Chettinadu fish Fry Masala : செட்டிநாடு மீன் மசாலாப் பொடி – வறுக்க பயன்படுத்தி பாருங்க சுவை அள்ளும்!
Chettinadu fish Podi : செட்டிநாடு மீன் மசாலாப் பொடி, வறுக்க பயன்படுத்தி பாருங்க சுவை அள்ளும்.
அசைவ உணவுகளுள் தலை சிறந்த உணவு மீன் என்று சொல்லலாம். அசைவ உணவுகளை உண்ணாதவர்களுக்கு கூட கடல் உணவுகள் பரிந்துரைக்கப்படுகிறது. இறைச்சி உண்ணாத சிலர் கடல் உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
கடல் உணவில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுவது மீன். மீனை பிடிக்காதவர்களே இல்லை எனுமளவுக்கு மக்கள் மீன் பிரியர்களாக இருப்பார்கள்.
மீன் செய்யும்போது குழம்பு, வருவல், புட்டு என பல்வேறு உணவுகளை செய்ய முடியும் என்றாலும், வறுவலே அதிக நபர்களால் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக உள்ளது.
மீன் வறுவல் சுவை மிகுந்ததாக இருப்பதில் பெரும் பங்கு வகிப்பது அதற்கு செய்யப்படும் பொடிதான். மீன் வறுவல் பொடி செய்ய கற்றுக்கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு நல்ல மீன் வறுவல் கிடைக்கும். அந்த மீன் வறுவல் பொடி செய்து வைத்துக்கொள்வது எப்படி என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மீன் மசாலா தூள் செய்ய தேவையான பொருட்கள்
சீரகம் - 2 ஸ்பூன்
சோம்பு - 2 ஸ்பூன்
கொத்தமல்லி விதை – ஒரு ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
கிராம்பு - 10
சிவப்பு மிளகாய் - 12
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
வெங்காயம் & பூண்டு பேஸ்ட்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 4 பற்கள்
செய்முறை -
முதலில் கடாயில் சீரகம், சோம்பு, கொத்தமல்லி விதை, மிளகு, கிராம்பு, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பொன்னிறமாகும் வரை வறுத்த பின் அடுப்பை அணைத்துவிட்டு, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் ஆகிவற்றைய கலந்துகொள்ளவேண்டும்.
அவற்றை சிறிது நேரம் ஆறவிட்ட பின்னர் காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீரின்றி பொடித்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த செட்டிநாடு மீன் மசாலா தூளை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துவிடவேண்டும்.
மீன் வருவல் செய்யும்போது, சின்ன வெங்காயம், பூண்டு பேஸ்ட் செய்து இந்த பொடியையும் கலந்து மீனில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து வறுத்துக்கொள்ளவேண்டும். அப்போது மீன் சுவை நிறைந்ததாக இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.