Chettinadu Masala Podi : இந்த ஒரு பொடி போதும்! வெஜ், நான் வெஜ், வறுவல், குழம்பு, கிரேவி அனைத்தும் செய்து அசத்தலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chettinadu Masala Podi : இந்த ஒரு பொடி போதும்! வெஜ், நான் வெஜ், வறுவல், குழம்பு, கிரேவி அனைத்தும் செய்து அசத்தலாம்!

Chettinadu Masala Podi : இந்த ஒரு பொடி போதும்! வெஜ், நான் வெஜ், வறுவல், குழம்பு, கிரேவி அனைத்தும் செய்து அசத்தலாம்!

Priyadarshini R HT Tamil
Jan 17, 2024 02:02 PM IST

Chettinadu Masala Podi : இந்த ஒரு பொடி போதும்! வெஜ், நான் வெஜ் வறுவல், குழம்பு, கிரேவி அனைத்தும் செய்து அசத்தலாம்!

Chettinadu Masala Podi : இந்த ஒரு பொடி போதும்! வெஜ், நான் வெஜ், வறுவல், குழம்பு, கிரேவி  அனைத்தும் செய்து அசத்தலாம்!
Chettinadu Masala Podi : இந்த ஒரு பொடி போதும்! வெஜ், நான் வெஜ், வறுவல், குழம்பு, கிரேவி அனைத்தும் செய்து அசத்தலாம்!

தேவையான பொருட்கள்

பட்டை – 15 கிராம்

கிராம்பு – 15 கிராம்

ஏலக்காய் – 15

ஸ்டார் சோம்பு – 15 கிராம்

மராத்தி மொக்கு – 15 கிராம்

ஜாவித்திரி – 15 கிராம்

கல்பாசி – 10 கிராம்

சீரகம் – 15 கிராம்

சோம்பு – 10 கிராம்

கசகசா – 15 கிராம்

மிளகு – 45 கிராம்

மல்லிவிதை – 15 கிராம்

செய்முறை

அடுப்பில் அடிக்கனமான கடாயை சூடாக்கி, அதில் பட்டை, கிராம், ஏலக்காய், மராத்தி மொக்கு, ஸ்டார் சோம்பு, ஜாவித்திரி, கல்பாசி ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் சீரகம், சோம்பு, கசகசா, மிளகு, மல்லிவிதை சேர்த்து அவை பொரிந்து வரும் வரை வறுக்க வேண்டும். பின்னர், இதை நன்றாக ஆற வைக்கவேண்டும்.

கொப்பரை தேங்காய் – 50 கிராம்

வர மிளகாய் – 20-25 (குண்டு மிளகாய், இதைவிட காரம் அதிகம் இருக்கும் என்பதால், அது சேர்த்தால், இதில் பாதியளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்)

இவையிரண்டையும், ஒன்றாக வறத்து, ஏற்கனவே வறுத்து ஆறவைத்துள்ள பொருட்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அனைத்தும் நன்றாக ஆறியவுடன், காய்ந்த மிக்ஸிஜாரில் சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெரிய மிக்ஸிஜாரை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், அப்போதுதான் மசாலா அனைத்தும் மிக்ஸாகி வரும்.

தேங்காயில் எண்ணெய் பதம் இருப்பதால் மசாலாவை ஒரேடியாக அடித்தால், ஈரப்பதத்தில் வரும். எனவே மிக்ஸியை பல்சில் விட்டு கொஞ்சம், கொஞ்சமாக அடித்து பொடியாக்கிக்கொள்ள வேண்டும்.

இதை ஒரு அகலமான பாத்திரத்தில் நன்றாக ஆறவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைக்க வேண்டும்.

இதை வெளியில் வைத்தால் ஒரு மாதத்திற்கு வைத்துக்கொள்ளலாம். ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால், 3 மாதங்கள் வரை வைத்துக்கொள்ளலாம்.

வழக்கமாக மசாலா சேர்த்து வதக்கி இறக்குவதுபோல் செய்யக்கூடாது. காய்கறிகளோ அல்லது அசைவ உணவுகளோ என எது செய்தாலும், அது வெந்தவுடன் சேர்த்து, 2 நிமிடத்தில் இறக்கவேண்டும்.

இந்தப்பொடிய சிறிது கவனத்துன் கையாள வேண்டும். நீண்ட நேரம் அடுப்பில் வைத்துவிட்டால், கசப்பான சுவை ஏற்படும். எனவே அதை தவிர்க்க வேண்டும். இதுபோல் செய்தால் இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.