செட்டிநாடு ஸ்பெஷல் - சீனிப்பணியாரம் செய்யலாமா? இந்த தீபாவளிக்கு ஒரு புது ஸ்வீட்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  செட்டிநாடு ஸ்பெஷல் - சீனிப்பணியாரம் செய்யலாமா? இந்த தீபாவளிக்கு ஒரு புது ஸ்வீட்!

செட்டிநாடு ஸ்பெஷல் - சீனிப்பணியாரம் செய்யலாமா? இந்த தீபாவளிக்கு ஒரு புது ஸ்வீட்!

Priyadarshini R HT Tamil
Updated Oct 20, 2024 02:06 PM IST

செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிபி. சீனிப்பணியாரம் செய்யலாமா? இந்த தீபாவளிக்கு ஒரு புது ஸ்வீட். இதை செய்வது எப்படி என்று பாருங்கள்.

செட்டிநாடு ஸ்பெஷல் - சீனிப்பணியாரம் செய்யலாமா? இந்த தீபாவளிக்கு ஒரு புது ஸ்வீட்!
செட்டிநாடு ஸ்பெஷல் - சீனிப்பணியாரம் செய்யலாமா? இந்த தீபாவளிக்கு ஒரு புது ஸ்வீட்!

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கப்

ஜவ்வரிசி – 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய் – கால் கப்

சர்க்கரை – அரை கப்

ஏலக்காய் – 2

உப்பு – சிறிதளவு

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் ஜவ்வரிசி இரண்டையும் 2 முதல் 3 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.

பின்னர் நன்றாக கழுவிவிட்டு, தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு, கால் கப் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் அனைத்தும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை சேர்த்தால் மாவுக்கலவை தண்ணீராகிவிடும் எனவே தண்ணீர் சேர்க்கக்கூடாது. சரியான பதத்தை பார்த்துக்கொண்டுதான் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

இந்த மாவை மற்றொரு பாத்திரத்தில் சேர்த்து, தோசை மாவைவிட சிறிதளவு கெட்டியாக இருக்க வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, கரண்டியில் மோண்டு ஊற்றவேண்டும். அது தானாகவே உப்பி வரும் அப்போது, அதன் மேல் எண்ணெயை ஊற்றி நன்றாக இருபுறமும் வெந்தவுடன் எடுக்கவேண்டும்.

திருப்பிப்போட்டு இரண்டு புறமும் நன்றாக வேகவேண்டும். ஓரங்களில் மொறு மொறு வென்றும், நடுவில் மிருதுவாகவும் பணியாரம் இருக்கும்.

குறிப்புகள்

பணியாரம் முழுவதும் எண்ணெயில் மூழ்க வேண்டும். எனவே தேவையான அளவு எண்ணெய் ஊற்றவேண்டும். அது நன்றாக முழுகினால்தான் உப்பி வரும்.

சிறிய கடாயை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில் ஒரு நேரத்தில் ஒரு பணியாரம்தான் செய்ய முடியும். ஒவ்வொன்றாக செய்தால்தான் நன்றாக இருக்கும்.

மாவு தண்ணீராக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் பணியாரம் நன்றாக இருக்காது. மாவு பதம் மிகவும் அவசியம் என்பதால் தண்ணீர் சேர்ப்பதில் அதிக கவனம் தேவை.

நீங்கள் வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டுச்சர்க்கரை அல்லது பிரவுன் சர்க்கரை, கரும்புச்சர்க்கரை என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி செய்யலாம். சர்க்கரைக்கு ஏற்ப சுவை மட்டும் மாறும்.

வெல்லமும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவற்றை பயன்படுத்தும்போது சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும்.

இந்த சீனிபணியாரம்த்தை செய்து வைத்தீர்கள் என்றால், உங்கள் வீட்டில் உடனே காலியாகிவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பணியாரமாக இந்த சீனிப்பணியாரம் இருக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், அரிய ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை தேர்ந்தெடுத்து ஹெச்.டி தமிழ் உங்களுக்காக வழங்கிவருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தீபாவளி சிறப்பு இனிப்புகள் உள்ளிட்ட தொடர்பான விஷயங்களை கொடுக்கிறோம். எனவே இதுபோன்ற தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள். இந்த ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்.