ஃபிரஷ் மசாலா வறுத்து அரைத்து செய்யும் செட்டிநாடு சன்னா மசாலா; குக்கரில் செய்து முடித்துவிடலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஃபிரஷ் மசாலா வறுத்து அரைத்து செய்யும் செட்டிநாடு சன்னா மசாலா; குக்கரில் செய்து முடித்துவிடலாம்!

ஃபிரஷ் மசாலா வறுத்து அரைத்து செய்யும் செட்டிநாடு சன்னா மசாலா; குக்கரில் செய்து முடித்துவிடலாம்!

Priyadarshini R HT Tamil
Nov 11, 2024 01:30 PM IST

ஃபிரஷ் மசாலா வறுத்து அரைத்து செய்யும் செட்டிநாடு சன்னா மசாலா, குக்கரில் செய்து முடித்துவிடலாம். சுவையும் சூப்பராக இருக்கும்.

ஃபிரஷ் மசாலா வறுத்து அரைத்து செய்யும் செட்டிநாடு சன்னா மசாலா; குக்கரில் செய்து முடித்துவிடலாம்!
ஃபிரஷ் மசாலா வறுத்து அரைத்து செய்யும் செட்டிநாடு சன்னா மசாலா; குக்கரில் செய்து முடித்துவிடலாம்!

தேவையான பொருட்கள்

வேக வைக்க

சன்னா (வெள்ளை கொண்டைக்கடலை) – ஒரு கப்

(ஓரிரவு ஊறவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)

மிளகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

கிராம்பு – 1

பட்டை – 1

நல்லெண்ணெய் – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 2

சோம்பு – ஒரு ஸ்பூன்

கசகசா – அரை ஸ்பூன்

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

மல்லி விதைகள் – ஒரு டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 6

பூண்டு – 4

கறிவேப்பிலை – ஒரு கொத்து

இஞ்சி – அரை இன்ச்

தேங்காய் துருவல் – அரை கப்

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 2

சோம்பு – கால் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 (முழுதாக)

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

சாம்பார் தூள் – ஒரு ஸ்பூன்

கஷ்மீரி மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு

மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை

முதலில் குக்கரில் ஊறவைத்த சன்னா, பட்டை, கிராம்பு, மிளகு, சீரகம் மற்றும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு, இறக்கி தனியாக எடுத்து வைத்துவிடவேண்டும்.

இந்த செட்டிநாடு சன்னா மசாலாவுக்கு சிறப்பான சுவை கொடுப்பதே வறுத்து அரைக்கும் மசாலாதான். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, மிளகு, சீரகம், மல்லி விதைகள், சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, இஞ்சி, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். வதக்கிய அனைத்தையும் ஆறவைட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். அடுத்து தக்காளி சேர்க்கவேண்டும். தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சாம்பார் பொடி என அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவேண்டும்.

அடுத்து அரைத்த மசாலாவிழுது மற்றும் வேகவைத்து எடுத்துவைத்துள்ள சன்னாவை தண்ணீரோடு சேர்த்து கலந்து குக்கரை மூடி மீண்டும் 4 விசில் விட்டு எடுத்தால் சூப்பர் சுவையான செட்டிநாடு சன்னா மசாலா தயார். மல்லித்தழை தூவி பரிமாறினால் சூப்பர் சுவையில் அசத்தும். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் உச்சுக்கொட்டி சாப்பிடுவார்கள்.

இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, ஆப்பம், இடியாப்பம், உப்புமா, பொங்கல், ரொட்டி, ஃபுல்கா, பரோட்டா, நான் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். சாதம், வெரைட்டி சாதம், பிரயாணிக்களுக்கும் ஏற்ற ஜோடிதான் இந்த செட்டிநாடு சன்னா மசாலா.

இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.