றையே பெரும்பாலாக மசாலாவுக்கு பயன்படுத்துகிறார்கள். இவர்களின் சிறப்பு இவர்கள் இந்த பொருட்களை பயன்படுத்தி, மசாலக்களை உடனுக்குடன் ஃபிரஷ்ஷாக தயாரித்து பயன்படுத்துகிறார்கள்.

டாபிக்ஸ்