Chettinadu Idly Podi : ஆச்சி ஸ்டைலில் செட்டிநாடு சுவையில் இட்லிப்பொடி! ஓ இதுதான் ரகசியமா? இதோ ரெசிபி!
Chettinadu Idly Podi : ஆச்சி ஸ்டைலில் செட்டிநாடு சுவையில் இட்லி பொடி! ஓ இதுதான் ரகசியமா? இதோ ரெசிபி!

நாம் பல்வேறு வகையில் இட்லி பொடிகளை செய்திருப்போம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள இட்லிப்பொடியை அதே சுவையில் செய்து பாருங்கள். உங்களுக்கு கட்டாயம் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – ஒரு கப்
உளுந்தம்பருப்பு – ஒரு கப்
பச்சரிசி – 3 டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள் – கால் கப்
வர மிளகாய் – 15
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
பெருங்காயத்தூள் – சிறிது
கஷ்மீரி சில்லிப்பவுடர் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கடாயை சூடாக்கி கடலை பருப்பு, உளுந்து, பச்சரிசி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வெள்ளை எள் என அனைத்து பொட்களையும் தனித்தனியாக சேர்த்து பொன்னிறமாகும் வரையோ அல்லது வாசம் வரும் வரையோ வறுத்து எடுக்கவேண்டும்.
அனைத்தையும் ஒரு தட்டில் வைத்து நன்றாக ஆறவைக்கவேண்டும். பின்னர் காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் கடைசியாக கஷ்மீரி மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக மீண்டும் அரைத்துக்கொள்ளவேண்டும்.
இந்தப்பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
இட்லி, தோசைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவைஅள்ளும். இந்தப்பொடி செட்டிநாடு பகுதிகளில் ஆச்சி அரைக்கும் இட்லி பொடியாகும். இதில் உள்ள ரகசியமான உட்பொருளே கஷ்மீரி மிளகாய் தூள் தான்.
நாம் மீண்டும் கஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்போம், அது நிறத்தை மட்டும்தான் கொடுக்கும் காரம் இருக்காது என்றாலும், வர மிளகாயை சேர்க்கும்போது நீங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
இந்தப்பொடி காரைக்குடி, செட்டிநாடு பகுதிகளில் அதிகம் செய்யப்படும் முறை.
நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய கிச்சன் டிப்ஸ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள்.
சூடான பொருட்கள்
சூடான பொருட்களை மிக்ஸியில் சேர்த்து அரைக்கக்கூடாது. அவ்வாறு சூடான பொட்களை மிக்ஸியில் சேர்த்து அரைக்கும்போது, அது வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு சூடான பொருட்களை அரைக்க வேண்டும் என்றால், அவற்றை ஆறவைத்து அரையுங்கள். சூடான பொருட்களில் உள்ள ஆவி செல்வதற்கு வழி கொடுத்து அரையுங்கள், அரை ஜார் மட்டுமே நிரப்பி அரைத்து எடுக்க வேண்டும்.
கார்பனேட்டர் பானங்கள்
சோடா போன்ற கார்பனேட்டட் பானங்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கும்போது, அது ஜார் வெடிப்பதற்கு வழிவகுக்கிறது.
ஐஸ் கட்டிகள்
உங்களுக்கு ஐஸ் கட்டிகளை அரைத்து எடுக்க வேண்டுமென்றால், மொத்தமாக சேர்த்து நீண்ட நேரங்கள் ஓட விட்டால், மிக்ஸியின் மோட்டார் சேதம் அடைந்துவிடும். ஐஸ் கிர்ஷர் வைத்து ஐஸ் கட்டிகளை உடைப்பது நல்லது. அதுவே ஐஸ் கட்டிகளை உடைக்க சரியான வழி
ட்ரை இன்கிரியன்ட்கள்
பருப்பு போன்றவற்றை நேரடியாக சேர்த்து அரைக்கக்கூடாது. வறுத்துதான் அரைக்க வேண்டும். சர்க்கரை போன்றவற்றை அரைத்து எடுக்கும்போது, அதன் துகள்கள் மிக்ஸியின் ஓரங்களில் ஒட்டிக்கொள்ளும். இதனால் அவற்றை சுத்தம் செய்வது கடினம். அதற்கு ஃபுட் ப்ராசசர்ஸ்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
முழு மசாலாக்கள்
பட்டை போன்ற முழு மசாலக்களை நேரடியாக மிக்ஸியில் சேர்த்து அரைக்கும்போது அது ப்ளேட்கள் அல்லது ஜாரில் சேர்த்து சேதத்தை ஏற்படுத்தும். மசாலாக்கள் அரைக்கும் கிரைண்டரில் மசாலாவை அரைப்பது நல்லது. இல்லாவிட்டால் கையால் இடிக்கும் அல்லது அரைக்கும் அம்மி, ஆட்டுக்கல்லில் வைத்து இடித்துக்கொள்ளவேண்டும்.

டாபிக்ஸ்