தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Chettinadu Kuzhipaniyaram Chettinadu Kuzhipaniyaram Can Be Made And Eaten In The Morning And Evening

Chettinadu Kuzhipaniyaram : செட்டிநாடு குழிப்பணியாரம்; காலை, மாலை வேளைகளில் செய்து சாப்பிடலாம்!

Priyadarshini R HT Tamil
Mar 03, 2024 10:42 AM IST

Chettinadu Kuzhipaniyaram : செட்டிநாடு குழிப்பணியாரம்; காலை, மாலை வேளைகளில் செய்து சாப்பிடலாம்!

Chettinadu Kuzhipaniyaram : செட்டிநாடு குழிப்பணியாரம்; காலை, மாலை வேளைகளில் செய்து சாப்பிடலாம்!
Chettinadu Kuzhipaniyaram : செட்டிநாடு குழிப்பணியாரம்; காலை, மாலை வேளைகளில் செய்து சாப்பிடலாம்!

ட்ரெண்டிங் செய்திகள்

உளுத்தம் பருப்பு – கால் கப்

வெந்தயம் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்

கடலை பருப்பு – ஒன்றரை ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

பெருங்காய தூள் – அரை ஸ்பூன்

இஞ்சி – ஒரு துண்டு (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

வெங்காயம் – 1 (நறுக்கியது)

கறிவேப்பிலை – ஒரு கொத்து

துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி இலை நறுக்கியது – கைப்பிடி

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

அரிசியை 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும்.

உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.

3 மணி நேரம் கழித்து, அதிகப்படியான தண்ணீரை வடிகட்டி, ஊறவைத்த அரிசியை பருப்புடன் சேர்த்து சிறிது தண்ணீருடன் மென்மையான மாவாக அரைக்கவேண்டும்.

மாவை ஒரு பெரிய கிண்ணத்திற்கு மாற்றி, சிறிது தண்ணீர் கலந்து குறைந்தது 8 மணி நேரம் புளிக்க வைக்கவேண்டும்.

8 மணி நேரம் கழித்து, ஒரு கடாயை எடுத்து, அதில் எண்ணெய் சேர்க்கவேண்டும். கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் சீரகம் சேர்க்கவேண்டும்.

கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், பெருங்காய தூள், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்க்கவேண்டும்.

அடுத்து கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலக்கவேண்டும்.

கடைசியாக தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

இந்த கலவையை புளித்த மாவுக்கு மாற்றவேண்டும். மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் நன்றாக கலந்து தண்ணீர் சேர்க்கவேண்டும்.

மசாலாவை சரிபார்த்து, மாவை ஒதுக்கி வைக்கவேண்டும்.

பணியார சட்டியை சூடாக்கி, அச்சுகளில் எண்ணெய் தடவவேண்டும்.

பணியார மாவை மெதுவாக அச்சுகளில் ஊற்றி, அனைத்து பணியாரங்களுக்கும் கீழ் பக்கம் முழுவதுமாக பொன்னிறமாக மாறும் வரை சமைக்கவேண்டும்.

மறுபுறம் திருப்பி, அவையும் பொன்னிறமாக மாறும் வரை சமைக்கவேண்டும்.

பணியாரம் இருபுறமும் நன்றாக வெந்ததும், வாணலியில் இருந்து இறக்கி ஒரு பாத்திரத்திற்கு மாற்றவேண்டும்.

சுவையான செட்டிநாடு குழி பணியாரம் உங்களுக்கு விருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் சூடாக பரிமாற தயாராக உள்ளது.

நன்றி – ஹேமா சுப்ரமணியன்.

உங்களிடம் மாவு தயாராக இருந்தால், குழிப்பணியாரத்தை மிக எளிதாக செய்யலாம். இதை காலை உணவாகவும், மாலை நேரத்தில் ஸ்னாக்ஸாகவும் செய்யவேண்டும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. இதை மதிய உணவுக்கு டிபஃன் பாக்ஸிலும் கொடுக்கலாம். 

இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, மற்றும் சாம்பார் போதுமானது. இங்கு கொடுக்கப்பட்டுள்ளது கார பணியாரம். இதிலே வெல்லம் சேர்த்து செய்தால், இனிப்பு பணியாரம் ஆகும். இனிப்பு பணியாரத்துக்கு தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம். அதை மாலை நேரத்தில் ஸ்னாக்ஸாக செய்துகொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்