சீஸ் பராத்தா : சீஸ் பராத்தா; குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்; ஒருமுறை ருசித்தால் மீண்டும் கேட்பீர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சீஸ் பராத்தா : சீஸ் பராத்தா; குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்; ஒருமுறை ருசித்தால் மீண்டும் கேட்பீர்கள்!

சீஸ் பராத்தா : சீஸ் பராத்தா; குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்; ஒருமுறை ருசித்தால் மீண்டும் கேட்பீர்கள்!

Priyadarshini R HT Tamil
Published Jun 02, 2025 12:00 PM IST

சீஸ் பராத்தா : அவர்களுக்க மிகவும் பிடிக்கும். இதை ஒருமுறை செய்து கொடுத்துவிட்டால் போதும், அடிக்கடி லன்ச் பாக்ஸ்க்கு இதுதான் வேண்டும் என்று கேட்டு அடம் பிடிப்பார்கள். இந்த சீஸ் பராத்தாக்களை செய்வது எப்படி என்று பாருங்கள்.

சீஸ் பராத்தா : சீஸ் பராத்தா; குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்; ஒருமுறை ருசித்தால் மீண்டும் கேட்பீர்கள்!
சீஸ் பராத்தா : சீஸ் பராத்தா; குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்; ஒருமுறை ருசித்தால் மீண்டும் கேட்பீர்கள்!

தேவையான பொருட்கள்

• கோதுமை மாவு – ஒரு கப்

• உப்பு – தேவையான அளவு

• ஸ்டஃபிங் செய்ய

• பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

• கேப்ஸிகம் – 1 (பொடியாக நறுக்கியது)

• எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• கரம் மசாலா – ஒரு ஸ்பூன்

• சாட் மசாலா – அரை ஸ்பூன்

• மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

• மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

• சீஸ் – 50 கிராம் (துருவியது)

• வெண்ணெய் – சிறிதளவு (தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்)

செய்முறை

1. கோதுமை மாவில் சிறிது உப்புத் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

2. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். அடுத்து கேப்ஸிகம், உப்பு, கரம் மசாலாத் தூள், சாட் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

3. அனைத்தும் சுருள வதங்கியவுடன், அடுத்து மல்லித்தழை தூவி இறக்கவேண்டும். இதை ஆறவைத்துவிடவேண்டும்.

4. சீஸை துருவிக்கொள்ளவேண்டும். அதில் வதக்கி, ஆறிய மசாலாக்களை சேர்த்துக்கொள்ளவேண்டும். கையாலேயே நன்றாக பிசைந்துவிடவேண்டும்.

5. மாவை எடுத்து, சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்துக்கொள்ளவேண்டும். இந்த மசாலாவை உருட்டி நடுவில் வைத்து, மாவை சுருட்டி, மீண்டும் சிறிது ட்ரையான கேதுமை மாவு சேர்த்து நன்றாக தேய்த்துக்கொள்ளவேண்டும். தேய்க்கும்போது கவனம் தேவை. ஸ்டஃபிங் வெளியே வந்துவிடக்கூடாது. அதே நேரத்தில் பராத்தாவும் நல்ல மெல்லிசாக இருக்கவேண்டும்.

6. தோசைக்கல்லை சூடாக்கி, அதில் சேர்த்து இருபுறமும், வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி வாட்டி எடுத்துக்கொள்ளவேண்டும். சூப்பர் சுவையான பராத்தா தயார்.

குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்துப் பாருங்கள், அவர்கள் மீண்டும், மீண்டும் இதுதான் வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். அத்தனை சுவையானது இந்த சீஸ் பராத்தா. இதற்கு கெட்ச் அப் கூட போதுமானது. சட்னி, கிரேவி, ரைத்தாவும் செய்து கொள்ளலாம். ஒருமுறை ருசித்தால் மீண்டும் சாப்பிடவேண்டும் என்று நீங்களே நினைப்பீர்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்த சீஸ் பராத்தாக்கள் மிகவும் பிடிக்கும்.